12/05/2024
AL HIKMA
1952-2022
'நம்பிக்கையான எதிர்காலம்'
அல்ஹிக்மா வரலாற்றின் வழித்தடம்
------------------
பாடசாலை என்பது பண்பாட்டுக்களம்.சீரான கலாசாரம்,ஒழுக்க விழுமியம்,மானுடப்பண்புகள் மிகுந்த சமூகத்தைத்தோற்றுவிக்கும் புனிதமான இடம் பாடசாலைதான்.பாடசாலை இலக்குக்குழுவாகிய மாணாக்கரை ஆற்றுப்படுத்துவதில் பாடசாலைச்சமூகத்துக்குப் பெரும் பங்குண்டு.
இன்றைய கல்விப்புலம் பரந்த அளவுடையது;விரிந்த எதிர்பார்ப்புகளையுடையது; எல்லையகன்ற நோக்குடையது. பாடசாலையின் vision,mission ஊடாக நம்பிக்கையான எதிர்காலமொன்றைக்கட்டியெழுப்புவது மிகத்தேவையாகும்.
பாடசாலைக்கென்று வரலாறு இருக்கிறது.வரலாற்றின் வழித்தடத்திலிருந்து புதிய பாதையில் பயணிப்பது நம் கடமையாகும்.
இந்தப்பாடசாலை 1952ஆம் வருடம் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வேறு பெயரில் வேறு இடத்தில் வேறு பண்பாட்டில் தொடக்கம் நிகழ்ந்தது.தமிழ்,முஸ்லிம்,சிங்கள மாணவர்கள் 383 பேருடன் இருமொழிப்பாடசாலையாக மிகுந்து மாவத்தையில் தொடக்கம் கண்டது. தொடக்க அதிபர் திருவாளர் டு.எம்.ஜினரத்ன அவர்கள்.
1953 மார்ச் 02இல் தமிழ்பிரிவு தனியே தொடங்கிற்று. அப்போது ஏ.கே.அபுஹனீபா அதிபரானார்.1954.12.16.இல் எம்.எச்.முஹம்மத் அதிபர் கடமைப்பொறுப்பேற்றார்.
1962இல்தான் க.பொ.த.சாதாரண தரம் தொடங்கப்பட்டது.முதல் சித்தி பெற்ற மாணவன் ஐ.எம்.எம்.லதீப்
பின்னர்1963.01.01 முதல் "மிகுந்து மாவத்தை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை" என்ற பெயர் பெற்றது. அப்போது அதிபராக எஸ்.எம்.அப்துல் றஸீத் இருந்தார்.இக்காலத்தில்தான் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைச் சித்தி பதிவானது.ஏ.எச்.எம்.கரீம்,ஏ.சி.எம்.லத்தீப்,நஸீர் அஹமட் ஆகியோர் சித்தி பெற்றதாகப் பதிவு கூறுகிறது.
1968.09.01 இல் எம்.ஸி.எம்.சித்தீக்
1970.07.01இல்எஸ்.எல்.என்.எம்.நிஸார்
1972.04.17இல் என்.எம்.லரீப்
1973.01.01இல் ஹில்மி தாஹிர்
1973.03.01இல் ஏ.எம்.எம்.சம்சுதீன்
1975.05.09இல் எம்.எஸ்.சாஹூல் ஹமீட்
இக்காலத்தில் தமிழ்ப்பிரிவுக்கென தனி இடத்தின் தேவை உணரப்பட்டது.பாடசாலைக்கான வேறிடம் தேடும் முயற்சிகள் வலுப்பெற்றன.முஸ்லிம் கல்வி மறுமலர்ங்சியின் ஆதாரமான கல்வியமைச்சர் பதியுதீன் மஃமூத் மற்றும் மத்தி பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் கெனமன் ஆகியோரது முயற்சியினால் புதிய பரிமாணம் ஏற்பட்டது. இப்போது அதிபராக எப்.எம்.ஹனீபா நியமிக்கப்பட்டார்.1978 .11.02 வர்த்தமானிப்பிரகாரம் கொழும்பு-12,சென்ஙெபஸ்தியன் வீதி,இலக்கம் 65இல் இடமாற்றப்பட்ட செய்தி வெளியானது.1978.11.28.காலை 10.30க்கு வட்டாரக்கல்வியதிகாரிw.m.தென்னக்கோன் அவர்களால் அதிபர்.எப்.எம்.ஹனீபாவிடம் கையளிக்கப்பட்டது.இது ஹிக்மாவின்.வரலாற்று வழிதடத்தில் முக்கிய கட்டமாகும்.
இப்போதுதான் உயர் வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
1979.08.27 திகதிய கொழும்பு தெற்று கல்விப்பணிப்பாளரின் 379ஆம் இலக்கக்கட்டளைப்படி 1980இல் மகா வித்தியாலயம் ஆனது.1Cதரம்ம் பெற்றது.1979 இல் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையில் எஸ்.எச்.எம்.அலி ஜின்னா சிறந்த சித்தி பெற்றார்.1980இல் உயர் பரீட்சையில் தோற்றிய
ம எம்.எம்.ஜே ஹனியா முதன்முதலாகப் பல்கலைக்கழகம் சென்றார்.
