𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀

𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀 social media news

11/05/2025

நீதி கிடைத்தே ஆகவேண்டும்..

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்..

கண்துடைப்பு நடவடிக்கைகள் தேவையில்லை..

ஏனையவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்..

இந்தப் பிள்ளையின் இழப்பு இறுதி இழப்பாக இருக்க வேண்டும்..

மாணவர்கள் தைரியமாக வெளியில் செல்ல வேண்டும்..

அனைவருக்காகவும் பிரார்த்தித்தவனாக
😥😥🤲🤲🤲🤲🤲

05/05/2025
26/04/2025

தேர்தலும் சில சுயநலத்திற்காக போட்டியிடும் வேட்பாளர்களும்..

மக்கள் குடும்பம் பார்க்காமல், கட்சி வேறுபாடுகள் பார்க்காமல், சிறந்த தலைவர்களை உங்கள் ஊர்த் தலைமைகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

𝐄𝐢𝐝 𝐦𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙✨ Eid Mubarak! ✨🌙"Taqabbal Allahu minna wa minkum" (تقبل الله منا ومنكم) 🤲💖May Allah accept our fasting and ...
31/03/2025

𝐄𝐢𝐝 𝐦𝐮𝐛𝐚𝐫𝐚𝐤

🌙✨ Eid Mubarak! ✨🌙

"Taqabbal Allahu minna wa minkum" (تقبل الله منا ومنكم) 🤲💖
May Allah accept our fasting and prayers, grant us His mercy and forgiveness, and bless us with peace and prosperity.

Wishing you a month filled with faith, joy, and countless blessings. May this Ramadan bring you closer to Allah and open doors of success and happiness. ✨🌙✨🌙
#2025

அனைத்து... உறவுகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..❤️❤️🤲

வறுமை நிரந்தரம் கிடையாது, வாழ்க்கை எந்த நொடியிலும் மாறலாம்...🤲🤲🤲

நாம் அனுபவிக்கும் துன்பங்களும், சோதனைகளும், இறைவன் எம்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்பதில் உறுதிகொள்வோம்..🤲🤲🤲

அடுத்த பெருநாளைக்கு, இருப்போமா என்று தெரியாது, இறந்த காலத்தில் இழந்த அத்தனை விடயங்களையும் எதிர்காலத்தில் இறைவனுடைய நாட்டம் இருந்தால் பெற்றுக்கொள்ள முடியு‌ம், ஆனால்' கவலையோடு கழித்த விசேட தினங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது..🤲🤲

எனவே எம்மைவிட வசதியானவர்களை நினைத்து கவலைப்படாமல், இன்றும் எமது இதயம் துடிப்பதை நினைத்து சந்தோசப்பட்டு, உள்ளதைக்கொண்டு திருப்தி அடைந்து, உறவுகளோடும், நண்பர்களோடும், எம்மைவிட வசதியில் குறைந்த தற்காலிக ஏழைகளோடும், உணவுகளை பகிர்ந்து உண்டு இந்தப் பெருநாளைக் கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️❤️🤲🤲🤲🤲


29/03/2025

கள்ளனுகளே.....!

27/03/2025

அன்றும் இன்றும் அதே நிலை...

இறைவனுக்காக சிந்தியுங்கள்...

எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
❤️❤️🤲🤲🤲

14/02/2025

காதலர்தின வருத்தம்....

16/01/2025

முடிந்துவிட்டது..

காரணம் என்ன..
தயவு செய்து முழுமையாக் கேளுங்கள்

எங்களின் வசதிக்கு ஏற்ப தந்தையில்லாத பிள்ளைகளை முன்னுரிமைப்படுத்தி தெரிவு செய்து உதவ ஆரம்பித்ததோடு ..

முன்னர் குறிப்பிட்டவாறு அதிகளவிலான மக்கள் தொடர்பு கொண்டதால் , தெரிவை இத்தோடு முடித்துக்கொள்கின்றோம்..

தயவு செய்து ஒரு நபர் 100 தரம் அழைப்பதை நிறுத்துங்கள்...

தெரிவு முடிந்துவிட்டது..

