Malaikuruvi

Malaikuruvi Latest News From Sri Lanka/India/World
news in Tamil

கொட்டகலையில் களத்தில் இறங்கிய பிரதேச சபை!பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை ப...
15/09/2026

கொட்டகலையில் களத்தில் இறங்கிய பிரதேச சபை!

பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் செயற்படுத்தப்படும் 2026 உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளையொட்டி, இன்று (15) கொட்டகலை ஈர நிலப்பூமியில் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன்,கணபதி கண்ணதாசன்,அமித்த ஆனந்த, கோவிந்தராஜ் நேசமலர்,ரசிக்கா ஜீவனி,விஜயசீலன் சுதர்சன்,செயலாளர் சிவராம் ராஜவீரன், உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கொட்டகலை பகுதியில் உள்ள 17 தோட்ட மக்கள் ஒன்றிணையும் கோலாகல விநாயகா் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் செப்டம்பர் 20 ஆம் த...
15/09/2026

கொட்டகலை பகுதியில் உள்ள 17 தோட்ட மக்கள் ஒன்றிணையும் கோலாகல விநாயகா் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் செப்டம்பர் 20 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறுகிறது.

மண்வெட்டி தோட்டத்தின் ஆலய முன்றலில் ஆரம்பமாகும் ஊர்வலத்தில், பெரிய மண்வெட்டி தோட்டம் (KO),சின்ன மண்வெட்டி தோட்டம் (DD),ஸ்டோனி கிளிப் (கல்மதுரை) தோட்டம், ஹரிண்டன் தோட்டம் ,விளாத்தாங்கொடை தோட்டம் (Lockhill),செல்வகந்தை தோட்டம் (Charmers),கிளாத் தோட்டம் (Ethan Side),விக்டன் * பெரிய மூங்கில் தோட்டம் (Forest Creek A),சின்ன மூங்கில் தோட்டம் (Forest Creek B),அந்தோணிமலை (Wellington),ராணிய்யூ (Derry Clare),கொட்டகலை நகரம், பத்தனை நகரம், கியூ சென் ஜோன் டிலரி தோட்டம், கிறிஸ்லாஸ்பாம் K.O ஆகிய 17 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இணைக்கப்பட்டுப் பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை இலங்கை விஸ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தன் தலைமை தாங்குகிறார்.

விழாவில் சிறப்பம்சமாக சிறப்பு சொற்பொழிவுகளும் 18 ஆம் திகதி இரவு கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் மலையக இசைக்குழுவான FANTACY இசைக்குழுவின் பக்திப் பரவச இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

பன்விலை நிருபர் ம. நவநீதன்

15/09/2026

நுவரெலியாவில் வண்டிக் குதிரைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகர சபை திணறி வருகிறது. இதனால், குதிரைகள் கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரிந்து வாகன விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

கடந்த 13 ஆம் திகதி வீதியில் துள்ளிக்குதித்த குதிரையொன்று, வாகனமொன்றில் மோதிக் கம்பீரமாய் எழுந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

குதிரை உரிமையாளர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகர சபையும் குதிரைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவற்றின் உரிமையாளர்களும் மெத்தனப்போக்கில் செயற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா

14/09/2026

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று 14ஆம் திகதி மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் பனி மூட்டம் நிலவுகிறது. காட்மோர், சாமிமலை, பெயர்லோன், மறே, நல்லதண்ணி, ஹப்புகஸ்தனை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா விசேட நிருபர்

மஸ்கெலியா பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்ச்சிகள் ஆரம்பம்!பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டு...
14/09/2026

மஸ்கெலியா பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்ச்சிகள் ஆரம்பம்!

பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தலைமையில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்ச்சி, இன்றைய தினம் (செப்டம்பர் 14) மஸ்கெலியா DMD கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு நிலுவைப் பணம் வழங்கப்பட்டுப் பதிவு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மஸ்கெலியா சந்தைத் தொகுதி கடைக் கூலியும் பெற்றுகொள்ளப்பட்டது.