இக்காலத்தில் மாணவர் தொகை அதிகரித்தது.724 மாணவரும்29ஆசிரியரும் காணப்பட்டனர்.வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.இடவசதி நெருக்கடியைச்சந்தித்தது.
1981.03.03இல் அதிபராக எம்.ஐ.எம். இப்றாஹிம்
1981.08.06இல் எஸ்.எம்.நாமிஸ்
1998.03.03இல் ஏ.சம்சுதீன்
1998.12.11இல் ஏ.அன்வர்தீன்(10 வருடம்)
2007.07.04இல் கே.எம்.எம்.நாளிர்(10 வருடம்) ஆகியோர் அதிபர்களாகக்கடமையாற்றினர்.இவர்கள் தான் அதிககாலம் அதிபர்களாக செயற்பட்டோராவர்.திருமதி நாமிஸ்17 வருடம் சேவையாற்றியுள்ளார்.
இவர்கள் காலத்தில் முக்கிய நிகழுவுகளாக
1981.09.04இல் மூன்றுமாடிக்கட்டிடம் பிரதமர் ஆர்.பிரேமதாஸ மற்றும் கல்வியமைச்சர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
1998.12.11 இல்இப்பாடசாலைக்கு மஸ்ஜிதுன் நஜ்மி பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ.முஹம்மது அவர்களால் "அல்ஹிக்மா கல்லூரி" பெயர்சூட்டப்பெற்றது.
2002.10.05இல் கல்லூரியின் பொன்விழா tower hallஇல் கொண்டாடப்பட்டது.
2010.03.05இல் இப்பாடசாலை 'இசுறு' பாடசாலை வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
2012.06.28இல் வைரவிழா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.
2012.07.14இல் PPA மூன்று மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இது பாடசாலை வரலாற்றின் மற்றுமோர் மைல்கல்ளாகும்.பின்னர் இக்கட்டிடம் முதலில் தளமும் பின்னர் பூரணமாடிக்கட்டிடமும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
2013.0128இல் மூன்றுமாடி (E கட்டிடம்)திறக்கப்பட்டது.
2014.12.08 அன்று அதிபர் கே.எம்.எம்.நாளிர் இடமாற்றம் பெற்றுச்செல்ல எம்.எம்.மஃஸூர் அன்று முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.கல்லூரியில் 1324 மாணவர்களும்53ஆசிரியர்களும் காணப்பட்டனர்.
2018 முதலாக
2018.08.07இல் 13வருட உட்படுத்தல் கல்வி நிகழ்ச்சித்திட்டத்துக்கமைய புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது.இதன் மூலம் அல்ஹிக்மாவில்13Y தொழிநுட்ட கல்வி முறைக்கு வித்திடப்பட்டது.
2019.02.27இல் சுகததாஸ உள்ளரங்கில் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி ப.மா.ச.மற்றும் பா.அ.கு மற்றும் பெற்றோர் நலன் விரும்பிகள் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
மகிந்தோதய திட்டத்தின்கீழ் இரண்டுமாடிகொண்ட தொழிழ்நுட்பப்பிரிவுக்கான புதிய கட்டிடம் கல்லூரிக்குக் கடைத்தது.
'அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை'த்திட்டத்தின் கீழ் சி பிரிவில் உள்வாங்கப்பட்டு விஞ்ஞான உபகரணத்தொகுதி கிடைக்கப்பெற்றது.நூலகத்துக்கான நூல்பொதி கிடைத்தது.
இவ்வாறு ஹிக்மாவின் வழித்தடத்தில் அதிபர்களுடன் இணைந்து முகாமைத்துவம்,ஆசிரியர் குழாம்.பாடசாலை அபிவிருத்திக்குழு,பழையமாணவர் சங்கம்,மஸ்ஜிதுன் நஜ்மி நிர்வாகம்,வாழைத்தோட்டம் நம்பிக்கை நிதியம்,பெண்கள் அமைப்புகள்,நலன் விரும்பிகள்,அரசியல் பிரமுகர்கள்,செரண்டிப் பாடசாலை அபிவிருத்தி நிதியம் ,பெற்றோர் மற்றும் கோட்ட, வலய,மாகாண,கல்வித்திணைக்களம் எனக்காலத்துக்குக்காலம் இந்தப்டாடசாலையான் மேம்பாட்டிற்கு வழங்கிய உதவிகள் அனைத்துக்கும் அல்ஹிக்மாவன் ஆசிரியர்குழாம் மற்றும் முகாமைத்துவக்குழுவினது பாராக்டுக்களையும் நன்றிகளையும் திரிவிக்கிறோம்.இந்தப்பாதை முடிவதில்லை;இந்தக்கல்விப் பயணம் தொடரும் அல்ஹிக்மா 2022.05.12இல் எழுபதாவது வருடத்தில் கால் வைக்கிறது.வரலாற்றின் வழித்தடம் அழிவதில்லை.நாம் இல்லோரும் அதன் ரேகைகளாய் இருப்போம்.
நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி........