Hot News

Hot News உண்மையை உரக்க சொல்வோம்.

கிழக்கு மாகாண ஆளுநர் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது-- ———————-கிழக்கு ம...
19/07/2023

கிழக்கு மாகாண ஆளுநர் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது
-- ———————-
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இனவாதிகளின் கைப்பொம்iயாக மாறாமல் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
களநிலவரத்தை அறிந்து கொள்ளாமல் கிழக்கு மகாண ஆளுநர் சில பாரபட்சமானதும் அந்தஸ்துக்குத் தகுதியற்றதுமான சில நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் சமீப சில நாட்களாக மேற்கொண்டு வந்திருந்தது விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது.
கிழக்கு மாகாண ஆளுநரின் சில நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் நிலவிய அதிருப்தியான கருத்துக்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தார்.அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளத்துவங்கினர்.
அதன் பயனாக இப்பொழுது கிழக்கு மாகாண ஆளுநர் விழிப்படைந்து தனது போக்கை மாற்றி கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக முஸ்லிம் ஒருவரை நியமித்தது வரவேற்கத்தக்கது என்று அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறான முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென முஸ்லிம் சமூக அமைப்புக்கள் கோருகின்றன.

துருக்கியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு  எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தற்போதைய அதிபர் எர்துகான் தொடர்ந்...
15/05/2023

துருக்கியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தற்போதைய அதிபர் எர்துகான் தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான பயணம்’.....!!    🟥  இன்று ஒருவருடப் பூர்த்தி ▪️ மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான ...
12/05/2023

மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான பயணம்’.....!!
🟥 இன்று ஒருவருடப் பூர்த்தி

▪️ மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான பயணம்’ என்னும் நடைபவனியின் 365 ஆவது நாள் இன்றைய தினம் கடந்து செல்கிறது.

நாட்டில் நடைபெறுகின்ற வன்முறை சம்பவங்கள், சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அநீதிகள், அதிகாரிகளின் பாரபட்சமான பொறுப்பற்ற செயல் என்பவற்றிற்கு எதிராகவும் நியாயமான நீதி வேண்டியும் மட்டக்களப்பு கல்லடியிலிருந்து காந்திபூங்கா வரை சமூக ஆர்வலர்கள் சிலர் தினமும் நடைபவனியாக செல்வர். இந்த நடைபவனியின் 365 நாள் இன்றோடு கடந்து செல்கிறது.

யாழ் ஆனைப்பந்தியில் ஹரி ஹோட்டலுக்கு  சீல் வைக்கப்பட்டது. ......!!    🟥  கழிவு இறைச்சி பெருமளவில் கண்டுபிடிப்பு▪️ யாழ் ஆன...
12/05/2023

யாழ் ஆனைப்பந்தியில் ஹரி ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. ......!!
🟥 கழிவு இறைச்சி பெருமளவில் கண்டுபிடிப்பு

▪️ யாழ் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள ஹரி ஹோட்டல் இன்று சீல் வைக்கப்பட்டது

நேற்றிரவு யாழில் உள்ள பிரதேசசபை ஒன்றின் செயலாளர் அந்த கடையில் இறைச்சிக் கொத்து வாங்கியுள்ளார். அந்தக் கொத்துறொட்டியில் இருந்த இறைச்சி மிகவும் பழுதடைந்துள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டின் பிரகாரம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் கடையினை சோதனையிட்ட போது , பழுதடைந்த குளிர் சாதன பெட்டியினுள் சமைத்த , சமைக்காத கோழி இறைச்சி , மாட்டு இறைச்சி , ஆட்டு இறைச்சி என 45 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதுடன் , உணவகத்தின் பல சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர்.

அதனை அடுத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த உணவகத்திற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை அடுத்து , உணவகத்தினை உடனடியாக மூடி சீல் வைக்குமாறும் , மீட்கப்பட்ட 45 கிலோ இறைச்சியை அழிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமராக சத்தியப்பிரமாணம்?......!!    🟥  கொழும்புக்கு மேலதிக படையினர் தருவிப்பு▪️ இன்று மாலை வௌிமா...
12/05/2023

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமராக சத்தியப்பிரமாணம்?......!!

