Arasan Srilanka

  • Home
  • Arasan Srilanka

Arasan Srilanka Arasan.lk is a print media magazine and online news.

இலங்கை சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு நடிகர் ரவி மோகன் ஆதரவு.!! இன்று 19 காலை கொழும்பில், பிரபல இந்திய நடிகர் ...
19/07/2025

இலங்கை சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு நடிகர் ரவி மோகன் ஆதரவு.!!

இன்று 19 காலை கொழும்பில், பிரபல இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன், பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் ஆகியோர் இலங்கை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும், கலாச்சார மேம்பாட்டிற்கும் புதிய பரிமாணங்களை வழங்கவல்ல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.

இந்த சந்திப்பில், இலங்கையின் அழகான சுற்றுலாத் தலங்கள் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான திரைப்படத் தயாரிப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் இயற்கை எழிலையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதன் மூலம், உலகளாவிய பார்வையாளர்களை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையின் இசை மற்றும் கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, நாட்டின் சுற்றுலா கவர்ச்சியை அதிகரிப்பது பற்றியும் பேசப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்கள், இலங்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும் இந்திய திரையுலக பிரபலங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் அவர்கள் தனது 83 வது வயதில் உல்நலக் குறைவால் காலமானார்!
13/07/2025

திரைப்பட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் அவர்கள் தனது 83 வது வயதில் உல்நலக் குறைவால் காலமானார்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போன கைப்பை!பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, ப...
12/07/2025

ரூ.30 கோடிக்கு ஏலம் போன கைப்பை!

பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, பாரீஸில் நடந்த ஏலத்தில், 30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில், மிகவும் பழமையான மற்றும் அரிய பொருட்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த, 'சோத்பீஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

மிகவும் பழமையான பொருட்களை சேகரிக்கும், ஒன்பது ஏலதாரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். தொலைபேசி மூலமாக, மிகவும் பரபரப்பாக நடந்த ஏலத்தில், பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக, 1984ல் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, ஏலம் விடப்பட்டது.

1 மில்லியன் டாலர், இலங்கை மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு ஏலம் தொடங்கியது.

அடுத்தடுத்து ஏலத்தொகை உயர, அடுத்த 10 நிமிடத்தில் ஏலம் முடிந்தது.

ஜப்பானைச் சேர்ந்த தனியார் ஏலதாரரும், பழமையான பொருட்களின் சேகரிப்பாளரும், இந்த பையை 10.1 மில்லியன் டாலருக்கு, இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு பிர்கினின் கைப்பையை ஏலம் எடுத்தார்.

இந்திய நாட்டை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்டோர் பிர்கின் கைப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்புகாத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று ...
04/07/2025

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுக்கின்றனர்

ரிதன்யா மரணம் உணர்த்தும் பாடம்!ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! ...
03/07/2025

ரிதன்யா மரணம் உணர்த்தும் பாடம்!

ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று.

நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார்,

ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.

கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி.

கொங்கு பகுதியில் பல காதல்கள் "எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க " என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !

ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.

கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.

மன ரீதியாக உடல் ரீதியாகவும் டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. அனுசரித்துப் போ என பெற்றோர் தரப்பும் அழுத்தம் தர, தோல்வி அடைந்த தன் திருமணத்தால் தன் அப்பாவிற்கு எந்த வித தலைகுனிவும் ஏற்பட்டு விடக்கூடாது என “இவர்களிடம் போராட என்னிடம் வலிமை இல்லை அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்” மிக அழகான தமிழில் சொல்லிவிட்டு உலகை விட்டு பறந்து போனது இந்த செல்லக் கிளி. பெயரையே பார்த்துப் பார்த்து வைத்தவர்களுக்கு மகளின் மறைவு எப்படி இருக்கும்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை.

1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.

2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.

3) லட்சத்தில் பீஸ் கட்டினாலும், நீ பெயில் ஆகும் வாய்ப்பு இருக்கிறது, கோடியில் திருமணம் செய்தாலும் அது முறியும் வாய்ப்பும் இருக்கிறது, ஆனால் இது முடிவல்ல ! எதற்கும் ஒரு மாற்று உண்டு என்பதை சொல்லுங்கள்.

