Dailyupdates.lk

Dailyupdates.lk இது உண்மையின் அடையாளம்...
நம்பகத்தன்மையே எங்களது பலம்...

09/09/2022

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

27/05/2022

முடிவுக்கு வருமா இந்த நிலை?

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்றனர்…ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமை...
14/05/2022

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்றனர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - வெளிநாட்டலுவல்கள்.

02. திரு.தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

03. திரு. பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு.

04. திரு. காஞ்சன விஜேசேகர - மின்சாரம் மற்றும் வலுசக்தி

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

08/05/2022

கடந்த (06) திகதி பல்கலைகழக மணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் பொலிஸாரால் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்...

மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது – பசில் ராஜபக்ச அழுத்தம்.!http://www.newshint24.com/2022/05/blog-post_92.html...
07/05/2022

மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது – பசில் ராஜபக்ச அழுத்தம்.!
http://www.newshint24.com/2022/05/blog-post_92.html?m=1

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச ஆதரவா....

ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தினை பொறுப்பேற்கத்தயார் - சம்பிக்கhttp://www.newshint24.com/2022/05/blog-post_2.html?m=1
07/05/2022

ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தினை பொறுப்பேற்கத்தயார் - சம்பிக்க
http://www.newshint24.com/2022/05/blog-post_2.html?m=1

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள ....

04/05/2022
இலங்கையில் இன்று பிறை தென்படவில்லைசெவ்வாயன்று நோன்புப் பெருநாள்இன்று இலங்கையில் எப்பாகத்திலும் சவ்வால் மாதத்திற்கான தலை ...
01/05/2022

இலங்கையில் இன்று பிறை தென்படவில்லை
செவ்வாயன்று நோன்புப் பெருநாள்

இன்று இலங்கையில் எப்பாகத்திலும் சவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட வில்லை,
ஹிஜ்ரி 1443 ரமழானை 30 ஆக பூர்த்தி செய்து 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சவ்வால் பிறை முதலாம் நாள் நோன்புப் பெருநாளாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

இஸ்லாம் விடுக்கும் மே தினச் செய்திஎம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)மே தின வரலாறு:18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டி...
01/05/2022

இஸ்லாம் விடுக்கும் மே தினச் செய்தி

எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)

மே தின வரலாறு:

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கெதிராக குரல்கள் உலகின் பல நாடுகளிலும் ஆங்காங்கே எழத்தொடங்கின. இதில் இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) குறிப்பிடத்தக்கதாகும். 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்திய இவ்வமைப்பானது தொழிலாளர்கள் 10 மணி நேரம் பணி புரிய வேண்டும் என குரல் எழுப்பியது.

1830 ஆம் ஆண்டு பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகங்களை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளிகள் 1856 இல் 8 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.

1896 ஏப்ரலில் லெனின் எழுதிய சிறு பிரசுரத்தில் ரஷ்யா தொழிலாளிகளின் நிலமை குறித்து விரிவாக அலசினார். மேலும் ரஷ்யத் தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அந்த வகையில் தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் அமைக்கப்பட்டது. இந்த இயக்கம் 1886 மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனலாம். இந்த அறைகூவலே மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றிலும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

உலகளவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகள், சம்பள உயர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், அவலங்கள் என்பவற்றை முதலாளி வர்க்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைகிறது. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் அன்றைய தினம் கடந்தவுடன் தொழிலாளிகளின் எந்த கோரிக்கைகளையும் முதலாளி வர்க்கம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
எனவேதான் இச்சந்தர்ப்பத்தில் உலக வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளிகளின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
இஸ்லாம் பேசுகின்ற உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டு நபியவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவை: அவை ஏதோ ஓர் அரசினாலோ அல்லது சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல: மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இந்த உலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது இஸ்லாம். உலகிலுள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம். இறையச்சத்தை அளவீடாக வைத்து இனம், நிறம், மொழி, பிரதேசம் ஆகிய வேறுபாடுகளையும் தாண்டி மனித சமத்துவத்தை நிலை நாட்டும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இன்று பணமும், அதிகாரமும், உடற் பலமும் உள்ளவர்கள் தமது அதிகார எல்லைக்குள் தொழில் புரிபவர்களை இழிவாகவும். தாழ்வாகவும் நடத்துவதை சமுகத்தில் பரவலாக அவதானிக்க முடிகிறது. சில வேளை தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவதும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளர்களுக்கு மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் பற்றி சற்று நோக்குவோம்.

