Vaibz News தமிழ்

Vaibz News தமிழ் VAIBZ News is an authorised and registered news website in Ministry of Mass Media of Sri Lanka.

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில்  முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் 'அந்தோனி' திரைப்படம்  வெளியாகவுள்ளது.
13/09/2025

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் 'அந்தோனி' திரைப்படம் வெளியாகவுள்ளது.

Jaffna International Cricket Stadium, யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இப்படித்தான் அமையப்போகிறது.3D அமைப்பில் திட்டமிடப்...
05/09/2025

Jaffna International Cricket Stadium, யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இப்படித்தான் அமையப்போகிறது.

3D அமைப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் மைதானம் மற்றும் புற அமைப்பு.

கிளிநொச்சி இராமநாதபுரம், புதுக்காடு திருவருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் ஆலயம் வருடாந்த பெருவிழா -2025  விஷேட நிகழ்வ...
04/09/2025

கிளிநொச்சி இராமநாதபுரம், புதுக்காடு திருவருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் ஆலயம்
வருடாந்த பெருவிழா -2025 விஷேட நிகழ்வுகள்

தெல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ரதோற்சவம்
04/09/2025

தெல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ரதோற்சவம்

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின்  நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்- பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்த...
03/09/2025

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

- பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, கிராமங்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்

- ஜனாதிபதி

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வில் (02) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த செப்டம்பரில் நாடு முழுவதும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்யாமல், மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமாக செலவிடும் பழைய பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

பரந்தன்- கரச்சி- முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் வாவிக்கு அருகில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் தினமும் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நீண்ட காலமாக பாலம் பழுதுபார்க்கப்படாததால், மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் புதிய இருவழிப் பாலமாக இதனை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1.4 பில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 2027 செப்டம்பர் 02 ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 1.8 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க மதிப்பிடப்பட்ட இந்த திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் ஊழலற்ற ஆட்சியின் காரணமாக 1.4 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க குறித்த நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. . எஞ்சிய ரூ. 400 மில்லியன் வன்னி மாவட்டத்தில் பாதைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு வடக்கில் பாலங்கள் மற்றும் பாதைகள் அமைப்பதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு இந்த ஒதுக்கீடு மேலும் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தற்போதைய அரசாங்கம் வடக்கின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் அதே வேளையில் நாட்டை முழுவதுமாக கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தை ஒரு கற்பனையான கண்ணோட்டத்தில் இருந்தும், முன்பிருந்த அரசாங்கங்களைப் போன்று பார்க்காமல், அதன் பணிகள் மற்றும் செயல்கள் மூலம் மதிப்பிடுமாறு அவர் மக்களை கோரினார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நி...
03/09/2025

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் முந்தைய பதவிகள்

01. திரு. எஸ்.எஸ்.கே. விதான மாவட்ட நீதிபதி
02. திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க மாவட்ட நீதிபதி
03. திரு. ஏ.எம்.எம். ரியால் மாவட்ட நீதிபதி
04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ, மாவட்ட நீதிபதி
05. திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் மேலதிக மாவட்ட நீதிபதி
06. திரு. ஜே. கஜனிதீபாலன் மாவட்ட நீதிபதி
07. திரு. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின்
சிரேஷ்ட மேலதிக செயலாளர்
08. திரு. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி
09. திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி
10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்
11. திரு. ஜி.என். பெரேரா மாவட்ட நீதிபதி
12. திரு. ஏ. ஜுடேசன் மாவட்ட நீதிபதி
13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க மாவட்ட நீதிபதி
14. திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய மாவட்ட நீதிபதி
15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்
16. திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க மாவட்ட நீதிபதி
17. திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி மாவட்ட நீதிபதி
18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

திருகோணமலை -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (03) எண்ணெய் ...
03/09/2025

திருகோணமலை -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (03) எண்ணெய் காப்பு சாத்தும் சமய நிகழ்வு இடம்பெற்றது.

அதிகளவான சைவ பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் சைவ மத நிகழ்வில் ஈடுபட்டனர்.

பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமானது புனர்த்தானம் செய்யப்பட்டுள்ள நிலையில் , 5 வருடங்களுக்கு பின்னர் கும்பாபாஷேகமானது நாளை வியாழக்கிழமை (04) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"Dream Destination" முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்..! 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் "D...
02/09/2025

"Dream Destination" முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்..!

