SamMedia

SamMedia Stream the best of Sri Lankan cinema on TSFlix. Movies, series, and more—all in one place. Download and start watching today!

08/09/2026

මාලිමාවේ බුලත්සිංහල රැලියට ජනපති එද්දි ලාල් නොපෙනී ගිය හැටි

ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்திZee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக...
01/09/2026

ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்தி

Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சாமந்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமந்தி, ராஜா-ராணி போட்டோவை பார்த்து வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

மறுபக்கம் மருதுவும் இசக்கியும் கெமிக்கல் ஃபேக்டரி தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் நேரடியாக அந்த ஃபேக்டரிக்கே சென்று விசாரிக்க முயற்சி செய்கிறார்கள். அங்கும் தகவல் கொடுக்க மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை மிரட்டி சிசிடிவி காட்சிகளை பார்த்த மருதுவுக்கு முக்கியமான ஆதாரம் சிக்குகிறது.

அந்த காட்சிகளில் காட்டு ராஜா தான் கெமிக்கல் வாங்கிச் சென்றது தெரிய வர, உடனே இந்த விஷயத்தை சாமந்தியிடம் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டு சந்தோஷப்படும் சாமந்தி, "புதுசா வந்திருக்கும் இன்ஸ்பெக்டர்கிட்ட இந்த ஆதாரத்தை கொடுத்தா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்" என்று கூறுகிறார்.

இதே நேரத்தில் உடல்நலக்குறைவால் பார்வதி சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருக்கிறார். சாமந்தி எவ்வளவு சொல்லியும் அவர் சாப்பிட மறுக்கிறார். அப்போது அங்கு வரும் அர்ஜூன், பார்வதியை உட்கார வைத்து அவருக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி செய்கிறான்.

இதையெல்லாம் பார்த்த அரசி, ஆவேசமாக "அர்ஜூன்!" என்று சத்தம் போடுகிறார்.

இதனால் வீட்டில் அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

**மருதுவின் கையில் சிக்கிய ஆதாரம் காட்டு ராஜாவை சிக்க வைக்குமா? அரசியின் கோபம் அர்ஜூனை என்ன செய்யும்? அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை இன்றைய சாமந்தி எபிசோடில் காணலாம்.**

'சமைரா' அல்லது 'சமராஜ்'.. சமந்தாவின் குழந்தை பெயர் பரிந்துரைத்த ரசிகர்..நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிறக்கப்போகும் க...
01/09/2026

'சமைரா' அல்லது 'சமராஜ்'.. சமந்தாவின் குழந்தை பெயர் பரிந்துரைத்த ரசிகர்..

நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, இன்று பான்-இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வசூல் செய்தது.

'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் சமந்தா. இதனால், சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துள்ளார். இருப்பினும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.

அண்மையில் கூட, கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும், தாய்மை பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருப்பதாகவும் சமந்தா நெகிழ்ச்சியாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சமந்தா "குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததை விட மிகவும் கடினமாக உள்ளது; நல்ல பெயர்களை பரிந்துரையுங்கள்" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து மற்றொரு ரசிகர், "பெண் குழந்தையாக இருந்தால், 'சமைரா' (Samaira) அல்லது ஆண் குழந்தையாக இருந்தால் 'சமராஜ்' (Samaraj) என்று வைக்கலாமே? சாம் (Sam) மற்றும் ராஜ் (Raj) ஆகிய இரு பெயர்களுடன் சரியாக பொருந்தும் பெயர் இது" என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, " 'சமராஜ்' (Samraj) என்பது நம்மை பற்றியே அதிகம் பெருமை பேசிக்கொள்வது போல் இல்லையா?" என பதிவிட்டார். ரசிகரின் இந்த பதிவுக்கு சமந்தா பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

25/08/2026
25/08/2026

Address

Colombo
Colombo
13000

Alerts

Be the first to know and let us send you an email when SamMedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share