குத்துச்சண்டை போட்டியில் சாதனைமேல் சாதனை நிகழ்த்தும் கேம்பிரிட்ஜ் கல்லூரி!அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடைய...
14/09/2026

குத்துச்சண்டை போட்டியில் சாதனைமேல் சாதனை நிகழ்த்தும் கேம்பிரிட்ஜ் கல்லூரி!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜயா, அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி சார்பாக 02 மாணவிகள் பங்குபற்றினர்.

அவர்களில் தரம் 10 (பி)இல் கல்வி பயிலும் மாணவி செல்வி கி. லதூர்ஷியா, இறுதிப்போட்டி வரை விளையாடி, வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்து பாடசாலைக்கும் தன் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ளார்.

இந்த வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அதிபர்,பாடசாலை நிர்வாகக் குழுவினர்,பகுதி தலைவர்கள், பாட ஆசிரியர்கள், மாணவிகளுக்கான குத்துச்சண்டை பயிற்சியை வழங்கிய ஆசிரியர் செ. செபஸ்டியன் ஆகியோர் பாராட்டப்படுகின்றனர்.

மாணவி லதுர்ஷியா, ஆசிரியர்களான கிருஸ்ணகுமார்,இந்திரா ஆகியோரின் புதல்வியாவார்.

கொட்டகலையில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்!பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்ட...
14/09/2026

கொட்டகலையில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்!

பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டெம்பர் 14 முதல் செப்டெம்பர் 19 வரை செயற்படுத்தப்படும் உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்ச்சி இன்றைய தினம் (14) கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி,உறுப்பினர்கள், மதுவரி திணைக்கள அதிகாரி, திம்புள்ளை பத்தனை பொலீஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கொட்டகலை தபால் நிலைய அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன்,முன்னாள் செயலாளர் விஜேசுந்தரம், கொட்டகலை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குப்பை அகற்றுவது பற்றி ஆழமான கலந்துரையாடல்!அம்பகமுவை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதிகளின் சுகாதாரமேம்பாடு,...
14/09/2026

குப்பை அகற்றுவது பற்றி ஆழமான கலந்துரையாடல்!

அம்பகமுவை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதிகளின் சுகாதாரமேம்பாடு, கழிவகற்றல் தொடர்பாக சபை உறுப்பினர்கள் துறைசார்ந்த அதிகாரியுடன் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

வட்டவளை சென் எலியால் கிராமத்தில் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையம் அமைக்கும்போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியம் தொடர்பாகவும் மக்களுக்கு கழிவகற்றல், தரம்பிரித்தல்,உள்ளுராட்சி மன்றங்கள் தோட்டப் பகுதிகளிலும் குப்பை சேகரிக்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இன்று (14) அம்பகமுவை பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் கணேஷ் அவர்களோடு அம்பகமுவை பிரதேசசபை உறுப்பினர்களான இரா.ஜீவன் இராஜேந்திரன்,செ. விக்கினேஸ்வரன் வ. சுவர்ணலதா ஆகியோர் கலந்துரையாடலைமேற்கொண்டனர்

வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவை, மத்திய, ஊவா,தென் ஆகிய மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்குக் கடுமையான மின்னல் தாக்கம் த...
14/09/2026

வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவை, மத்திய, ஊவா,தென் ஆகிய மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்குக் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (14) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 வரை அமுலில் இருக்கும். எதற்கும் தயாராக இருங்கள்!

இலங்கையின் மூத்த கலைஞரும் பாடகியும் அனுபவம் வாய்ந்த நடன ஆசிரியையுமான தயா நெல்லம்பிட்டிய, தனது 91ஆவது வயதில் காலமானார். க...
14/09/2026

இலங்கையின் மூத்த கலைஞரும் பாடகியும் அனுபவம் வாய்ந்த நடன ஆசிரியையுமான தயா நெல்லம்பிட்டிய, தனது 91ஆவது வயதில் காலமானார்.

களுபோவிலையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பல முன்னணிப் பாடசாலைகளில் பல ஆண்டுகளாக நடன ஆசிரியராகப் பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, கண்டிய நடன மரபைப் பாதுகாத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்த சிறந்த ஆசிரியராக அறியப்பட்டவர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Malaikuruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share