10/08/2025
நான் விரும்பும் எழுத்தாளர்களில் சமதர்மம் பேனும் சுதாராஜூம்,அவரது புதிய படைப்பான ”கப்பல் கடல் வீடு தேசம்” நாவலும்
( ஓர் வாசகன் – இலங்கையில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா )
எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர் என்பது முதலில் பெருமைக்குரிய விடயமாகும்.எம் மண் ஈன்றெடுத்த தமிழ் தாயின் குழந்தை என்பது தான் அதற்கு முக்கியகாரணம்.இவர் இலங்கையின் முக்கிய தமிழ் சிறுகதை எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் என்பதை முக்கியமாக குறிப்பிடலாம்.
சுதாராஜ் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியில் படித்து, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.1972இல் "ஒளி" என்ற இளையரசு சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானார். 1970 களிலிருந்து இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு, நாற்பது ஆண்டுகள் ஓரூா ஆழமான ஈழத்து வாழ்க்கை, சமூக மாற்றங்கள், மன உணர்வுகள் ஆகியவற்றை மறவாமல் பதிவு செய்தே வந்துள்ளார்.
அவரது கதைகள் நெடுகிலும், வெளிநாட்டு அனுபவங்களிலும் அவர் செய்த பயணங்களையும் மேலும் பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.அவர் தொழில் நிமிர்த்தம் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.
தனது சிறுகதைகளில் நேசம், மனிதாபிமானம், இயற்கை, இன, வர்க்க அரசியல் ஆகியவை முக்கிய கருப்பொருள்களாக இடம் பெற்றமையானது அவர் ஒரு சமதரம் எழத்தாளர் என்பதை அதனை வாசிக்கின்ற போது அடையாளப்படுத்த முடியுமாகவுள்ளது சிறப்பம்சமாகும்.
சுதாராஜ் அவர்கள் எழுதிய கதைகள் இன முரண்பாடும், அரசியல் பாதிப்பும், ஈழ மக்கள் வாழ்க்கையும், மனித உறவுகளும் என சமூக அக்கறை நிறைந்தவையாகவும் காணப்படுவது ஈழத்தின் மக்களின் தேவை நிறைந்த குரலாக பார்க்கமுடிகின்றது.ஈழம் என்கின்ற போது அது இலங்கையின் வடக்கினையே குறிப்பதேயன்றி வேறு அர்த்தம் கொள்ளத் தேவையில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.சுதாராஜ் அவர்கள் எனக்கு நன்கு பரீட்சையமானவர் மட்டுமல்லாமல் நீண்ட காலம் எனது பிறப்பிடமும்,வாழ்விடமுமான புத்தளத்தினை வாழ்விடமாக கொண்டனர்.சிறந்த பண்புள்ள மனித நேயமிக்கவர் என்பதை கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அவர் 1981-1990 இல் வெளியான சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சாகித்திய விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.சுதாராஜ் இலங்கை ஈழத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக சமூகக் கடப்பாடும், மனித நேயமும் கொண்ட முக்கிய எழுத்தாளராகும். சுதாராஜ் எழுதிய சிறுகதைகள் எதிர்கால சாகித்திய விருதுகளுக்கு பரிந்துரை செய்யக் கூடிய அளவில் உயர்ந்த மற்றும் ஆழ்ந்த கருத்தாடல்களை கொண்டதாகும்.
அவரது படைப்புகள் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக முக்கியத்துவம் பெறும் வகையில், காலத்தையும் சமுதாயக் கடப்பாட்டையும் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன.கடந்த நாற்பது ஆண்டுகளில் சுதாராஜ் அவர்கள் நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் அறுபது கதைகள் "உயிர்க்கசிவு" போன்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
இவரது சிறுகதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; இந்தியாவில் மறுபதிப்புகள் வெளியாகியுமுள்ளன, இவரது எழுத்தோட்டத்தால் கவரப்பட்டு விருப்பான உள்ளார்ந்த வாசகர் தலைமுறை உருவாகியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. சுதாராஜ் "சாகித்திய மண்டல விருது" உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளுக்கான உருமாற்றம், விமர்சனமும் இந்திய-சங்க இலக்கிய அரங்குகளில் காணப்படுகிறது.