4) ஒரு காதல், ஒருவனுக்கு ஒருத்தி, நூறு மார்க், தங்கமான பிள்ளை, ஒழுக்கமான வளர்ப்பு என சம்பிரதாயங்கள் அனைத்தும் போலி, நீயும் உலகத்தில் உனது இருப்பு மட்டுமே நிஜம் ! எதுவும் கடந்து போகும், எல்லாவற்றையும் கடந்தும் நீ வாழலாம் என்ற திடம் தாருங்கள்.

5)மகன் என்றால் உழைப்பின் அருமை நிச்சயம் போதிக்கப்பட வேண்டும் ! பிறரிடம் கை கட்டி நின்று வேலை நுணுக்கம் பழகிட வேண்டும் ! வரிசையில் நின்று வாங்கத் தெரிய வேண்டும். வசதியும் திறமையும் வேறு வேறு ! இந்த உலகில் இருக்கும் ஏதோ ஒரு சிறிய தேவையாவது உனது திறமை சரி செய்ய வேண்டும், அதுவே மனித இருப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை சொல்லுங்கள்.

6) மனைவியே என்றாலும் பெண்ணின் விருப்பம் இன்றி தொடக்கூடாது என்பதை மண்டையில் உரைக்கும் படி சொல்லி வளருங்கள்.

7) திருமணத்திற்கு பிறகு படிப்பு, வேலை, சுயதொழில் என பெண்ணின் விருப்பம் எது என்றாலும் அதை நிறைவேற்றி தருவது தான் ஆணின் கம்பீரம் என சொல்லுங்கள்.

8 ) மகளோ, மனைவியோ பெண்ணை நம்புங்கள், தனியான பயணங்களை அனுமதியுங்கள், பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு, சார்ந்திருக்கும் வரை அது விரியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது தான் அதன் பயணம் துவங்கும், எங்கு பறந்தாலும் அது கூடு வந்தே சேரும் எனப் போதியுங்கள்.

பிறகு ஒரு முக்கிய விஷயம்,

ஒருவேளை திருமண வயதில், உங்கள் வீட்டில் ஒரு பொன் குஞ்சனை மகனாக வளர்ந்திருந்தால்,

அவனுக்கு தேவை திருமணம் அல்ல, ஒரு வாழ்நாள் ஆயா ! மீறி திருமணம் செய்து வைத்தால் உங்களையும் சிறைக்கும் அழைத்து செல்லும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் இந்த பொன் குஞ்சன்கள் என்பதையும் தெரிந்து கொள்கிறேன்

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!! கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்...
03/07/2025

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளர் மீது கந்தானையில் துப்பாக்கிச்சூடு.!மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்த...
03/07/2025

மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளர் மீது கந்தானையில் துப்பாக்கிச்சூடு.!

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டவரை இலக்கு வைத்து கந்தானையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி.

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.

குருவிட்ட பொலிஸ் பிரிவில், தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர், 26 வயது பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து, நகையைப் ப...
03/07/2025

குருவிட்ட பொலிஸ் பிரிவில், தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர், 26 வயது பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து, நகையைப் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துகொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வா...
03/07/2025

மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வாகனமும் புனாணை-ரிதிதென்னையில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு - வவுனியாவில் சம்பவம் வவுனியா சமயபுரம் பகுதி...
03/07/2025

மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு -

வவுனியாவில் சம்பவம்

வவுனியா சமயபுரம் பகுதியில் தனதுமனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மனைவி,மாமியாரை குத்திவிட்டு வீடும் தீக்கிரை
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ளவீட்டிற்கு இன்று இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்திஉள்ளார்.

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக காவல்துறையினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும்,காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் வசந்தி வயது30,அவரது தாயாரான இந்திரா வயது69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்டார்லிங்க் இலங்கையில் அறிமுகம்: தனிப்பட்ட மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான விலை விபரங்கள் வெளியீடு!SpaceX இன் செயற...
02/07/2025

ஸ்டார்லிங்க் இலங்கையில் அறிமுகம்: தனிப்பட்ட மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான விலை விபரங்கள் வெளியீடு!