🟥 கொழும்புக்கு மேலதிக படையினர் தருவிப்பு

▪️ இன்று மாலை வௌிமாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான ராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கொழும்புக்கு திடீரென தருவிக்கப்பட்டுள்ளனர்

பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வின் பாதுகாப்புக்காகவே அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது

மஹிந்த ராஜபக்‌ஷ விரைவில் மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.....!!   தொழிற்கல்வியின் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்▪️ கல்வி அமைச...
12/05/2023

யாழ் மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.....!!

தொழிற்கல்வியின் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்

▪️ கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இக்கண்காட்சியில் பங்கெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் வருகைதந்துள்ளனர்.

நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட மாணவ மாணவியரை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு நாட்டுக்கு அவசியம் என்றும், தொழிற்கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டுமாறும் ஜனாதிபதி மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

The “Environment Pioneer President’s Medal Awarding Ceremony 2020-2021” organized by the Central Environmental Authority...
12/05/2023

The “Environment Pioneer President’s Medal Awarding Ceremony 2020-2021” organized by the Central Environmental Authority was held today 11th May 2023 at 2.00 pm under the chairmanship of H.E. the President, Mr. Ranil Wickramasinghe. Arrangements have been made to hold the event at the Jasmine Hall in Bandaranaike Memorial International Conference Hall. Environment Minister Engineer Naseer Ahmed, Secretary of the Environment Ministry Dr. Anil Jasinghe, Secretary of the Ministry of Education Mr. M. N. Ranasinghe, Chairman of the Central Environmental Authority Mr. Supun S. Pathirage, Acting Director General of Central Environmental Authority Dr. Mr. R. M. S. K. Rathnayake

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா 2020–2021' நிகழ்வு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று 2023 மே 11ஆம் திகதி நடைபெற்றது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜெஸ்மின் மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் திரு எம்.என். ரணசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு சுபுன் எஸ். பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திரு ஆர்.எம்.எஸ்.கே. ரத்னாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

"පරිසර නියමු ජනාධිපති පදක්කම් ප්‍රදානෝත්සවය 2020-2021”

මධ්‍යම පරිසර අධිකාරිය විසින් සංවිධාන කරන ලද "පරිසර නියමු ජනාධිපති පදක්කම් ප්‍රදානෝත්සවය 2020-2021” අද දින ප.ව 2.00 ට බණ්ඩාරනායක අනුස්මරණ සම්මන්ත්‍රණ ශාලා පරිශ්‍රයේ ජස්මින් ශාලාවේදී අතිගරු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වුණි.

මේ අවස්ථාවට පරිසර අමාත්‍ය ඉංජිනේරු නසීර් අහමඩ් මහතා, පරිසර අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය අනිල් ජාසිංහ මහතා, අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම් එම්.එන්.රණසිංහ මහතා, මධ්‍යම පරිසර අධිකාරියේ සභාපති සුපුන් එස්.පතිරගේ මහතා, මධ්‍යම පරිසර අධිකාරියේ වැඩ බලන අධ්‍යක්ෂ ජනරාල් ආචාර්ය නීතීඥ ආර්.එම්.එස්.කේ.රත්නායක මහතා ඇතුළු සම්භාවනීය පිරිසක් සහභාගී වූහ.

இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு.(ஊடகப்பிரிவு)இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவ...
10/05/2023

இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு.

(ஊடகப்பிரிவு)

இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.

சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பலர், அமைச்சருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சக நண்பர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அரபுமொழியில் பாண்டித்தியமும், ஹாபிழுமான அமைச்சர் நஸீர் அஹமடின் பாண்டித்தியம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார அபிலாஷைகளை அடைந்துகொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு சவூதியுட்பட அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இவரது தெரிவு வழிகோலும்.காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் மற்றும் உள்நாட்டுக் கனிய வளங்களை சர்வதேச சந்தைப்படுத்தும் வியாபார வியூகங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூக சவால்களைகலந்தாலோசிக்க அமைச்சர் நஸீர்அஹமட் அவசர அழைப்பு(ஊடகப்பிரிவு)முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை  தீர...
09/05/2023

முஸ்லிம் சமூக சவால்களை
கலந்தாலோசிக்க அமைச்சர் நஸீர்அஹமட் அவசர அழைப்பு

(ஊடகப்பிரிவு)

