
07/02/2025
Chatgpt யைப் பயன்படுத்தி எப்படி உங்கள் சொந்த எழுத்து நடையில் எழுவது எப்படி?
Prompting ChatGPT to Write in Your Own Voice (Human-Like Writing)
கனடா தினத்தைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய தினம் முதல் வாரம் ஒவ்வொரு தடவை உங்களை இந்த மின்னஞ்சல் மடல் மூலமாக தரிசிக்க உறுதிபூண்டுள்ளேன். நான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI யை பயன்படுத்தி எளிதாக உங்கள் பணிகளை முன்னெடுக்கும் படைப்பாற்றலை மேம்படுத்தும் செயலிகள் (apps) பற்றிய தகவல்களை வழங்க எண்ணுகின்றேன்.
இந்த முதல் மடலில் ai chatbotகளை எழுதுவதற்குப் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக அன்றேல் தர்மசங்கடத்தை தரும் விடயமாக உள்ள ஒன்றைப் பார்க்க உள்ளேன். அதாவது நீங்கள் Chatgptயிலோ Geminiயிலோ அன்றேல் வேறு எந்த chatbot துணை கொண்டு எழுதுகின்றபோதும் அந்த செய்தியோ ,கடிதமோ, கட்டுரையோ ஏதோ ரோபோ எழுதியது போன்று உள்ளது என அதைப்படிக்கின்றவர்கள் மட்டுமல்ல உங்களுக்கும் ஒரு உணர்வு தோன்றக்கூடும் . அதற்கு தீர்வாக நீங்கள் ஒரு விடயத்தை எழுதும் போது இந்தப் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்
https://globetamil.substack.com/p/chatgpt