Almashoora Breaking News

Almashoora Breaking News Almashoora News Whenever You Give Your Word, Say The Truth
'AN-6:152
(1196)

27/09/2026

🟢🟢இறைவனால்!
🟢🟢🟢இறையின் படைப்புகளால்!
🟢🟢🟢🟢இந்த செக்கன் வரை புகழப்பட்டவர்!

இஸ்லாத்தின் #கண்ணியமிக்க இறைதூதரின் #மேன்மையை உலகில் #எந்தவொன்றும் குறைத்துவிடாது.

#குறைக்க நினைபோருக்கே #குறைவும், #இழிவும் #உண்டாகுமன்றி, இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட அவரது #புகழை, #மாட்சிமையை எந்தவொரு #படைப்பாலும் #குறைத்திடவே முடியாது!

இறைவன் கொடுத்த #வாக்குறுதி இந்த #செக்கன் வரைக்கும் அச்சொட்டாகவே நிறைவேறி வருகிறது!

இந்த #செக்கனிலும் உலகில் #அதிகூடிய ஆண் பிள்ளைகளுக்கு சூட்டப்படும் #புகழ்பெற்ற ஒரே ஒரு நாமம் #முஹம்மத்!

இந்த செக்கனிலும் உலகம் முழுவதும்
❤️ ஐவேளை பர்ழான தொழுகையில்..
❤️ சுன்னத்தான தொழுகைகளில்..
❤️ ஐவேளை அதானில்..
❤️ அதானுக்கு சொல்லும் பதிலில்…
❤️ ஐவேளை துஆவில்…
என ஒவ்வொரு கணப்பொழுதிலும் #பில்லியன் கணக்கான உலக முஸ்லிம்களால் தினமும் சுமார் 60.7 #பில்லியன் தடவைகளுக்கு மேல் #புகழப்படும் ஒரே ஒரு நாமம் #மேன்மைமிக்க #முஹம்மத் என்பதாகும்.

இந்த உலகையே படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனால் #புகழப்பட்ட அவரது மேன்மை #தினமும் அதிகரிக்குமே அன்றி எந்தவொன்றாலும் ஒருபோதும் #மங்காது #மாறாது, #மறையாது!

உலக #வரலாற்றில் #மிகச் சிறந்த மற்றும் #செல்வாக்குமிக்க #தலைவர்களின் வரிசையில் #முஹம்மது நபி (ஸல்) அவர்கள் #முதலிடத்தில் வைக்கப்படுகிறார்கள்.

இதற்கு மிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆதாரம், அமெரிக்க வரலாற்றாசிரியரும் கணிதவியலாளருமான மைக்கேல் ஹெச். ஹார்ட் (Michael H. Hart) எழுதிய "The 100: A Ranking of the Most Influential Persons in History" (வரலாற்றில் மிகவும் செல்வாக்கு செலுத்திய 100 மனிதர்கள்) என்ற நூலாகும்.

🟢திருமறையான திருக்குர்ஆனில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகத்துவமும் உயர்வும் பல இடங்களில் இறைவனால் நேரடியாகப் போற்றப்பட்டுள்ளது.

🟢 அதில் மிகச் சிறப்பான மற்றும் நேரடிப் புகழாரம் சூட்டும் வசனம் "உம்முடைய புகழை நாம் உமக்காக உயர்த்தினோம்" என்று கூறும் சுரா அல்-இன்ஷிரா (94:4) ஆகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் மற்றும் சிறப்பைக் கூறும் முக்கியமான திருக்குர்ஆன் வசனங்கள்:

🟢 (சூறா அல்-இன்ஷிரா - 94:4)
"இன்னும், உமது புகழை நாம் உமக்காக உயர்த்தினோம்." (அதாவது, அதான், இகாமத் மற்றும் ஜும்ஆ உரைகள் என எங்கு அல்லாஹ்வின் பெயர் கூறப்படுகிறதோ, அங்கு இணையாக உமது பெயரும் கூறப்படும்படி செய்துள்ளோம் என்று இத்தீர்க்கதரிசன வசனத்திற்கு விளக்கமளிக்கப்படுகிறது).

🟢 (சுரா அல்-கலம் - 68:4)
"நிச்சயமாக நீர் மகத்தான நன்னெறி (பண்பாடு) மீது இருக்கின்றீர்." மனித குலத்திற்கே முன்மாதிரியாக அவரது உயரிய ஒழுக்கத்தையும் நற்குணங்களையும் இறைவன் இத்தகுதியைக் கொண்டு சாட்சி கூறுகிறான்.

🟢(சூறா அல்-அஹ்ஸாப் - 33:56)
"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் இந்த நபி மீது அருள்புரிகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர் மீது அருள்புரிந்து, அவரிடம் முழுமையான சாந்தியையும் சமாதானத்தையும் கோருவீர்களாக." இறைவனும் அவனது வானவர்களும் போற்றும் ஒரு தனித்துவமான சிறப்பை இத்திருவசனம் இவருக்கு வழங்குகிறது.

🟢(சூறா அல்-அன்பியா - 21:107)
"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி அனுப்பவில்லை." ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் மானிடத்திற்கும் அவர் அருட்கொடையாகத் திகழ்கிறார் என்பதை இத்திருமறை பிரகடனம் செய்கிறது.

Nallupathesam
♥️
27.09.2026

27/09/2026

🟢🟢🟢 👉 CALL : 0727137137

26/09/2026

"அல்லாஹ்வையன்றி #எவர்களை அவர்கள் ( #வணங்கி வழிபட்டு) பிரார்த்திக்கிறார்களோ, அவர்களை நீங்கள் #ஏசாதீர்கள்; (அப்படி ஏசினால்) அவர்கள் #அறியாமையின் காரணமாக, வரம்பு மீறி #அல்லாஹ்வை #ஏசுவார்கள்."

READ THE HOLY QURAN
👇👇👇

அல்குரான் - 6:108

26/09/2026
26/09/2026
25/09/2026

🟢🟢🟢 கருணை காட்ட
🟢🟢🟢🟢🟢🟢🟢 கோருவோம்!

#வெளிநாடு செல்லும் ஒருவர் #அந்நாட்டின் அனைத்து #சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு மதிப்பளித்து கருத்தோடும், கவனமாகவும் நடந்துகொள்வதாக #உறுதியிட்டு #ஒப்பமிட்டு (Agreement) சென்றபின்…

அங்கு அவரது #அறியாமையினால் அல்லது #ஆத்திரத்தினால் ஏற்பட்ட விபரீதத்திற்கு….

#கண்ணியமிக்க இஸ்லாத்தின் #இறுதி #இறைதூதரின் #பெயரால் ஓர் உயிரை #பழிவாங்குவதை விலக்கி, அவர் #கற்றுத்தேறும்படியாக அவர் மீது கால அவகாசம் கொடுத்து…..

#மரணதண்டனையை #சிறைத்தண்டனையாக குறைத்து….

#என்றோ ஒருநாள் அவர், பாதுகாப்பாக வீடு திரும்ப #கருணை காட்டுமாறு #சவூதி அரேபியாவின் #உச்சநீதிமன்றத்திடமே #உருக்கமாக கோரிக்கை வைப்போம்.

25.09.2026

♥️

Address

Colombo

Telephone

+94786704848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Almashoora Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share