MR Media Vision

MR Media Vision சமூக ஊடகங்களின் முதன்மை செய்திப்பார்வை

🔴இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால ந...
03/06/2025

🔴இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார்.

இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
MR Media Vision

*ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை*- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
31/05/2025

*ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை*
- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

29/05/2025

🔴 #பாணந்துறையில் #துப்பாக்கிச்சூடு: #வாகன #உதிரிப்பாக #விற்பனை #நிலைய #உரிமையாளர் #காயம்

பாணந்துறை தெற்கு வேக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக வியாழக்கிழமை (29) இந்தத் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேக்கட பிரதேசத்தில் உள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது காயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயதுடைய மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அண்மைய நாட்களாக மாலமுல்ல மற்றும் மதுபிட்டிய பகுதிகளில் இரு பிரபல போதைப்பொருள் கும்பல்களுக்க இடையே போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் அடிக்கடி மோதல் இடம்பெற்று வருவதாகவும் இதன் ஒருபகுதியாக இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
MR Media Vision

🔴கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு'    கருத்திட்டத்திற்கு அனுமதிஇரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூ...
27/05/2025

🔴கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு'
கருத்திட்டத்திற்கு அனுமதி
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 'கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு' (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
MR Media Vision

25/05/2025

ஹக்கீம் vs முஷாரப் இணையபோகிறார்களா தெளிவு படுத்துகிறார் முஷாரப்

ஞானசார எனக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை...பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்...எஸ் ஜே...
24/05/2025

ஞானசார எனக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை...

பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்...

எஸ் ஜே புஹாது

ஞானசாரருக்கு பிழையான தகவல்களை வழங்குகிறார்கள், எனக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார்

இந்த நாட்டில் இனவாத கருத்துக்களை பரப்பி வரும் அடிப்படை வாதியான ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்,

திஹாரிக்கு குடிவந்து தற்போது 10 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் அடிப்படைவாதிகளுக்காக கதைத்தவர்கள் அல்ல. மாறாக இந்நாட்டின் அமைதிக்காக கதைத்தவர்கள்.

எங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள், அன்று நாட்டில் தீ மூட்டும்போது, நாம் நாடு பூராகவும்சென்று தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட்டோம்
என குறிப்பிட்டுள்ளார்

🔴 #விரைவில்  #மாகாண  #சபைத்தேர்தல்   #நிசாம்காரியப்பருக்கு  #அரசு  #பதில்நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல...
23/05/2025

🔴 #விரைவில் #மாகாண #சபைத்தேர்தல் #நிசாம்காரியப்பருக்கு #அரசு #பதில்

நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல் இவ்வருடத்திற்குள் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதைய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கேற்றவாறு தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

கடந்து அரசாங்கம் கவனத்திலெடுக்காததால் அவை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபைத்தேர்தல் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி இவ்வருடத்திற்குள் நடைபெறுமா?, அதற்கான சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? எவ்வாறான நடவடிக்கை?, நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் என்ன காரணம்? என்ற தோரணையில் பொது நிர்வாகம் மற்றும் உளளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரிடம் இன்று (23) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் கேள்வி தொடுத்திருந்தார்.

குறித்த கேள்விகளுக்கு விடயத்திற்குப் பொறுப்பான பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சர் தாமதமின்றி மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும். உரிய ஏற்பாடுகள் எடுக்கப்படுவதாக எனப்பதிலளித்தார்.
MR Media Vision

23/05/2025

16 காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள்

🔴முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபா தினத்தில் விடுமுறைமுதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவனை ஆரம்பிக்கப்படவுள...
23/05/2025

🔴முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபா தினத்தில் விடுமுறை

முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26,27 ஆம் திகதிகள் சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைக்கான விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் மேஜர் டி.நசுமுதீன் அறிவித்துள்ளார்.

இதன்படி ஹஜ் பெருநாளுக்கு முந்திய தினமான 6ஆம் திகதியும் (அரபா தினம்) 9ஆம் திகதியும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26, 27 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் வழமைப்போல நடைபெறும்

🔴 #வைத்தியசாலையில்  #நபர்  #ஒருவர்  #தற்கொலைபொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்த...
22/05/2025

🔴 #வைத்தியசாலையில் #நபர் #ஒருவர் #தற்கொலை

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
MR Media Vision

21/05/2025

🔴நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை – இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்ப்பு*

நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (21) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது:

அரசாங்கப் பாடசாலைகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 4,240 சிங்கள மொழி ஆசிரியர் வெற்றிடங்களும், 2,827 தமிழ் மொழி ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 11,274 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 6,121 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன.

மேல் மாகாணத்தில் மட்டும், அரசாங்கப் பாடசாலைகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1310 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் 302 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 1325 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 397 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன.

கல்வி அமைச்சில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் போது பரீட்சை முறை மூலம் நிரப்ப அரசாங்க சேவை ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் சேர்ப்பது தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு, ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தற்போதுள்ள வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது நிரப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
MR Media Vision

🔴மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை உலக சாதனைமட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை உலக சாதனை மட்டக்களப்பு கொம்மாந்துறைய...
19/05/2025

🔴மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை உலக சாதனை

மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை உலக சாதனை
மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை (மே 17, 2025) மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் நடைபெற்றது. சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டு மாநகரசபை ஆணையாளர் நா. தனஞ்சயன் கலந்துகொண்டார். மேலும், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் க. சிவயேஸ்வரன், கல்குடா ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிறஞ்சன், மற்றும் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலைநகரப் பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமாகக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்தச் சாதனையைப் புரிந்த குழந்தைக்கு பதக்கங்கள், வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அதிதிகள் கௌரவித்தன
MR Media Vision

Address

Kalmunai

Telephone

+94752151610

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Media Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR Media Vision:

Share