சுதாராஜின் கதைகள் புது தலைமுறையில் வாசிப்பு, சேர்க்கை, ஆய்வு, மொழிபெயர்ப்பு—இவை அனைத்திலும் எதிர்காலத்தில் உளகத் தளத்தில் ஒரு தரமான பதிவினை ஏற்படுத்தும் அளவுக்கு தரம் கொண்டதாக காண்ப்பமுவதை விமர்சகர்கள் குறிப்பிட்டுவருகின்றனர். குறிப்பாக சுதாராஜ் அவர்களின மற்றைய பிரசவமான ”கப்பல் கடல் வீடு தேசம்” என்னும் சிறுகதை தொகுப்பு தொடர்பில் மலேசியத் தமிழ் வாழ்க்கை, சமூக அடர்வண்ணங்கள் போன்ற தலைப்புகளில் எழுத்தாளராகச் செயற்பட்டு வருகிறார் சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் அவரது முகப் புத்தகத்தில் இது தொடர்பில் இட்டுள்ள பதிவானது பெறும் சான்றாகும் சுதாராஜ் ஈழம் தாண்டிய சர்வதேச எழுத்தாளர் பட்டியலில் இணைந்துவிட்டார் என்பதற்கு,
கப்பல் கடல் வீடு தேசம்" என்பது திரு. சுதாராஜ் அவர்களின் புதினமாகும் இது 1990களில் தொழில் தேடி வெளிநாடு செல்லும் யாழ் குடாநாட்டுப் பொறியாளரின் வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டதாகும்.இந்த நாவல் ஈழச் சூழல் மற்றும் வெளி நாடு வாழ்க்கை ஆகிய இரண்டையும் அருகருகே வைத்து விவரிக்கிறது, குறிப்பாக 1990 களின் ஈழம், உள்நாட்டு பாடுகள் மற்றும் அந்நிலையில் வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள், ஒடுக்குமுறைகள் பற்றிய வரலாற்றுப் பதிவாகும்.
கதையின் நாயகன், தொழில் தேடிக்கொண்டு தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த நினைக்கும் ஓர் இளம் பொறியாளர்,அவரின் உணர்ச்சி போராட்டங்கள், சமூகப் பிணைப்புகள், மற்றும் இடையூறுகள் நாவலின் முக்கியத்துவம் பெறுகின்றது.விமர்சனங்கள் குறிப்பிடுவது, இது ஈழத்து உள்ளமைப்பையும், வரலாற்றுத் தகவல்களையும் உண்மை உணர்வுகளோடு பதித்துள்ள புதினம் எனக் கூறலாம்.
சுதாராஜ் அவர்களின் இந்தக் கதையாற்றல், சமூக பொறுப்பு மற்றும் வரலாற்று உணர்வுகளை ஓருங்கிணைத்து ஈழம் மற்றும் தமிழர் பரந்த உலக வாழ்க்கையை மகிழ்ச்சியும், துன்பமும் கொண்டு காட்டுகிறது .மனிதன் கடலை தாண்டும், தொழில், வணிகம், போர், மற்றும் பயணங்களுக்காகக் கப்பல் உருவாகி வளர்ந்தது. இலக்கியத்தில், கப்பல் சார்ந்த கதைகள் சாதாரணமாக பயணம், சவால், புதிய நிலத்துக்கான தேடல், அந்நிய சூழல், மற்றும் மனித உறவுகளின் சிக்கல்கள் பற்றி பேசுகின்றன. தமிழ் புதினம், கவிதைகள் ஆகியவற்றில் நவீன காலங்களில் வெளிநாட்டு வாழ்க்கை, வேலைவாய்ப்பு, பிரிவினை, ஈழம், புலம்பெயர்வு ஆகியனவும் மையமானதாக கதைக்குள் மேலதிக கருத்தாக பார்க்க முடியும்.
சுதாராஜ் அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்களின் கோர்வைகள் நாவலாக வெளிவருவதற்கு அவரது கற்பனை வளம் கடந்து இலங்கை யுத்தம்,மக்களின் அகதி வாழ்வு,அவரது கடல் கடந்த தொழல் சார் அனுபவங்கள் என்பன மிகவும் இப்பணிக்க கைகோர்த்துள்ளதை காணமுடிகின்றது.
எழுத்தளார் சுதாராஜ் அவர்களின் இந்த நாவல் எப்போது வெளிவரும்,இதற்கான சூழல் எப்போது வரும் என்ற கேள்விகள் இருந்தாலும் தற்போது கடல் கடந்த நாட்டில் அவர் வசிப்பதால் வெளியீடு இல்லாமல் அவரது இலக்கு வாசகரை சென்றடைய வேண்டும் என்பது யதார்த்தமும்,எதிர்ப்பார்ப்புமாகும்.எந்த முயற்சி செய்தாலும்,அந்த முயற்சிகள் அவர்களது எண்ணங்களின் அடிப்படையிலேயே வெற்றியளிக்கின்றதை என்பதற்கு அமைய சுதாராஜ் அவர்களின் இந்த ”கப்பல் கடல் வீடு தேசம்”நாவல் அதனை அடையும் என்பது என்பது நம்பிக்கை.
நன்றி