LankaFire.Com

LankaFire.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LankaFire.Com, News & Media Website, Wellawatta, Colombo.

சற்று முன் பற்றி எரிந்து கொண்டிருக்கும் கசூரினா சுற்றுலா  கடற்கரையை அண்மித்த பகுதிகள். தீயை அணைக்க போராடுகின்ற பொதுமக்கள...
20/07/2025

சற்று முன் பற்றி எரிந்து கொண்டிருக்கும் கசூரினா சுற்றுலா கடற்கரையை அண்மித்த பகுதிகள். தீயை அணைக்க போராடுகின்ற பொதுமக்கள் , பொலிஸார் , இராணுவத்தினர். தமது காணிகளை உரிமையாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தாமையினால் ஏற்பட்ட விளைவு.

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு --------------------------------------------------மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெட...
20/07/2025

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு
--------------------------------------------------
மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக MAG எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு வெள்ளிக்கிழமை (18) மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் இன்றைய தினம் (20) அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடநிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததோடு குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுவதோடு, குறித்த பகுதியில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞான...
14/07/2025

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர்.

புலிகளின்குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவிற்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது.

நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கிற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராக செயற்பட்டார்.

தேசியத் தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராக புகழ்பெற்றிருந்தார்.

இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின்குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து மதிப்பளிப்பளிக்கப்பட்டார்.

புலிகளின்குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து மறைந்த கலைஞர் சங்கநாதன் அவர்களுடன் இணைந்து குரல் வழங்கியிருந்தார்.

விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் குரல் வழங்கியுமிருந்தார்.

மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியை புலிகளின்குரல் வானொலியில் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் ஆங்கில பகுதி நேர ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டுவந்திருந்தார்.

அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் இன்று காலமானார்.

13/07/2025

தனி மனித போராட்டம்

13/07/2025

பிரதமரின் வருகையை முன்னிட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பாக தனக்கும் சக ஊழியர்களுக்கும் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக தனி மனித போராட்டம்
தலையீடு செய்ய வந்த பொலிசார் வீடியோ எடுக்கப் படுவதை கண்டு மௌனமாக களைந்து சென்றனர்

LankaFire.Com

11/07/2025

தற்போது வவுனியா கூமாங்குளத்தில் பதட்டம் - போக்குவரத்து பொலிசார் துறத்தி சென்ற சமயத்தில் ஒருவர் மரணம் பதட்ட நிலமை தொடர்கின்றது

LankaFire.Com

11/07/2025

வவுனியா கூமாங்குளத்தில் இன்று (11) இரவு போக்குவரத்து பொலிசார் துரத்தி சென்று தடியை சக்கரத்தினுட் செலுத்தி கொலை செய்துள்ளனர். அங்கு பதட்ட நிலமை தொடர்கின்றது.

LankaFire.Com

11/07/2025

வே. பி ர பா கரன் பதுங்கு குழியை தோண்டிய இராணுவம்

*விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக கூறிய மகிந்த!*😌😌😌
01/01/2025

*விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக கூறிய மகிந்த!*
😌😌😌

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக....

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் விபத்துஉடைந்த பாலத்தில் தொடரும் விபத்துக்கள்அதிகாரிகள் மீது மக்கள் விசனம்
31/12/2024

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் விபத்து
உடைந்த பாலத்தில் தொடரும் விபத்துக்கள்
அதிகாரிகள் மீது மக்கள் விசனம்

for more news: http://www.lankafire.com/Subscribe to us: https://www.youtube.c...

*வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா அனுர.? காணாமல் ஆக்கப்பட்டோர் பெற்றோர்கள் கேள்வி*
31/12/2024

*வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா அனுர.? காணாமல் ஆக்கப்பட்டோர் பெற்றோர்கள் கேள்வி*

அனுர என்ன செய்யப்போகிறார்..? காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கேள்வி.!! | News | Tamil News ...

24/12/2024

கிளிநொச்சி வைத்தியசாலையில் நடந்த மனிதாபிமானம் அற்ற ஒரு சில தாதியர் களின் செயலால் ஒட்டுமொத்த வைத்தியசாலை ஊழியரும் தலை குனியும் வகையில் இந்த சம்பவம் நடந்தேறியது.,

மிகவும் வேதனையான விஷயம்

Address

Wellawatta
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when LankaFire.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share