Lankanewsmail

Lankanewsmail srilanka news in English, Sinhala, Tamil (Trilingual)

ரமழான் மாதகால விசேட சிங்கள வகுப்புகள்புனித ரமழான் விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஒருமாத கால விசேட சிங்கள பேச்சுப் பயிற்சி ...
20/02/2025

ரமழான் மாதகால விசேட சிங்கள வகுப்புகள்
புனித ரமழான் விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஒருமாத கால விசேட சிங்கள பேச்சுப் பயிற்சி ஒன்லைன் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம்
காலை 6.30 தொடக்கம் 8.00 மணிவரையும் மாலையில் 4.30 தொடக்கம் 6.00 மணி வரையும் மற்றும் இரவில் 9.30 தொடக்கம் 11.00 மணி வரையும் மூன்று குழுக்களாக ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
வௌிநாடுகளில் உள்ளவர்களுக்கு பின்னிரவு வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்
வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேர வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும்.
குறைந்த கட்டணத்தில், அடிப்படையில் இருந்தே சிங்களம் எழுதவும் , வாசிக்கவும், சரளமாகப் பேசவும் பயிற்சிகள் வழங்கப்படும். பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள தனி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் விடயம் முன்கூட்டியே வட்சப்பில் டியூட்டாக வழங்கப்பட்டு விடும். எழுதுவதில் உங்கள் நேரத்தை வீணடிக்காது வகுப்பில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
வகுப்பில் பாடத்தை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கும், தவிர்க்க முடியாத காரணங்களினால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் விசேட வகுப்புகள் ஏற்பாடு கொடுக்கப்படும்.
விரைவில் எமது இலவச அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்பின் பின்னர் வகுப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் வகுப்புக் கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்த வேண்டும்.மாதம் முழுவதும் 25 வகுப்புகளுக்கும் 1000 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும்.
உங்களுக்கு வசதியான நேரம் (காலை, மாலை, இரவு) குறிப்பிட்டு உங்கள் பெயர், வயது என்பவற்றையும் குறிப்பிட்டு 071 8920286 இலக்கத்துக்கு தனியாக வட்சப் செய்யவும். குழுக்களாக பிரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
எமது வட்சப் குழுமம்-https://chat.whatsapp.com/CLkc6zIninJ1qhzZbAwixV
வகுப்பிற்கு மேலதிகமாக கற்றுக் கொள்ள யூடியூப் தளம்- https://www.youtube.com/channel/UCyYDXRIYnla67pUVUzYV4Nw
மேலதிக விபரங்களுக்கு -071 8920286 (வட்சப் நம்பர்)

ரமழான் மாதகால விசேட சிங்கள வகுப்புகள்

புனித ரமழான் விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஒருமாத கால விசேட சிங்கள பேச்சுப் பயிற்சி ஒன்லைன் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம்

காலை 6.30 தொடக்கம் 8.00 மணிவரையும் மாலையில் 4.30 தொடக்கம் 6.00 மணி வரையும் மற்றும் இரவில் 9.30 தொடக்கம் 11.00 மணி வரையும் மூன்று குழுக்களாக ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.

வௌிநாடுகளில் உள்ளவர்களுக்கு பின்னிரவு வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்

வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேர வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும்.

குறைந்த கட்டணத்தில், அடிப்படையில் இருந்தே சிங்களம் எழுதவும் , வாசிக்கவும், சரளமாகப் பேசவும் பயிற்சிகள் வழங்கப்படும். பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள தனி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் விடயம் முன்கூட்டியே வட்சப்பில் டியூட்டாக வழங்கப்பட்டு விடும். எழுதுவதில் உங்கள் நேரத்தை வீணடிக்காது வகுப்பில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

வகுப்பில் பாடத்தை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கும், தவிர்க்க முடியாத காரணங்களினால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் விசேட வகுப்புகள் ஏற்பாடு கொடுக்கப்படும்.

விரைவில் எமது இலவச அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்பின் பின்னர் வகுப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் வகுப்புக் கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்த வேண்டும்.மாதம் முழுவதும் 25 வகுப்புகளுக்கும் 1000 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும்.