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது.இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன்.
எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது.வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன காணிகள் மற்றும் கிழக்கில்
திட்டமிட்டு விழுங்கப்பட்ட முஸ்லிம்களி ன் பூர்வீக நிலங்களைப் பெற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.இதற்கு அரசியல் தலைமையென்ற ரீதியில் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சத வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்னறனர்.இம்மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 14 பிரதேச செயலகங்கள் பிரிவில்,நான்கு பிரதேச செயலகங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இச்செயலகங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு,1.3 வீதமே காணிகளே உள்ளன.இவையும் திணிக்கப்பட்டே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதே நிலைதான்,அம்பாறை, திருமலை உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நிலவுகிறது.

இது தவிர, எல்லை நிர்ணய அறிக்கைகளிலும் சில சந்தேகங்கள், பாரிய ஆபத்துக்கள் உள்ளன.முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அல்லது அவர்களின் பெரும்பான்மை பலத்தை சிதைக்கும் வகையிலேயே இந்த அறிக்கை உள்ளது.புதிய தேர்தல் முறையிலும் முஸ்லீம் சமூகம் பாதிக்கப்படாதவாறு பணியாற்ற நாம் வேண்டியுள்ளது.எனவேதான்,

முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான சமகால சவால்கள் தொடர்பில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம். இக்கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் .இதற்காக,சகல முஸ்லிம் தலைமைகளும்,எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபடுமாறு அழைக்கிறேன். ஒற்றுமையில்தான், பொது வரைபை தயாரிக்கலாம்.இந்த வரைபினால், சகோதர சமூகங்களையும் புரிந்துணர்வுக்கு கொண்டு வர முடியும்.ஒரே தா

முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டமிடப்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்களின் வருகை மேலும் எமது சமூகத்தின் இருப்பிற்கு ஆபத...
07/05/2023

முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டமிடப்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்களின் வருகை மேலும் எமது சமூகத்தின் இருப்பிற்கு ஆபத்தை உண்டாக்கும் -ஜனநாயக ஐக்கிய முன்னணி தெரிவிப்பு

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடா தொகுதியின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 05.05.2023 இடம்பெற்றது இதன் போது கருத்து தெரிவித்த இக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் M.ஜவாத் அவர்கள் அண்மையில் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பான விபரங்களில் கல்குடா தொகுதி உள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிதாக வெளியிடப்பட்ட இடமாற்ற விபரத்தில் தமிழ் பிரதேச செயலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது இங்கு வாழும் மக்களின் இருப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும். தகுதிவாய்ந்த எத்தனையோ முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் இருந்த போதிலும் திட்டமிடப்பட்டு தமிழ் பிரதேச செயலாளர் இப்பகுதிகளில் காலா காலம் நியமிக்கப்பட்டு வருகின்றதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? அதனை அம்மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்னொரன்ன விடயங்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமை புரிந்த தமிழ் பிரதேச செயலாளர் எமது காணிகளை தாரை வார்க்கும் செயற்பாடுகளிலும் நிர்வாக அடக்குமுறைகளிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான விசேட வேலை திட்டம் ஒன்றை ஜனநாயக ஐக்கிய முன்னணி எமது பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள்,பள்ளிவாயல்கள், புத்திஜீவிகளை இணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் இவ் இடமாற்றத்திற்கு எதிராக எமது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட் அவர்களின் ஊடாக எமக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் அநீதிகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போது நாட்டின் அபிவிருத்தியிலும் இன ஐக்கியத்திற்காகவும் செயற்பட்டு வரும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று நம்புகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

மனித மேம்பாட்டு அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாட்டில்  Young Leadership Conference - 2023"பொருளாதார நெருக்கடியில் இருந்து இளைஞர்...
07/05/2023

மனித மேம்பாட்டு அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் Young Leadership Conference - 2023

"பொருளாதார நெருக்கடியில் இருந்து இளைஞர் சமுதாயத்தினை மேலோங்க செய்தல்" எனும் தொனிப்பொருளினை அடிப்படையாக கொண்டு (06.05.2023) அன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது..... !