01. தொழில் உரிமை (right to work)
அனைத்து படைப்பினங்களிலும் அல்லாஹ் மனிதனையே உயர்வாகப் படைத்துள்ளான். தனக்குறிய தேவைகளைத் தேடிப் பெற்று உழைத்துச் சம்பாதிப்பதற்காக உடல் உறுப்புக்களைக் கொடுத்திருக்கிறான. கை கால்கள் நல்ல நிலையில் உள்ள ஒருவன் எந்த நிலையிலும் உழைக்காமல் சோம்பேறித்தனத்துடன் வாழ்வதையும் யாசகம் கேற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதற்கான வழிகாட்டல்களை அல்-குர்ஆன் அல்-ஹதீஸில் நாம் காணலாம்.

பின்னர் (ஜம்ஆத்) தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) புமியில் பரவிச்சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (63-10)
நாம் அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கியிருந்தோம் (மேலும் நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்குபடுத்துவீராக’ என்றும் கூறினோம் (34-10,11)

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்துகொண்டு விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்வதை விடச் சிறறந்ததாகும். (புகாரி-3406)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மர்ருழ் ழஹ்ரான்) என்னுமிடத்தில் அராகான் (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பரித்துக் கொண்டிருந்தோம். “நபி (ஸல்) அவர்கள் அதில் கருப்பான பழத்தைப் பறியுங்கள் ஏனெனில் அவற்றில் அதுதான் நல்லது என்று கூறினார்கள்” மக்கள் நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா? எனக கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா? என பதிலளித்தார்கள். (புகாரி-3406)
ஆக நபி (ஸல்) அவர்கள் உற்பட அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

02. தொழிலாளர்களை கண்ணியமாக நடத்துதல் வேண்டும்: (right to honour)
தொழிலாளர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்தோடும் அணுக வேண்டும்: அவர்களும் மனிதர்கள் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ அவர்களது சுய கொளரவத்தை பாதிக்கும் வகையிலோ நடத்தாது சகோதரத்துவ வாஞ்சையோடு நடத்த வேண்டும். அல்லாஹ் நாடினால் தான் விரும்பியவரை உயர்ததுவான். தான் விரும்பியவரை தாழ்த்துவான் ஒரு நொடிப் பொழுதில் ஒரு செல்வந்தனை ஓட்டாண்டியாகவும் ஒரு ஓட்டாண்டியை செல்வந்தனாகவும் மாற்றும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.

நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக கடமையாற்றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக தொழில் புரிந்தேன் (என் மனம் புண்படும் படி) சீ என்றோ (இதை) ஏன் செய்தாய் என்றோ நீ (இதை) இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்னதில்லை. (புகாரி-6038)

இந்த வகையில் முதலாளிகள் தமது தொழிலாளிகள் ஏதும் தவறுகள் விடுகின்ற போது அல்லது அவர்கள் புறத்தில் ஏதும் குறைபாடுகள் நேரிடும் போது அவர்களை திட்டுவதோ, ஏசுவதோ, தண்டிப்பதோ, சித்திரவதை செய்வதோ கூடாது. மாறாக அவ்வேளைகளில் அவர்களின் நிறைகளை கவனத்திற்கொண்டு அன்பு காட்ட வேண்டும்: அவர்கள் விட்ட தவறுகனை முறையாக திருத்த வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துதரே! எனது பணியாளரிடம் ஏதும் தவறுகளைக் காணும் போது அவரிடம் எத்தனை முறை மண்ணிப்பை மேற்கொள்ள எனக் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் மொளனமாக இருந்தார்கள் அதற்கு அம்மனிதர் மீண்டும் அவ்வாறே கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுபது முறைகள் மண்ணிப்பை மேற்கொள்வீராக என பதிலளித்தார்கள். (திர்மிதி)