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் "Dream Destination" தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் புகையிரத நிலையங்களை தற்போதைய உலகத்திற்கு ஏற்ற வகையில் புதிய அடையாளத்துடன் நவீனமயப்படுத்துவதற்காக அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் 'Clean Sri Lanka' வேலைத்திட்டம் ஆகியவை தனியார் துறையின் ஆதரவுடன் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

புகையிரத சேவையை நவீனமயப்படுத்தல் என்பது தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு இராட்சதனை விழித்தெழச் செய்தல் ஆகும் என்று சுட்டிக்காட்டிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பொதுப் போக்குவரத்தை தரமான சேவையாக மாற்றும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் கைவிடாது என்றும் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தை முன்னேற்றுவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டை ஒரு செயற்பாட்டுத் தளமாக மாற்றுவதன் மூலம் இலங்கை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய,'Clean Sri Lanka' செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத், பணிப்பாளர் (ஒருங்கிணைப்பு) தசுன் விஜேசேகர, ஸ்டார் கார்மென்ட்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. சுகுமாரன், ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ புஞ்சிஹேவா, NIO Engineering அழைப்பாளர் லக்மின சமரசேகர ஆகியோருடன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

  | சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.
02/09/2025

| சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்  யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ம...
01/09/2025

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் நேற்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறு...
01/09/2025

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும்

- ஜனாதிபதி

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர் என்றும்.

அனைவரும் வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது.

நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது.

பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்குக் கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார்.

விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணிப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தனது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தத ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றி தெரிவித்தார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்புஅடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல...
01/09/2025

யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) செய்யும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படும்

- ஜனாதிபதி

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) செய்யும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கலுடன், இவ்வளவு காலமும் கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தொலைதூர கிராமங்களுக்குப் பரவலாக்கப்பட்டு, அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய பணிகளை, மிக நெருக்கமாக பெற்றுக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

இதுவரை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளைப் பெறுவதற்கு, வட மாகாணத்தின் ஒரே பிராந்திய அலுவலகமான வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலகுவாக அந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்படுகிறது. யாழ்ப்பாண மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்குவதைக் குறிக்கும் வகையில், மூன்று கடவுச்சீட்டுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

பின்னர், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு, அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் அரச அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளை, பணத்திற்காக அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தத் தயங்கமாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போது, இந்நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் நாட்டிற்கான தங்கள் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான அரச சேவை அவசியம் என்றும், உலகில் முன்னேற்றம் அடைந்த அனைத்து நாட்டினதும் முன்னேற்றத்திற்குப் பின்னால் வலுவான அரச சேவை இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

இன்று, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்திலிருந்து சேவைகளைப் பெறும் வசதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
ஒரு அடையாள ரீதியாக குடிவரவு மற்றும் குடியகல்வு அனுமதிகளை வழங்குவதற்காக இது இருந்தபோதிலும், அதனை விட பாரிய நோக்கத்துடன் இந்தப் பணியில் நாம் தலையிட்டுள்ளோம். எமது முழு நிர்வாக அமைப்பும் கொழும்பை மையமாகக் கொண்டுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல பணிகளுக்காக கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிர்வாகத்தை தொலைதூர கிராமங்களுக்கு பரவலாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டிய பணிகளை தமக்கு மிக நெருங்கிய வகையில் பெற்றுக்கொள்ள வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டுக்குள் கணினி மென்பொருள் அமைப்புகள் மற்றும் உங்கள் தொலைபேசி மூலம் அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் மக்கள் மேற்கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எமது அரசாங்கத்தின் முதன்மையான செயற்பாடு டிஜிட்டல் மயமாக்கல் ஆகும். மேலும், அரச சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அன்றைய தினம் நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் கணிசமான அளவு சம்பள உயர்வை வழங்குவோம் என்று அறிவித்தேன். நாங்கள் அதைச் செய்தோம். எஞ்சியுள்ள பகுதியை அடுத்த ஜனவரியில் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு வலுவான அரச சேவை அவசியம். முன்னேறிய ஒவ்வொரு நாட்டிலும் வலுவான அரச சேவை உள்ளது. நமது நாட்டில் ஒரு வலுவான அரச சேவையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