எங்களால் ஆயிரக்கணக்கான மக்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போனாலும் பல குடும்பங்களுக்கு சிறு தொகைகளின் மூலம் தற்காலிகமான சந்தோசத்தை கொடுத்திருக்கின்றோம்...
அதை இறைவன் நிரந்தரமான சந்தோசமாக்க பிரார்த்தித்தவனாக

உதவி பெற்றவர்கள் எனக்காகவும், எனது சகோதரர் அனீபா முஹம்மட் உவைஸ் அவர்களுக்காகவும் குடும்பத்தார் மற்றும் ஏனைய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்

இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பாப்பானாக❤️❤️🤲🤲🤲🤲🤲

Alhamdulillah ....


12/01/2025

https://www.facebook.com/share/v/15jhswcBfF/

இந்த வீடியோ, வாட்ஸ் ஆப் ஊடாகப் பகிரப்பட்டு இறைவனின் உதவியோடு 100 மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது, இப்போது முகநூலில் பகிரப்படுகின்றது, இறைவன் நாடியதை யாரும் தடுக்க முடியாது....🤲🤲

உண்மையில் கஷ்டத்தில் இருப்பவர்கள், அதாவது பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் மட்டும்.. உங்களின் பிள்ளைகளின் கல்விக்காக

அதிகமான சொந்தங்கள்.. இனங்காணப்பட்டால் காலம் நீடிக்கப்படாது.

எங்களால் உதவி பெற்றவர்கள் பெற இருப்பவர்கள் தயவு செய்து என்னையும் எனது சகோதர் ஹனீபா உவைஸ் மற்றும் எங்கள் தாய் தந்தையினரையும் உங்களின் பெறுமதியான பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இறைவன் நம் அனைவரையும்
பாதுகாப்பாப்பானாக❤️❤️🤲🤲🤲🤲🤲🤝🤝

03/01/2025

#சிலருக்காக மட்டும் இந்தப் பதிவு..

#வாழ்த்துவது அவ்வளவு பெரிய தவறா?
மனிதர்களின் உள்ளத்தை அறிந்தவன் எம்மைப் படைத்த ஏக வல்ல இறைவன் மட்டுமே..

மனிதர்களாகிய எம்மால் சக மனிதர்களின் உள்ளத்தை மதிப்பிடவோ, ஈமானை இடை போடவோ முடியாது.

அனைவருக்காகவும் பிரார்த்தித்தவனாக 🤲🤲🤲

31/12/2024

#2025
#வாழ்த்துக்கள்...

வருடம் ஒவ்வொன்றாகப் போகின்றது..
மரண‌ம் எம்மை நெருங்கிக் கொண்டு வருகின்றது...

#சுய_ஒழுக்கமே தவறுகள் நடைபெறாமால் இருப்பதற்கான வழிகள்.💐

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர், பண்ணவும் நினைக்காதீர்.

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்.

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள். செலவு செய்தபின் Tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள்.

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்). அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! (None of your business). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள்.
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ, பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

10. நீங்கள் ஓட்டுனராகவோ அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc) இருந்தால் கஸ்டமரின் Personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள்.
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சமயம் என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

12. நீங்கள் Guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா' என்று கடுப்பேற்றாதீர்கள்.

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய Opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப Shy டைப்பா? வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் etc).

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்.
(No one likes advices).

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள்.
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்ட்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ? என்று கேட்காதீர்கள். எங்க ஏரியாவில் கம்மி ரேட் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
'வீடு நல்லா இருக்கு கங்கிராட்ஸ்' என்று முதலில் சொல்லுங்கள்.

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள்.
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it.

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் Designation ஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம்.
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.
(Unless they are your spouse / lover)
நீங்கள் Guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள்.
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது Offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ, வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

23. பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி Comment செய்யாதீர்கள்.
(என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல).

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

26. மற்றவரின் Taste / Preference களைக் குறை சொல்லாதீர்கள்.
(இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!).

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்.

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

#நாகரிகங்கள்

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்...❤️❤️🤲🤲🤝🤝

ஒரு நபரின் அருமையான சிந்திக்க வைக்கின்றன வரிகள்..

அனைவருக்காகவும் பிரார்த்தித்தவனாக 🤲🤲🤝🤝🤝🤝❤️❤️❤️


Address

Colombo

Telephone

+94740031919

Alerts

Be the first to know and let us send you an email when 𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share