03.தொழிலாளர்களின் உடல் நலன் பற்றி கவனம் செலுத்துதல் (right to good health)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவரிடம் அவரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால்! அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும் அவ்வாறு அவரை அமர வைத்துக்கொள்ளாவிடினும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும் ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (புகாரி-5640)

மஃரூர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நான் அபு தர் (ரழி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதா என்ற இடத்தில் சந்தித்தேன் அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் அதே போல் அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடை கிடப்பதையும் கண்டேன் அப்போது (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு (நான்) ஒரு முறை ஒருவருக்கு ஏசிவிட்டு அவரின் தாயைப் பற்றியும் குறை கூறிவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபு தர்ரே! அவரையும் அவரது தாயையும் சேர்த்து குறை கூறிவிட்டீரே! அறியாமைக் கால பழக்கம் குடி கொண்டுள்ள மனிதராகவே இருக்கிறீர்! உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் அல்லாஹ்தான் அவர்களை உங்களின் அதிகாரத்திற்கு கீழ் வைத்திருக்கிறான்! எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால்! தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும். தான் அணிவதிவதிலிருந்து அவருக்கும் அணியக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் அவர்களை ஈடுபடுத்தினால் அவர்களுக்கு நீங்கள் உதவியாய் இருங்கள் எனக் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவதைப் போல என் அடிமைக்கும் அணியக் கொடுத்தேன் என அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி-30)

04. பணியாளர்கள் செய்ய முடியாத, சுமக்க முடியாத பணிகளை அவர்கள் மீது சுமத்துவது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும் (right to good physical).

ஒவ்வொரு முதலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகள் இயந்திர மனிதர்கள் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தான் அவர்கள் மீது சுமத்தும் பணிகள் அவர்களால் நிறைவேற்றப்பட சாத்தியமானவையா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

“அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விடயத்தில் கூறினார்கள். (புகாரி-30)

05. உரிய நேரத்திற்கு ஊதியம் வழங்குதல் (right to wage)
“வியர்வை உலரமுன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி-11434).

அதாவது முதலாளி தன் பணியாளரிடமிருந்து தேவையான பணிகளை வாங்கிவிட்டு உரிய கூலியை கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்வதோ மோசடி செய்வதோ கூடாது.

“மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன் ஒருவர் சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன் மற்றவர் வாக்குறுதி மீறியவர் (மூன்றாமவர்) ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு அவனது கூலியை வழங்காதிருந்தவர். (புகாரி-2270)

தவிர தொழிலாளிகள் தமது உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கும் அதே நேரம் தமது கடமைகள் பொறுப்புக்கள் குறித்தும் பிரக்ஞையோடு இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்யும் தொழிலை வணக்கமாக பார்க்க வேண்டும். பொதுவாக இன்று எல்லா மதங்களும் உழைப்பை உலகில் பணத்தையும் பொருளையும் சம்பாதிப்பதற்கான வழிகளாகவே பார்க்கின்றன. மாறாக இஸ்லாமிய மார்க்கம் வாழ்வே வணக்கம் என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறது. ஒருவர் தொழுகை, நோன்பு, போன்ற இபாதத்களில் இருப்பது போல தொழிலில் ஈடுபடும் போதும் வணக்கத்திலே இருக்கிறார்.
ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்ற புறத்தோற்றத்தை விட என்ன எண்ணத்தில் அதனைச் செய்கிறார் என்ற துய சிந்தனையோடு குறித்த தொழிலை நோக்குவதே இம்மையிலும் மறுமையிலும் நிறைவான கூலியைப் பெற்றுத்தரக் கூடியது. ஒரு தொழிலாளி தனது பணியில் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றவேண்டும். தனது தொழில் வழங்குனருக்கு அல்லது நிறுவனத்துக்கு முழு நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் பணியாற்றுவது மிக முக்கியமாகும். தனது பணியில் நேர முகாமைத்துவத்தையும், கடமை உணர்வையும் பேணக் கூடியவராகவும் தொழில் பற்றிய புரண அறிவைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
“ உங்கள் (பணிகளை) திறன்படச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தம் பணியை) திறன்படச் செய்பவர்களை நேசிக்கிறான்” (02-195). எனவேதான் ஒவ்வொரு முதழிலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகளின் உரிமைகளைப் பேணுகின்ற அதே வேளை ஒவ்வொரு தொழிலாளியும் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனத்திற்கொண்டு செயற்பட்டால் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் பல நன்மைகளைப் பெறலாம்.

#மீள்

புதிய அமைச்சரவை இன்று நியமனம்17 பேர் பதவி பிரமாணம். # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #தினேஷ் கு...
18/04/2022

புதிய அமைச்சரவை இன்று நியமனம்
17 பேர் பதவி பிரமாணம்.
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

தினேஷ் குணவர்தன பொதுசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சராகவும்,

டக்ளஸ் தேவானந்தா மீன்பிடித்துறை அமைச்சராகவும்,

ரமேஷ் பத்திரண கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும்,

பிரசன்ன ரணதுங்க பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,

திலும் அமுணுகம போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,

கனக்க ஹேரத் பெருந்தெருக்கள் அமைச்சராகவும்,

விதுர விக்கிரமநாயக்க தொழில் அமைச்சராகவும்,

ஜானக்க வக்கும்புர விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும்

ஷெஹான் சேமசிங்க வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராகவும்,

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா நீர்வழங்கல் அமைச்சராகவும்,

விமலவீர திசாநாயக்க வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராகவும்,

கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,

தேனுக விதானகமகே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும்,

கலாநிதி நாலக்க கொடஹேவா ஊடகத்துறை அமைச்சராகவும்,

பேராசிரியர் சன்னஜயசுமன சுகாதார அமைச்சராகவும்,

ஹாஃபீஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,

பிரமித்த பண்டார தென்னக்கோன் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர்இம்ரான் கான் பதவி இழந்தார்.பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி !இம்ரான் கான் ...
10/04/2022

முன்னாள் பிரதமர்
இம்ரான் கான் பதவி இழந்தார்.

பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி !
இம்ரான் கான் பதவி இழந்தார்...

342 ஆசனங்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் - நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள 172 பேரின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் 174 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

தற்போது - புதிய பிரதமர் தெரிவு செய்யப்படவுள்ளார். அடுத்த தேர்தல் வரை இவரே - பாகிஸ்தான் பிரதமராக பதவி வகிப்பார்.

(Boomudeen Malik இன் முகநூல் பதிவிலிருந்து )

நாடாளுமன்றத்தை முற்றுகையிட  ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி---------------------------------------------------------நாடாளும...
05/04/2022

நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
---------------------------------------------------------

நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஏற்கனவே குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாதை மூடப்படவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராகி வருவதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றம் ஏற்கனவே விஷேட பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி பெரும்பான்மைப் பலத்தை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் இன்றைய நாடாளுமன்றம் தீர்க்கமான ஒன்றாக இருப்பதாகத் தெரிய வருகிறது.
(Thinakkural )

நேற்று நிதி அமைச்சராக பதவி ஏற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிதி அமைச்சர் பதவியை சற்று முன் இராஜினாமா செய்தார்
05/04/2022

நேற்று நிதி அமைச்சராக பதவி ஏற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிதி அமைச்சர் பதவியை சற்று முன் இராஜினாமா செய்தார்

Tweet  நெருக்கடி முற்போக்கு மாற்றங்களை கொண்டுவர வேண்டும்: (அ) நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20A அகற்றல் (ஆ) மீளவும் 19A+, ...
05/04/2022

Tweet

நெருக்கடி முற்போக்கு மாற்றங்களை கொண்டுவர வேண்டும்:
(அ) நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20A அகற்றல்
(ஆ) மீளவும் 19A+, பாராளுமன்ற ஜனநாயகம் (இ) #சட்டத்தின்_ஆட்சி, #இலங்கைத்துவம், #மதசார்பின்மை, #பன்மைத்துவம் ஆகிய எழுச்சி கொள்கைகளை அரசியலமைப்பில் உள்ளடக்கல்
#மனோகணேசன் #இலங்கை

நாமல் ராஜபக்க்ஷ இராஜினாமா
04/04/2022

நாமல் ராஜபக்க்ஷ இராஜினாமா

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dailyupdates.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share