மேலும், உங்கள் கையொப்பத்திற்கு ஒரு சக்தி உண்டு. அந்த கையொப்பம் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்பட்டால், நாங்கள் உங்களை முழுமையாகப் பாதுகாப்போம்.
ஆனால் அந்த கையொப்பம் பணத்திற்காக பயன்படுத்தப்பட்டால், சட்டம் அமுல்படுத்தப்படும். நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் ஒரு அரசு நமக்குத் தேவை. நமது நாடு சட்டம் காட்டுமிராண்டித்தனமான ஒரு நாடாகவும், அரச நிறுவனங்களின் கௌரவம் அழிக்கப்பட்ட நாடாகவும் மாறியிருந்தது. மீண்டும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் கௌரவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு அரச அதிகாரிக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக, அந்த நிறுவனங்களுக்கு நாம் வசதிகளை வழங்கி வருகிறோம்.

நமது நாட்டை புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்த வடமாகாணத்திற்கு எம்மிடம் பாரிய அபிவிருத்தி திட்டம் உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், வடக்கின் மக்கள் முதல் முறையாக அரசாங்கத்தை அமைக்க வாக்களித்தனர். பிளவுபட்டு, ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்த ஒரு நாடு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தது. இப்போது நாம் செய்ய வேண்டியது, இந்த ஒன்றிணைவு வீழ்ச்சியடைய இடமளிக்காமல், அதை வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இன்று வடக்கு
மற்றும் தெற்கிலும் இதே நிலை காணப்படுகிறது. வடக்கிலோ அல்லது தெற்கிலோ மேற்கொள்ளப்படும் இந்த இனவாத அரசியல் மக்களுக்காக அன்றி அரசியல்வாதிகளுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாம் அனைவரும் இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். இனவாதம் மீண்டும் எங்கும் தலை தூக்க அனுமதிக்கக்கூடாது. இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருறோம்.

அரசாங்கமென்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நாட்டில் மீண்டும் ஒரு போர் வராது என்று நாங்கள் நம்புகிறோம்.யுத்தம் ஒன்று வரும் என்ற சிந்தித்து சிலர் செயற்பட்டார்கள் . மீண்டும் ஒரு போர் நடக்காமல் தடுக்க நாங்கள் உழைத்து வருகிறோம். மக்களுக்கு முடிந்தவரை காணிகளை வழங்க வேண்டும். மூடப்பட்ட வீதிகளைத் திறக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் சந்தேகிக்கக்கூடாது. மற்றொரு போரைத் தடுக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த மனநிலையுடன் நம் நாட்டைப் பார்க்க வேண்டும். நமது நாட்டை ஒரு புதிய சமூகத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். பழைய தோல்வியுற்ற அரசியல் இயக்கங்கள், மதவாதம் மற்றும் சாதிவாதம் என்பவற்றைப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒரு நூற்றாண்டுக்கும் முந்திய காலத்திற்குரியவை. இன்று, இனம், மதம், சாதி அல்ல, மனிதநேயம் தான் பிரதான காரணி. எனவே, அனைத்து பிளவுகளும் மனிதநேயத்திற்கு அடிபணிய வேண்டும். மனிதநேயத்தை அனைத்தையும் விட உயர்வாக கருதும் ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுதான் நம் நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலமாகும்.

மண்ணைத் தோண்டும்போது, பழைய எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன என்பதை நான் அறிவேன். இப்போது, செம்மணி பகுதியில் உள்ள புதைகுழிகள் குறித்து மிகவும் வெளிப்படையான விசாரணையை நடத்தி வருகிறோம், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற புதைகுழிகள் மீண்டும் உருவாகாத நாட்டை உருவாக்குவதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

தற்சமயம், நம் நாட்டிற்கு அவசியமானவற்றை நாம் செய்து வருகிறோம். நமது மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகள், நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுவோம். அரசியல் அதிகாரம் என்ற வகையில் நம் தரப்பில் இருந்து நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றாகக் கட்டியெழுப்புவோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் , பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜ, யாழ் மாவட்ட செயலாளர் எம். பிரிதீபன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Vaibz News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaibz News தமிழ்:

Share

GOWRI BRUNTHAN

Media Personality

Dip-in-Journalism (SRM University )

Former Presenter/ Producer (Sooriyan FM)

Former Shakthi TV News Reader