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவர் எஸ். ஏ முஹம்மது அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக இந்தியாவில் இருந்து வருகை தந்த டீம் சென்னை ரொக் ஸ்டார் இனுடைய இணை நிறுவனர் லீடர். பாலகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்து கொண்டதோடு, விஷேட அதிதியாக டீம் ஷெய்யிட் நிறுவனத்தின் தலைவர் எஸ். ஷெய்யிட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்....!

மேலும், அவர்களோடு இனைந்து கௌரவ அதிதிகளாக; அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும், மனித மேம்பட்டு அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ. எல். எம். இர்பான், அவர்களும் டீம் பொனிக்ஸ் யினுடைய தலைவர் லீடர். எஸ். எம். சரன்ராஜ் அவர்களும், இலங்கை சவாட் கிக் பொக்சின் கூட்டமைப்பின் தலைவர் எஸ். பாரிஸ் மௌலானா, அல் ஹாஜ் யு. எல். எம். அஸ்ஹர் ஜமாலி, எஸ். சராபா மற்றும் ஏ. குமார் போன்ற பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்!

நிகழ்வின் முக்கிய வளவாலர்களாக டீம் ஷெய்யிட் யினுடைய முகாமையாளர் ஸாகிரா இஸ்மயில் அவர்களால் தலைமைத்துவம் பற்றிய சொற்பொழிவும் மற்றும் டீம் ஷெய்யிட். யினுடைய ஒருங்கிணைப்பாளர் கே. எப். பசீஹா பர்வீன் அவர்களினால் நேர முகாமைத்துவம் என்ற தலைப்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, டீம் ஷெய்யிட் நிறுவனத்தின் தலைவர் எஸ். ஷெய்யிட் அவர்களினால் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய முக்கிய குறிப்புக்களுடனான சொற்பொழிவுகளும் இடம்பெற்றன!

இதன் போது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 160 இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்...!

Powered By:Team SeYed
Co-Sponsored By: Dominator, Chennai Rock Star,Rich Alliance

✍🏻 ஹானி ஷஹாப்

உலக புவி தினக் கொண்டாட்டம் - 2023ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் உலக புவி த...
25/04/2023

உலக புவி தினக் கொண்டாட்டம் - 2023

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் உலக புவி தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுகின்றனர். உலக புவி தினக் கொண்டாட்டம் முதல் முறையாக அரம்பமானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவிலாகும். ஐரோப்பிய மக்களினால் மேற்கொள்ளப்பட்ட அதிக வளப் பயன்பாடு காரணமாக ஏற்பட்ட வளி மாசு மற்றும் நீர் மாசு காரணமாக மனித சுகாதாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கு மக்களை தூண்டுவதே இதற்குக் காரணமாக இருந்தது.

உலக புவி தின அமைப்பினால் இம்முறை உலக புவி தினத்தின் தொனிப்பொருளாக, “எமது பூமியில் முதலீடு செய்வோம்”(Invest in our Planet) என்பதை அறிவித்துள்ளனர். அதன்படி, எதிர்கால சந்ததிகளின் தேவைக்காக இயற்கை வளங்களை சேமிக்கும் வகையில் பேண்தகு முறையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு உலக புவி தின கொண்டாட்டத்திற்கான விழா ஒன்று 2023.04.24ஆம் திகதி கௌரவ சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்கள் மற்றும் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் 8அவது மாடியில் உள்ள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கொண்டாட்ட நிகழ்ச்சி அறிவூட்டும் செயலமர்வு வடிவத்தில் செயற்பட்டதோடு அதற்காக 75 பாடசாலை மாணவர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்பட 178 பேர் அளவானோர் பங்கேற்றனர்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்கள் புவி தின வரலாறு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை விளக்கினார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் இவ்வாறான சுற்றாடல் தொடர்பிலான தினம் குறித்து அடிமட்டத்தில் இருந்து மக்களை அறிவூட்டும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அதன்மூலம் சுற்றாடல் தொடர்பில் உணர்வுபூர்வமான மக்களை உருவாக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அறிவூட்டுவதற்காக 02 விரிவுரைகள் நடத்தப்பட்டன. புவி தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் செயற்படும் ஒன்றிணைந்த நீர் மூல மற்றும் நீர் வள முகாமைத்துவ திட்டத்தின் சுற்றாடல் நிபுணர் டீ.எம். அனுருத்த தென்னகோன் அவர்களினால் முதல் விரிவுரை நடத்தப்பட்டதோட

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hot News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share