உங்களுக்கு வசதியான நேரம் (காலை, மாலை, இரவு) குறிப்பிட்டு உங்கள் பெயர், வயது என்பவற்றையும் குறிப்பிட்டு 071 8920286 இலக்கத்துக்கு தனியாக வட்சப் செய்யவும். குழுக்களாக பிரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

எமது வட்சப் குழுமம்-https://chat.whatsapp.com/CLkc6zIninJ1qhzZbAwixV
வகுப்பிற்கு மேலதிகமாக கற்றுக் கொள்ள யூடியூப் தளம்- https://www.youtube.com/channel/UCyYDXRIYnla67pUVUzYV4Nw
மேலதிக விபரங்களுக்கு -071 8920286 (வட்சப் நம்பர்)

06/03/2024

அலி சப்ரி ரஹீம் எம்.பி.யின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன் நாடாளுமன்ற உறுப்புரிமை தற்காலிமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது

நாடாளுமன்ற விழுமியங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான துறைசார் குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் அவர் எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தவோ, அதற்கான சிறப்புரிமைகளைப் பயன்படுத்தவோ முடியாது

அத்துடன் குறித்த காலப்பகுதியில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் சமூகமளிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

27/02/2024

இலங்கையின் இணையம் மற்றும் தொடர்பாடல் சேவைகளுக்கு ஆபத்து?

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது

இஸ்ரேலின் "குளோப்ஸ்" வணிக செய்தி சேவை மற்றும் பல இணைய செய்தி சேவைகள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைபடும் அபாயம் ஏற்படக் கூடும்.

இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கையிலும் இணைய சேவைகள் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது

පාස්කු ත්‍රස්ත ප්‍රහාරය: චැනල් 4 ආන්දෝලනාත්මක වීඩියෝව සැප්. 5 එලියට !2019 අප්‍රේල් 21 වන පාස්කු ඉරිදා දිනයේ ශ්‍රී ලංකාවේ...
04/09/2023

පාස්කු ත්‍රස්ත ප්‍රහාරය: චැනල් 4 ආන්දෝලනාත්මක වීඩියෝව සැප්. 5 එලියට !

2019 අප්‍රේල් 21 වන පාස්කු ඉරිදා දිනයේ ශ්‍රී ලංකාවේ සිදුවූ බිහිසුණු ත්‍රස්ත බෝම්බ ප්‍රහාර මාලාව සම්බන්ධයෙන් වූ විශේෂ වාර්තා වැඩසටනක් සැප්තැම්බර් මස 05 වෙනිදා රාත්‍රී බ්‍රිතාන්‍යයේ Channel 4 නාලිකාව ඔස්සේ විකාශය වීමට නියමිතය.

මෙම විශේෂ වැඩසටන අගෝස්තු 15 දා Channel 4 නාලිකාව ඔස්සේ විකාශය වීමට නියමිතව තිබුනද එහි ඇතැම් තාක්ෂණික දෝෂ ඇතැයි සඳහන් කරමින් එදින විකාශය නොකළේය.

තමිල් මක්කල් විඩුතලයි පුලිකල් පක්ෂයේ (TMVP) නායක සිවනේසතුරෙයි චන්ද්‍රකාන්තන් ගේ (පිල්ලෙයාන්) ගේ මාධ්‍ය ලේකම්ව සිටි අසාද් මවුලානා විසින් පාස්කු ත්‍රස්ත ප්‍රහාරය සම්බන්ධයෙන් සිදුකළ බරපතල අනාවරණයන් කිහිපයක්ම මෙම වීඩියෝ වැඩසටහනේ අන්තර්ගතව ඇතැයි පැවසේ.

පාස්කු සිද්ධිය සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ, නීතිපතිවරයා සහ රාජ්‍ය බුද්ධි අංශයේ ප්‍රධානි මේජර් ජනරාල් සුරේෂ් සලේ ඇතුළු රජයේ බලධාරීන් කිහිපදෙනෙකු වෙත මෙම වාර්තා වැඩසටහනින් චෝදනා එල්ලවී ඇතැයි විදෙස් මාධ්‍ය වාර්තා කරයි.

සැප්තැම්බර් 05 වෙනිදා බ්‍රිතාන්‍ය වේලාවෙන් 11.05 ට විකාශනය වීමට නියමිත මෙම වැඩසටහනට මේවනවිටත් ජාත්‍යන්තර වශයෙන් පුළුල් ප්‍රචාරයක් ලැබී ඇත.

බදුල්ල බණ්ඩාරවෙල ප්‍රධාන මාර්ගයේ දෙමෝදර ජල පවිත්‍රාගාරය ආසන්නයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයෙන් ඉවතට පෙරලීයෑමෙන් අද(15) උ...
15/07/2023

බදුල්ල බණ්ඩාරවෙල ප්‍රධාන මාර්ගයේ දෙමෝදර ජල පවිත්‍රාගාරය ආසන්නයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයෙන් ඉවතට පෙරලීයෑමෙන් අද(15) උදෑසන 10.30 ට පමන සිදුවූ අනතුරකින් එහි ගමන්කල කිහිපදෙනෙකු තුවාල ලබා දෙමෝදර සහ බදුල්ල රෝහල් වලට ඇතුලත් කෙරුනා.

