NBC Tamil TV

NBC Tamil TV National Broadcasting Corporation Tamil Television

25/06/2026
கிழக்கு மாகாண சபை  மற்றும் டித்வா அனர்த்த புனரமைப்பு திட்டம்  ஆகிய நிதிமூலங்கள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற சுமார் ஏழுபது  இ...
17/06/2026

கிழக்கு மாகாண சபை மற்றும் டித்வா அனர்த்த புனரமைப்பு திட்டம் ஆகிய நிதிமூலங்கள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற சுமார் ஏழுபது இலட்சம் ரூபா நிதியில் மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் இரண்டு வீதிகள் கொங்கிறீட் இட்டு புனரமைக்கப்படுவதுடன் மற்றுமொரு வீதிக்கு வடிகாலமைக்கப்படுகிறது.

ஏறாவூர் நகர சபையின் ஜுப்ரியா வட்டார உறுப்பினர் எம்ஆர். நஸீர் ரஜாய் தலைமையில் நடைபெற்ற புனரமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வில் நகர சபை முதல்வர் எம்எஸ். நழீம் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.

இத்திட்டத்தின்கீழ் மௌலானா வீதிக்கு வடினாலமைப்புச் செய்யப்படுவதுடன் காந்தி குறுக்கு வீதி மற்றும் மௌலானா குறுக்கு வீதி ஆகிய பாதைகள் கொங்கிறீட் இட்டு செப்பனிடப்படுகின்றன.

டிக்டொக் குழு உரையாடலின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர்              14 வயதுடைய சிறுவர் ஒருவனை வாலிபர்கள் இருவர்...
16/06/2026

டிக்டொக் குழு உரையாடலின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் 14 வயதுடைய சிறுவர் ஒருவனை வாலிபர்கள் இருவர் தாறுமாறாகத் தாக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தாக்குதல் நடாத்தும் வாலிபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்டொக் குழு உரையாடலின்போது ஒரு வாலிபர் மற்றவர்களைத் திட்டிவிட்டு வலைதளத்திலிருந்து வெளியேறிச்சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்கள் சந்தேகத்தின்பேரில் இச்சிறுவனை அழைத்துக்கொண்டு மீராகேணி பிரதேச காட்டுப் பகுதியில் வைத்து கையிலானாலும் காலினாலும் தாக்கியுள்ளதுடன் தலைக்கவசத்தினாலும் தாறுமாறாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலிற்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையின் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தாக்குதல் நடாத்தும் சம்பவம் சமூகவலை தளங்களில் வைரலானதும் ஏறாவூர் பொலிஸார் தாக்குதல் நடாத்தும் நபர்களை அடையாளங்கண்டு ஒருவரைக்கைது செய்துள்ளனர். மற்றைய நபரை பொலிஸார் தேடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது,
இதேவேளைஇ காணொளியில் காணப்படுகின்ற ஏனைய வாலிபர்களும் இத்தாக்குதல் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when NBC Tamil TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share