02/10/2025
அன்பியாக்கள் யாவரும், "மஃஸூம்கள்" ஆனாலும், அழ்ழாஹ்விடத்தில் இஸ்திஃபார், தௌபா செய்துக் கொண்டேயிருந்தார்கள்.
ஸஹாபாக்கள், தாம் உலகில் வாழும் காலத்திலேயே, "ரழியழ்ழாஹு அன்ஹும் வரழூ அன்ஹு" என்ற நன்மாரயத்தைப் பெற்றவர்கள். ஆனாலும், ஸக்கராத், கப்ர், பர்ஸஃக், ஆஃகிரா பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
உதாரணமாக:
- உமர் இப்னு ஃகத்தாப் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றிருந்தும் தன்னுடைய பெயர் முனாஃபிக்கீன்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்று ஹுஸைஃபதுப்னு யமனி ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். ஏனெனில், "முனாஃபிக்கீன்கள் நரகின் அடித்தட்டில் இருப்பார்கள்" என்று குர்ஆன் கூறுகிறது.
- உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றிருந்தும் மக்பராவுக்கு சென்றால் தாடி நனையும் அளவு அழுவார்கள். ஏனெனில், "ஆஃகிராவுடைய முதல் மன்ஸில் கப்ர்".
- ஸஅத் இப்னு முஆத் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் வஃபாத்துக்காக ரஹ்மானின் அர்ஷ் நடுங்கியது. அழ்ழாஹ், எழுபதாயிரம் மலக்குகளை ஜனாஸாவில் கலந்துக் கொள்ள அனுப்பி வைத்தான். ஆனாலும், ஸஅத் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களை கப்ர் நெருக்கப் பார்த்தது.
அன்பியாக்கள், ஸஹாபாக்கள் கப்ர், பர்ஸஃக், ஆஃகிரா பற்றி கவலையுற்று பயந்து நடுங்கியதுப் போன்று இறைநேசர்களான அவ்லியாக்களும் பயந்து நடுங்கினார்கள்.
சுல்தானுல் அவ்லியா குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் ஷைஃகுல் இஸ்லாம் இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றபோது புனித ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு அருகே வந்து,
"யா அழ்ழாஹ்! எனது எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! ஒருவேளை நீ என்னை மன்னிக்கா விட்டால், கியாமத்தில் எனது பார்வையைப் பிடுங்கி குருடனாக எழுப்பாட்டுவாயாக! நான் பரிசுத்தமானவனாக இருக்கும் நிலையிலேயே கியாமத்தில் ஸாலிஹீன்களை பார்க்க விரும்புகிறேன். நான் பாவியாக இருந்துக் கொண்டு கியாமத்தில் ஸாலிஹீன்களை காண்பதற்கு வெட்கப்படுகிறேன் நாயனே!"என்று அழுதழுது துஆ செய்தார்கள்.
[அல் முஃக்தஸர் ஃபீ அஃக்பாரில் பஷர்- அல்லாமா அபுல் ஃபிதா ரஹிமஹுழ்ழாஹ்]
#முஹியித்தீன்_அப்துல்_காதிர்_ஜீலானி
#ரஹிமஹுழ்ழாஹ்❤️