SpaceX இன் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க், நேற்று இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதிவேக இணைய சேவைகள் நாட்டின் குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்றன. நிறுவனம் தனது விரிவான விலை நிர்ணயக் கட்டமைப்புகளையும் வன்பொருள் செலவுகளையும் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட குடியிருப்புப் பாவனையாளர்களுக்காக, ஸ்டார்லிங்க் இரண்டு திட்டங்களை வழங்குகிறது:
* குடியிருப்பு லைட் திட்டம் (Residential Lite Plan): மாதத்திற்கு ரூ. 12,000.
* குடியிருப்புத் திட்டம் (Residential Plan): மாதத்திற்கு ரூ. 15,000.
தேவையான வன்பொருள், ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் (Starlink Standard Kit), ரூ. 118,000 ஆகும். இதனால், லைட் திட்டத்திற்கான மொத்த ஆரம்ப செலவு ரூ. 130,000 ஆகவும், வழக்கமான திட்டத்திற்கு ரூ. 133,000 ஆகவும் இருக்கும்.

வர்த்தகப் பாவனையாளர்கள் அதிக டேட்டா ஒதுக்கீடுகளுடன் கூடிய "முன்னுரிமை" திட்டங்களை அணுகலாம்:
* முன்னுரிமை 40GB (Priority 40GB): மாதத்திற்கு ரூ. 24,100
* முன்னுரிமை 1TB (Priority 1TB): மாதத்திற்கு ரூ. 63,200
* முன்னுரிமை 2TB (Priority 2TB): மாதத்திற்கு ரூ. 127,000
வர்த்தகப் பாவனையாளர்களுக்கான ஸ்டார்லிங்க் பெர்ஃபார்மன்ஸ் கிட் (Starlink Performance Kit) வன்பொருளின் விலை ரூ. 911,000 ஆகும். முன்னுரிமை 40GB திட்டத்திற்கான மொத்த ஆரம்ப செலவு ரூ. 929,300 ஆகும்.

சேவையின் முக்கிய விவரங்கள்:
* நீண்ட கால ஒப்பந்தங்கள் தேவையில்லை, பயனர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
* வன்பொருள் பொதுவாக 1 முதல் 2 வாரங்களுக்குள் அனுப்பப்படும்.
* வாடிக்கையாளர்கள் சேவையை மதிப்பிடுவதற்கு 30 நாட்கள் சோதனை காலம் உள்ளது.
* தற்போது தெஹிவளை போன்ற பகுதிகளில் சேவை செயல்படுகிறது.

ஸ்டார்லிங்கிற்கு இணைய ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் www.starlink.com/srilanka என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்தச் செயல்முறையில் ஒரு இருப்பிடத்தை உள்ளிடுவது, குடியிருப்பு அல்லது வணிகப் பயன்பாட்டிற்கு இடையே தேர்ந்தெடுப்பது, விருப்பமான திட்டம் மற்றும் வன்பொருள் கிட் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது, பின்னர் பணம் செலுத்துவதற்குச் செல்வது ஆகியவை அடங்கும்.

ஸ்டார்லிங்கின் அறிமுகம், குறிப்பாக பாரம்பரிய இணைய உள்கட்டமைப்பு குறைவாக உள்ள இலங்கை கிராமப்புற மற்றும் தொலைதூர சமூகங்களுக்கு இணைப்புத் திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நம்பகமான மற்றும் வலுவான இணைப்பு தீர்வுகளை நாடும் வணிகங்களுக்கான அதிவேக, பிரீமியம் இணைய விருப்பங்களையும் வழங்குகிறது.

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு முனைக்காடு...
02/07/2025

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.இன் சம்பவம் இன்று ( 02) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் ஆனி உத்தர நாளான இன்றைய தினம் அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்ற நிலையில் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arasan Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arasan Srilanka:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share