Ashroff Ali-அஷ்ரப் அலீ

Ashroff Ali-அஷ்ரப் அலீ Media Consultant/Media Secretary/Journalist/ Announcer/ Asst.Director In Film Industries/ Documentary Director/ Translator/Web Designer/Digital Marketer

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .

நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....

26/09/2025

பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ராஜினாமா

இலங்கை-பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று மாலை இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்த்தில் இந்த தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை -பலஸ்தீன நட்புறவுச் சங்கம் ஆரம்பமான காலம் தொட்டு நீண்ட காலமாக அதன் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகித்திருந்தார்.

அதன் பின்னர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர்களாக பதவி வகித்திருந்தனர்.

26/09/2025

அடுத்தவரின் கருத்தை அப்பட்டமாக பிரதிபண்ணிய ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னொருவரின் கருத்தை அப்பட்டமாக பிரதிபண்ணி உரையாற்றியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது உரையின்போது ''ஊழலுக்கு எதிரான போர் ஆபத்தானது, ஆயினும் அதற்காக போராடாமல் இருப்பது அதனை விடவும் ஆபத்தானது '' என்றொரு கருத்தை தொனிப்பொருளாக வைத்து தனது உரையை ஆற்றியிருந்தார்.

குறித்த கருத்து ஜனாதிபதியின் சொந்தக் கருத்து என்றும், சர்வதேச மட்டத்தில் ஜனாதிபதி புதிய மேற்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் புகழாரம் சூட்டத் தொடங்கியிருந்தனர்

எனினும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்து குறித்த கருத்தானது, அவரது சொந்தக் கருத்து அல்லவென்றும், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமேயின் (Paul Kagame) புகழ்பெற்ற கருத்துக்களில் ஒன்று என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நைஜீரியாவின் அபுஜா நகரில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் போல் ககாமே குறித்த கருத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார்.

அதன்போது அவர் நைஜீரியாவின் பெண் எழுத்தாளரான Ngozi Okonjo-Iweala என்பவர் எழுதியுள்ள Fighting Corruption Is Dangerous: The Story Behind the Headlines (2018) எனும் நூல் குறித்து குறிப்பிட்டு, குறித்த எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுத வேண்டும் என்றும் அதில் ''ஊழலுக்கு எதிராக போராடாமல் இருப்பது அதனை விட ஆபத்தானது'' (“Not Fighting Corruption Is Even More Dangerous” ) எனும் கருத்தை எழுத்தாளர் உள்ளடக்க வேண்டும் என்றும் போல் ககாமே வலியுறுத்தியிருந்தார்.

ககாமேயின் குறித்த கருத்து ''ஊழலுக்கு எதிரான போர் ஆபத்தானது , ஆனால் அதற்காக போராடாமல் இருப்பது அதனை விட ஆபத்தானது'' எனும் தொனிப்பொருளில் உலகப் புகழ்பெற்றது.

அதனையே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் தன் சொந்தக் கருத்து போன்று முன்வைத்துள்ளார்.

சர்வதேச நிகழ்வொன்றில் அடுத்தவரொருவரின் கருத்தை அப்பட்டமாக பிரதிபண்ணி, கருத்தின் சொந்தக்காரரை குறிப்பிடாமல் சொந்தக் கருத்து போன்று ஜனாதிபதி முன்வைத்தமையானது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் ஜனாதிபதிக்கும் பெருத்த அவமானமாகும்

24/09/2025

அமைச்சர்கள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரின் மனைவிமாருக்கு எதிராகவே மேற்குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவஜனதா பெரமுண கட்சி குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவின் மனைவி ஒரு அரசாங்கப்பாடசாலை ஆசிரியை. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் ஆறுமில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை ஆராய வேண்டும்.

அதே போல அமைச்சர் சமந்த வித்தியாரத்னவின் மனைவியும் ஒரு ஆசிரியையே. அவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளார். அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நவஜனதா பெரமுண கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

23/09/2025

மாலிமா அரசாங்கத்தின் புதிய கொள்கை

லஞ்சம் கொடுப்பவர் விருப்பத்துடன் கொடுத்து, வாங்குபவர் விருப்பத்துடன் அதை வாங்கிக் கொள்ளும் பட்சத்தில் லஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் ஒன்றும் செய்ய முடியாது.

-இதையும் நியாயப்படுத்த மாலிமா மடையர்கள் வரிசையில் ஓடிவருவார்கள்

''மாலிமாவ'' மார்க்கத்தைப் பின்பற்றும் முட்டாள் அடிமைகளின் கவனத்துக்குசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் இந்தக் கேள்விக்க...
14/09/2025

''மாலிமாவ'' மார்க்கத்தைப் பின்பற்றும் முட்டாள் அடிமைகளின் கவனத்துக்கு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாராவது பதில் தர முடியுமா?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் தொட்டு பலஸ்...
09/09/2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் தொட்டு பலஸ்தீன எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உருவாக்கியுள்ள சட்டவிரோத சபாத் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு அரசாங்கமே முன்னின்று பாதுகாப்பை வழங்கி வருகின்றது.

இஸ்ரேலியக் கொடியை காலால் மிதிக்கும் புகைப்படமொன்றை மொபைல் போனில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக மாவனல்லை ருஷ்தியை நீண்ட காலம் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து அடிப்படை உரிமைகளை மீறியது. தடுப்புக் காவல் உத்தரவு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அனுரகுமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய எதிர்ப்புக் கவிதைகளுக்காக ஏறாவூரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் கூட இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பலரை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினர் சென்றிருந்தனர். பலஸ்தீன ஆதரவு எழுத்தாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வெளிப்படையாகவே அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி .நாடாளுமன்றத்தில் ஆதாரபூர்வமாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் அரசாங்க தொலைக்காட்சியான ரூபவாஹினியின் நிகழ்ச்சியொன்றில் இந்திய-இலங்கை நாடுகளில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை உருவாக்க இஸ்ரேலிய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் Guy Nir என்பவரை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டிருந்தது.

அண்மையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வருவதற்கான வீசா கட்டணம் ரத்துச் செய்யப்பட்டு இலவச வீசா வழங்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைக்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி, இலங்கையில் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு 'கல்வி' அளிக்க இஸ்ரேல் அரசின் நிதியுதவியுடன், ஐந்து நாள் 'கல்விச் சுற்றுப்பயணம்' என்ற பெயரில் இலங்கையின் 16 பத்திரிகையாளர்கள் குழு தற்போது இஸ்ரேலுக்கு சென்றுள்ளது.

குறித்த ஊடகவியலாளர்களின் இஸ்ரேலியப் பயணம் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் அனுருத்த லொகுஹபு ஆரச்சியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மிக முக்கியமாக, இந்த சுற்றுப்பயணம் இலங்கை அரசாங்கத்தின் ஆசியுடன் நடைபெற்றிருப்பதற்கான இன்னொரு ஆதாரம் என்னவெனில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் மேற்குறித்த ஊடகவியலாளர் குழுவை உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். ஊடகவியலாளர் குழுவுடன் புகைப்படங்களையும் எடுத்து சமூக லலைத்தளங்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் ஓர் இனவாத பிரச்சினையை உருவாக்கவதற்காகவே ஊடகவியலாளர்கள் 16 பேரை பயிற்சிக்கு இஸ்ரேலுக்கு அரசு அனுப்பியிருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

இதுபோன்ற திட்டங்கள் புதியவை அல்ல,

ஏனெனில் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இஸ்ரேல் அழைத்துள்ள குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில 'ஊடகவியலாளர்களை' பற்றி உற்று நோக்குவோம்.

வெறித்தனமான இனவெறி மற்றும் சியோனிஸ்ட் - மதுபாஷண பிரபாத் ரணஹன்சஸ்ரீ
இவர் சிங்கள ராவயவின் தீவிர உறுப்பினர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவரும் அவரது குண்டர் குழுவும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைக்கருத்துக்களை வெளியிட்டு வருவதையும், சமீப காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.

அத்துடன் இவர் எந்த வகையிலும் ஒரு ஊடகவியலாளர் கிடையவே கிடையாது. பக்கா இனவாத சமூகவலைத்தள பதிவர் மட்டுமே.

இந்த சுற்றுப்பயணத்தில் சிங்கள ராவயவைச் சேர்ந்த ஜனேந்திர ஆரியபாலவும் பயணித்து இருக்கின்றார். சிங்கள ராவய தமிழ் மற்றும் இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவதற்குப் பெயர் பெற்ற ஓர் அமைப்பு. .

அடுத்து, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களான பிரசாத் தொடங்கொடகே மற்றும் விஜய திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எமது நாட்டின் தேசிய ஊடகங்களின் பிரதிநிதிகளாக, பொதுமக்களாகிய எங்களின் நிதியையே அரசு ஊடகங்களை நடத்துவதற்குச் செலவிடுகிறது, ஆகவே நடுநிலை வகிக்கவேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.

ஆனால் அவர்கள் இப்போது இஸ்ரேலில் இருந்து முற்றிலும் ஒருதலைப்பட்சமான கருத்தோடு திரும்புவதால். அரசாங்கம் அவர்களின் கண்ணோட்டங்களை சமநிலைப்படுத்த உதவுமா அல்லது நிதியளிக்குமா? அவர்கள் இலங்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து வெளியிடப்படும் பக்கச்சார்பான அறிக்கையிடல்/ஆச்சரியமான கட்டுரைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்குமா?

இந்தச் சந்திப்பில்இ இஸ்லாமிய வெறுப்பு வார்த்தை ஜாலங்களைத் தூண்டுவதற்கும்இ பல ஆண்டுகளாக வெறித்தனமான இனவாதிகளுக்கு தளங்களை வழங்குவதற்கும் பெயர் பெற்ற லங்காதீப, அத தெரண, ஹிரு டிவி மற்றும் சண்டே ஐலண்ட் ஆகியவற்றின் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது டாக்டர் ஷாஃபியின் வழக்கு, ஹலால் தடை பற்றிய கதைகள், முஸ்லிம் வதை கொத்து போன்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னணியில் இருந்த ஊடகவியலாளர்களே இந்தச் சுற்றுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வருங்காலங்களில் இவ்வாறானவர்கள் எழுதவுள்ள இஸ்ரேல் ஆதரவு கதைகள் இங்கே இணைக்கப்படும்போது இலங்கையில் இனங்களுக்கிடையேயான உறவுகளில் ஏற்படப்போகும் தாக்கம் நல்லதல்ல.

தீவிர வலதுசாரிகள் மீண்டும் வெளிப்படையாக எழுச்சி பெற்று வரும் நிலையில், குறிப்பாக இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, இனவெறி பிடித்தவர்களால் ஊடகங்கள் எவ்வளவு விரைவாக ஆயுதம் ஏந்த முடியும் என்பதை நன்கு அறிந்திருக்கும் நிலையில், சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்ட இனப்படுகொலை அரசுக்கு பத்திரிகையாளர்களையும் இனவெறி குழுக்களின் முக்கிய உறுப்பினர்களையும் அனுப்புவது எப்படி ஒரு பொறுப்பான செயலாகும்?

குறிப்பாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு புதிய வகை அரசியலை உறுதியளித்துள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து உருவாக்கக்கூடிய சாத்தியமான சியோனிச மற்றும் இஸ்லாமிய வெறுப்பு உள்ளடக்கத்தை NPP அரசாங்கம் எவ்வாறு நிர்வகிக்கும்?

நாங்கள் இதற்கு முன்பு பல முறை இந்தப் பாதையில் பயணித்திருக்கிறோம்இ மேலும் இது நம் நாட்டின் ஏனைய தேசிய இனங்களுக்கு ஒருபோதும் நல்ல முடிவு கிடையாது.

தர்கா டவுன், திகன. மினுவாங்கொட ஆகிய இடங்களில் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களும், முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவங்களும்இ அவர்களின் நினைவை உலுக்க வேண்டும்.

பலஸ்தீன மக்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பதில் NPP அரசாங்கத்தால் இன்னும் ஒரு உறுதியான பொது நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் அரசின் தொடர்ச்சியான இனப்படுகொலையை நேரடியாகக் கண்டிக்க முடியவில்லை .

அவ்வாறான நிலையில் குறைந்தபட்சம் நமது நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு உறுதியான நடவடிக்கையாக. பிரதான நீரோட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் விரைவில் பூசப்படவுள்ள இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரத்தைக் கண்காணிப்பதில் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது

தேசிய மக்கள் சக்தி அராசங்கத்தின் இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகள் எதுவும் அதன் அறிவுகெட்ட அடிமை முஸ்லிம்களின் புத்தியில் உறைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் புத்தியை மாலிமாவ முன்பாக அடகு வைத்த பின்னர்தான் அதன் ஆதரவாளர்களாக மாறி தற்போது தங்கள் சகோதர முஸ்லிம் சமூகத்தையும் மறந்து மாலிமாவ தான் தங்கள் மார்க்கம் என்ற அளவில் வெறிபிடித்த அடிமைகளாக மாறிப் போயுள்ளனர்.

கட்டாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல்கட்டார் தலைநகர் டோஹாவில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் மு...
09/09/2025

கட்டாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல்

கட்டார் தலைநகர் டோஹாவில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனினும் இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் இருந்து ஹமாஸ் தலைவர்கள் உயிர்தப்பித்துக் கொண்டுள்ளதாக கட்டார் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை சமூகங்களை வில்லனாக்கும் பேரினவாதிகளின் நாடகங்கள் மீண்டும் அரங்கேற்றம்அண்மைக்காலமாக -அதுவும் தேசிய மக்கள் சக்த...
06/09/2025

சிறுபான்மை சமூகங்களை வில்லனாக்கும் பேரினவாதிகளின் நாடகங்கள் மீண்டும் அரங்கேற்றம்

அண்மைக்காலமாக -அதுவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர்- அதிகாரத் தரப்பு, அதிகாரிகள் தரப்புகள் சேர்ந்து சிறுபான்மை மக்களை வில்லன்களாக சித்தரிக்கும் நாடகங்கள் அதிகளவில் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

ஒரு பக்கம் பாதாள உலகக் கும்பல்களை கட்டுப்படுத்தத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசாங்கம், அவற்றுக்கான ஆயுத விநியோகஸ்தர்களாக தமிழ் மக்களை நோக்கி கைநீட்டும் நாடகமொன்றை அரங்கேற்றிப் பார்த்தது. ஆனால் அது பிசுபிசுத்துப் போய்விட்டது.

முன்னைய காலத்தில் கடும் இந்திய எதிர்ப்பாளர்களாக இருந்து தற்போதைக்கு தீவிர இந்திய அடிமைச் சேவகர்களாக மாறியுள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கு முழுவதையும் இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்தேனும் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள கடும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்குத் தடையாக இருக்கும் தமிழ் மக்களை இந்திய எதிர்ப்பாளர்களாக சித்தரித்து இந்தியாவிடம் நல்ல பெயர் எடுப்பதிலும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்குள் போட்டி ஏ;றபட்டுள்ளது.

இன்னொரு புறம் அருகம்பையில் அடாவடி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை அடக்கத் துப்பில்லாத அரசாங்கம், அவர்களின் அத்துமீறல்களை சகித்துக் கொள்ள தயாரில்லாத முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்பட்டது. அருகம்பை சம்பவம் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அந்த விசாரணைகளுக்கு என்ன ஆனது என்பது இப்போது மூடுமந்திரமாக மாறிப் போய்விட்டது. அதே நேரம் சுற்றுலா வீசாவில் வந்து அருகம்பையில் உள்ளூர்வாசியொருவரை தாக்கி, பொலிசாரிடமும் வன்முறைத்தனமாக நடந்து கொண்ட இஸ்ரேலிய சண்டியன் ஒருவனைக் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் தண்டிப்பதற்குப் பதில் அவனை பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இப்போது பாதாள உலகக்கும்பல்களின் மோதல்கள் காரணமாக பாணந்துறை குடுசலிந்துவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து பாதாள உலகக்கும்பல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் என்பவன் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக அரசாங்கம் கதை கட்டி விட்டுள்ளது. இவ்வளவுக்கும் குறித்த கஞ்சிபாணி இம்ரான் என்பவன் இந்த அரசாங்கத்தின் தீவிர அபிமானி. முரட்டு முட்டுக்களில் ஒருவன். அவனைக்கொண்டே முஸ்லிம்களுக்கு தீவிரவாதப் பட்டம் சூட்டுவதில் அரசாங்கம் தற்போது இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கெனவே சூப்பர் முஸ்லிம்கள் என்றொரு தீவிரவாத அமைப்பு கல்முனையில் இருப்பதாக ஜனாதிபதி வரை உளறித் தள்ளிவிட்டது அதை அப்படியே வசதியாக மறந்த தேசிய மக்கள் சக்தி எனும் மக்கள் விரோத அரசாங்கம் இப்போதைக்கு கஞ்சிபாணி இம்ரான் ஐ.எஸ்.கும்பலை இலங்கையில் வளர்த்தெடுக்கப் போவதாக ஒரு கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் இந்த அரசாங்கத்துக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கும் அளவுக்கு இவர்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவோ, சிறுபான்மை பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவோ போவதில்லை. அதற்குப் பதில் தீவிரவாதப் பூச்சாண்டி காட்டி ஒரு பக்கம் சிறுபான்மை மக்களை அடக்கி வைத்துக் கொண்டே மறுபக்கம் பெரும்பான்மைமக்களிடம் அதையே சாதனையாகக் காட்டி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான இத்துப்போன உத்தியொன்றை இப்போது இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் கையாளத் தொடங்கியுள்ளனர்.

இவர்களின் சிறுபான்மை விரோதப் போக்குகள் அறியாத அடிவருடி அடிமைகள் வழக்கம் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

03/09/2025

இவ்வருடத்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு சற்று முன்னர் வெளியானது

31/08/2025

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று வகை எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தற்போதைக்கு ரூ.289 ஆக சந்தையில் விற்பனை செய்யப்படும் வெள்ளை டீசல் ஆறு ரூபா விலை குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 283 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் 4ஸ்டார் யூரோ 4 தற்போதைக்கு ரூ 325 ஆக விற்பனை செய்யப்டும் நிலையில் அதன் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் புதிய விலை ரூ. 313 ஆகும்.

ஒக்டேன் 92 பெற்றோலின் விலை ஆறு ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முன்னர் 305 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 பெற்றோல் தற்போதைக்கு 299 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்யின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேட்டை பகிரங்கப்படுத்திய மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணைபிரதமர் அலுவலக வாகன ஏல வி...
28/08/2025

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேட்டை பகிரங்கப்படுத்திய மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணை

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அதன்போது வாகனங்களின் உரிய பெறுமதியை விட குறைவான விலையில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசேட மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்க சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

அத்துடன் அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் சம்பவம் தொடர்பில் கடிதமொன்றை எழுதி, அதனையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

குறித்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பாக தற்போது மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளத.

காமினி ரணசிங்கவின் சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் மேற்கொண்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை தொடர்பில் முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

28/08/2025

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயமாக சீவலி அருக்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் எதுவித சோதனைகளும் இன்றி சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட , கொள்கலன் மோசடியுடன் சீவலி அருக்கொடவுக்கு தொடர்பிருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ட்டிருந்தது
சுமத்தியிருந்தது

ஆயினும் சீவலி அருக்கொட மீது அரசாங்கம் ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியது மட்டுமன்றி அவருக்கு தற்போதைக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எவ்வாறு இவ்வாறானதொரு உயர்பதவியை வழங்க முடியும் என்று எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியது போன்று கொள்கலன் விடுவிப்பு மோசடியில் அரசாங்கத்துக்கு நேரடித் தொடர்பு இருந்தமை காரணமாகவே அதனுடன் தொடர்புடைய நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ashroff Ali-அஷ்ரப் அலீ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashroff Ali-அஷ்ரப் அலீ:

Share