பஸ் ஒன்று குடைசாய்ந்து வீழ்ந்தநிலையிலும் நைசாக நழுவிச் சென்ற கார் சாரதியின் கல்நெஞ்சம்

பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் தெமோதர நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (15) காலை 10.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலர் காயமடைந்து தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

බදුල්ල බණ්ඩාරවෙල ප්‍රධාන මාර්ගයේ දෙමෝදර ජල පවිත්‍රාගාරය ආසන්නයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයෙන් ඉවතට පෙරලීයෑම.....

26/06/2023

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09.07.2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது அதனை சமூக ஊடகங்களில் நேரடியாக இவரும் ஒளிபரப்பியிருந்தார்

எனவே குறித்த தீவைப்பு சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பியத் நிகேஷல சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்பாராத ஏதோ ஒரு சம்பவம் காரணமாக பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளதாக  அமெர...
22/06/2023

காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்பாராத ஏதோ ஒரு சம்பவம் காரணமாக பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

அதன்படி அந்த சிறிய நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பாரிய நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை மேலும் தெரிவித்துள்ளது.

18/06/2023

ஸ்போக்கன் சிங்களம்- புதிய வகுப்புகள் ஆரம்பம்

தமிழ்பேசும் சமூகத்தின் சிங்கள மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் குறைந்த கட்டணத்தில் சிங்கள மொழி பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் என்.எம்.சி. கல்லூரியின் புதிய சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் மாதமொன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெறும். மாதக்கட்டணம் வெறும் 1200 ரூபாய் மட்டுமே

உங்கள் நேர வசதியைப் பொறுத்து கீழ்வரும் எந்தவொரு வகுப்பிலும் இணைந்து கொள்ள முடியும்

வார இறுதி நாட்கள்

சனி-ஞாயிறு

1. காலை 09.00 மணி தொடக்கம் 10.30 வரை
https://chat.whatsapp.com/BpUSgO74TSED6UruIsSDvm

2. காலை 10.30 தொடக்கம் 12.00 மணிவரை
https://chat.whatsapp.com/D0cwL8PVz6YKdCwl2FvTZU

3. பிற்பகல் 2.00 தொடக்கம் 3.30 மணிவரை
https://chat.whatsapp.com/B6o6V8AFXJJ5hjDDLgVh8D

4. பிற்பகல் 4.00 தொடக்கம் 5.30 வரை
https://chat.whatsapp.com/DxwclxdouRy7Q6AtpdC1sm

5. பிற்பகல் 6.00 தொடக்கம் 7.30 மணிவரை
https://chat.whatsapp.com/FoPdqBpSwwLLBPaSnLG2cP

வார நாட்கள்

1. மாலை 5.00 மணி தொடக்கம் 6.30 வரை
https://chat.whatsapp.com/IvyCeUJ3fmiAf3KHrV94fe

2.மாலை 6.30 தொடக்கம் 8.00 வரை
https://chat.whatsapp.com/E2s3UdbTXlc0AjXf6eHfBx

இரவு விசேட வகுப்பு

பி.ப.8.15 தொடக்கம் இரவு 9.30 வரை
https://chat.whatsapp.com/Hi5EroeVAarKb7d4tmamIn

உங்களுக்கு வசதியான நேரத்தைக் கொண்ட வட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

வகுப்பு தொடர்பான கற்றல் வழிகாட்டல்கள் மற்றும் பாடவிளக்கங்கள் அந்தந்த வட்சப் குரூப்புகளில் பகிரப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 077 4940026

06/06/2023

ஜப்பான் நாட்டில் இலவச வேலைவாய்ப்பு

தகுதியானவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

31/05/2023

நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 15ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 318 ரூபாவாகும்

95 ஒக்டேன் யூரோ 4 பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 20ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 385 ரூபாவாகும்

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீட்டருக்கு 10ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 340 ரூபாவாகும்

மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு 50 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் புதிய விலை 245 ரூபாவாகும்.

தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு 60 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் புதிய விலை 270ரூபாவாகும்.

15/05/2023

#கிண்ணியா_அண்ணல்_நகர்_பிரதேசத்தில்_பதட்டம்
இந்தச் சிறுவனை இன்று மாலையில் இருந்து காணவில்லை
உதவிக்காக பொதுமக்கள் பிரதேசத்தில் தேடுதலில்
இதுவறை எந்த தகவலும் கிடைக்கவில்லை

16.05.2023

10/05/2023

மறதி நோயால் மாடியில் இருந்து குதித்த மாணவி

கண்டி பெண்கள் பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி நேற்று (09) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பாடசாலையின் மாணவர் தலைவராகவும் அவர் செயற்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை, களுகமுவ வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மாணவிக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும் மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

​​சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மாணவனின் தலை, உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறிக்கை கிடைத்த பிறகு மேல் சிகிச்சை தொடங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Lankanewsmail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lankanewsmail:

Share