Makkal Kural 24/7

Makkal Kural 24/7 பேசப்படாத மக்களின் குரல்...
The Voice of Those Not Heard
නොඇසෙන ජනතා හඬ

சவூதி அரேபியாவின் 96வது தேசிய தின வரவேற்பு நிகழ்வில் ஹிஸ்புல்லாஹ் M.P பங்கேற்பு.!இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் ...
24/09/2026

சவூதி அரேபியாவின் 96வது தேசிய தின வரவேற்பு நிகழ்வில் ஹிஸ்புல்லாஹ் M.P பங்கேற்பு.!

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் பதில் தூதுவர் மேன்மைதகு யாசிர் அப்துர்ரஹ்மான் அல்-ஹஸ்மி அவர்களின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பு ITC ஹோட்டலில் இன்று (24) நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வரும் என். வரணியா சாந்தரூபன் மற்றும் எம்.எச். றியாஸா...
24/09/2026

கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வரும் என். வரணியா சாந்தரூபன் மற்றும் எம்.எச். றியாஸா ஆகியோர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வி நிர்வாகத் துறையில் தமது திறமை, அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி வரும் இருவருக்கும் கிடைத்துள்ள இத்தரமுயர்வு, அவர்களின் நீண்டகால சேவைக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

கல்முனை கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதில் இருவரும் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமது நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

23/09/2026

கொழும்பில் தொடர் மழை..!!!

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டி-2026 இலக்கிய விமர்சனம் பிரிவு III இல் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி  செல்வி அ...
23/09/2026

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டி-2026 இலக்கிய விமர்சனம் பிரிவு III இல் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி அ.நிலுக்சினியுடன் ஒரு சந்திப்பு.

கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து ...
23/09/2026

கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது ஹாபிழாவாக வெளியான அல்-ஹாபிழா முஹம்மது பஹ்மி முஹைத்தீன் பாத்திமா நஸ்கா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, ஆஸாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் புனிதப் பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளில் பயின்றுவரும் முஹம்மது ஹனீபா நப்ரிஸா மற்றும் முஹம்மது சபீல் ஸஹ்மத் ஜினா ஆகிய மாணவிகளும் அவர்களின் முன்னேற்றத்தைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

23/09/2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றவாளிகளான 15 பேருக்கும் தலா 220 வருட கடூழிய சிறைத்தண்டனை

மேல் நீதிமன்றம்

22/09/2026

திரைப்பட Style இல் Arrest செய்த இலங்கை Police...

22/09/2026

தற்போது கொழும்பில்..!!

ஈஸ்டர் தா #க்குதல் குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு இன்னும் சொற்ப நேரத்தில்.

🔴 𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡 | ஸ்ரர் தாக்குதல் (முழு விவரம்) நௌபர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, தண்டனை இன்றிரவு அறிவிக்கப்...
22/09/2026

🔴 𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡 | ஸ்ரர் தாக்குதல் (முழு விவரம்)

நௌபர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, தண்டனை இன்றிரவு அறிவிக்கப்படுகிறது!

குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளோர் விவரம்:
1.முஹம்மத் இப்ராஹிம் முஹம்மது நௌபர்
2.முஹம்மமது சரீப் ஆதம்லெப்பே (கபூர் மாமா)
3.ஹயாத்து முஹம்மது மில்ஹான்
4.முஹம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5.முஹம்மது இப்ராஹிம் சாதித் அப்துல் ஹக்
6.முஹம்மது அஸ்வர் முஹம்மது ரிஸ்கான்
7.முஹம்மது மன்சூர் முஹம்மது சனாஸ்தீன்
8.அப்துல் மனாப் முஹம்மத் பிர்தௌஸ்
9.முஹம்மது ரமீஸ் முஹம்மது சாஜித்
10. அப்துல் லதீப் முஹம்மது சாபி (மௌலவி)
11. ஹுசைனுல் ரிஸ்வி காலித்
15 . முஹம்மது ஹனீபா ஜெய்னுல் ஆப்தீன்
16. முஹம்மத் முஸ்தபா முஹம்மத் ஹாரிஸ்
18. ராசிக் ராசா ஹுசைன்
19 கச்சி முஹம்மது ஜெஸ்மின்

குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு விடுதலையானோர்

முஹம்மத் சவாஹிர் முஹம்மது ஹசன்
முஹம்மத் இப்திகார் முஹம்மத் இன்சாப்
ரஷீட் முஹம்மத் இப்ராஹிம்
யாசின் பாவா அப்துல் ரவூப் (இறப்பு)
செய்னுல் ஆப்தீன் முஹம்மது ஜசீன்
முஹம்மது முஸ்தபா முஹம்மத் ரிஸ்வான்
மீரா சாஹிப் முஹம்மத் நப்லி
முஹம்மத் அமீன் ஆயத்துல்லா
முஹம்மது அன்சார் ஹில்மி
முஹம்மது அக்ரம்

ஒருவர் (யாசின் பாவா அப்துல் ரவூப்) சிறையில் இருந்த காலத்தில் மரணமானார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விரைவில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🛑இன்று காலை குருணாகலில் நடந்த அதிரடிக் கைதும் அதன் பின்னணியும்*போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் குறித்த ரகசியத் தகவலின் ...
22/09/2026

🛑இன்று காலை குருணாகலில் நடந்த அதிரடிக் கைதும் அதன் பின்னணியும்*

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் குறித்த ரகசியத் தகவலின் பேரில், கிரியுல்லா காவல் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு ஒன்று, 22.09.2026 இன்று காலை சந்தேக நபரின் காரைத் துரத்தியது.

சந்தேக நபர் உத்தரவுகளை மீறி காரை ஓட்டியபோது, ​​போலீசார் காரின் டயர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, பன்னல நகருக்கு அருகே சந்தேக நபரும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்

இந்தச் சோதனையின்போது, ​​15 கிராம் ஹெராயின் (260 மில்லிகிராம்) மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 924,770 பறிமுதல் செய்யப்பட்டன

Address

Union Place
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Kural 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share