All Ceylon Majlisul Ulama - ACMU

10/08/2026

முஅத்தின் (அதான் சொல்பவர்) கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக மற்றும் புற ஒழுக்கங்கள்
~~~~~☆☆☆~~~~~☆☆☆~~~~~☆☆☆~~~~~

​1. அதான் சொல்பவர் (முஅத்தின்) கவனிக்க வேண்டியவை:

☆ கிப்லாவை முன்னோக்குதல் (استقبال القبلة): கஃபாவை (கிப்லாவை) முன்னோக்கியவாறு அதான் சொல்ல வேண்டும்.

☆ நின்று கொண்டு சொல்லுதல் (القيام): உட்கார்ந்தபடி அல்லாமல் நின்ற நிலையில்தான் அதான் சொல்ல வேண்டும்.

☆ குரலை உயர்த்துவது மற்றும் விரல்களைக் காதுகளில் வைத்தல் (رفع الصوت وضع الإصبعين في الأذنين):
மக்கள் செவிமடுக்கும் வகையில் சத்தமாகக் கூறுவதும், தனது இரண்டு விரல்களையும் காதுகளில் வைத்துக் கொள்வதும் நபிகளாரின் ﷺ சுன்னத்தாகும்.

☆ திசைகளைத் திருப்புதல் (التلتفت في الأذان):
"ஹய்ய அலாஸ் ஸலாஹ்" என்று கூறும் போது வலது பக்கமும், "ஹய்ய அலால் ஃபலாஹ்" என்று கூறும் போது இடது பக்கமும் முகத்தைத் திருப்ப வேண்டும்.

ஆன்மீகப் பெரியார்கள் அதான் சொல்லத் தொடங்கும் முன் உலகக் சிந்தனைகளை முழுமையாகத் துறந்துவிட்டு, அல்லாஹ்வின் மகத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி, மிகுந்த நடுக்கத்துடனும் பணிவுடனும் இஸ்திஃபார் செய்து ஸுப்ஹான கலிமா ,ஸலவாத் ஓதி அதான் தொடங்குவதை ஒரு நெறிமுறையாகக் கொண்டுள்ளனர்.

​2. அதானைக் கேட்பவர்கள் செய்ய வேண்டிய சுன்னத்துக்கள்:

☆ பேச்சுகளை நிறுத்துதல் மற்றும் மௌனம் காத்தல்: அதான் கேட்கும் போது உலகப் பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு முழு கவனத்துடன் செவிமடுக்க வேண்டும். (சூபியாக்களின் வழியில், அதான் சத்தம் கேட்பது என்பது "அல்-ஹக்கின் அழைப்பு" எனக் கருதப்பட்டு மௌனமாக முழுமையாக உள்வாங்குவார்கள்.

☆ அதான் வார்த்தைகளைத் திரும்பக் கூறுவது (متابعة المؤذن):
முஅத்தின் கூறுவதைப் போலவே கேட்பவரும் மனதிற்குள் அல்லது மெதுவாகத் திரும்பக் கூற வேண்டும்.

விதிவிலக்குகள்:

☆ "ஹய்ய அலாஸ் ஸலாஹ்" மற்றும் "ஹய்ய அலால் ஃபலாஹ்" என்பதற்குப் பதிலாக:

• ​"لا حول ولا قوة إلا بالله"
(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்)
என்று கூற வேண்டும்.

☆ ஃபஜ்ர் அதானில் "அஸ்ஸலாத்து கைறும் மினன் நௌம்" என்பதற்குப் பதிலாக:

• ​"صدقت وبررت
ஸதக்த வபரிர்த
என்று கூற வேண்டும்.

☆ பாங்கின் வார்த்தைகளை நாம் திருப்பிச் சொல்வதுடன், முதன்முறை 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' (ﷺ) என்று சொல்லும் போது, அவ்வாறே திருப்பிச் சொல்வதுடன்

صَلَّى اللَّهُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ
اَللَّهُمَّ مَتِّعْنِي بِالسَّمْعِ وَالْبَصَرِ
"ஸல்லல்லாஹு அலைக்க யாரசூலல்லாஹ். அல்லாஹும்ம மத்திஃனீ பிஸ்மி வல் பஸர்" என்றும் கூறி விரல்களை முத்தி கண்களில் தடவவும்.

☆ ​இரண்டாவது முறை அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (ﷺ) என்று கூறும்போது, அவ்வாறே திருப்பிச் சொல்லி

مَرْحَبًا بِحَبِيبِي وَقُرَّةِ عَيْنِي يَا رَسُولَ اللَّهِ
مَرْحَبًا بِكَ وَقُرَّةِ عَيْنِي بِكَ يَا رَسُولَ اللَّهِ
"மர்ஹபன் பி ஹபீபீ வகுர்ரத்தி ஐனீ பிக யாரசூலல்லாஹ்" (ﷺ) என்று ஓதி விரல்களில் முத்தி கண்களில் தடவவும்.

​"யா ரஸூல் நாயகம் (ﷺ) அவர்களே! தங்களுக்குச் சுபசோபனம்! தங்களைக் கொண்டு எனது நேத்திரங்கள் குளிர்ச்சியடைவதாக! யா அல்லாஹ்! எனக்கு மகிழ்ச்சியைத் தந்தருள்வாயாக! மேலும், எனது காதையும் கண்ணொளியையும் பிரகாசமாக்கி வைப்பாயாக!"

​இவ்வாறு செய்பவருடையகண்பார்வை கெட்டுப்போகாமல் பிரகாசத்தோடு இருக்கும் என்று ஸூஃபியாக்கள் கூறியிருக்கிறார்கள். இப்படி சொல்பவரை நான் "கியாமத்தில் தேடிப்பிடித்து சுவனத்தில் நுழைச் செய்வேன்"! என்று ரஸூல் (ﷺ) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
​(பின் வரும் இரண்டு துஆக்களில் எதாவதொன்றை ஓதினாலும் சரியே.)

☆ நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் (الصلاة على النبي): அதான் முடிந்ததும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும்.

: اللهم صل على سيدنا محمد وعلى آل
سيدنا محمد
(அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்)

☆ பாங்கு துஆ ஓதுவது (دعاء الأذان):

​الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِين
​اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ عَدَدَ مَا فِي عِلْمِ اللَّهِ صَلَاةً دَائِمَةً بِدَوَامِ مُلْكِ اللَّهِ. اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ سَيِّدَنَا مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَالدَّرَجَةَ الرَّفِيعَةَ الْعَالِيَةَ الشَّرِيفَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، وَارْزُقْنَا شَفَاعَتَهُ وَأَوْرِدْنَا حَوْضَهُ يَوْمَ الْقِيَامَةِ، إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ.
​إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلَّوْا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِين.

​3. சூபியாக்களின் ஆன்மீக வழிமுறைகள் மற்றும் விளக்கங்கள்

☆ மறுமைப் பெருவெளியை நினைவுகூர்தல் :

சூபியாக்களின் பார்வையில், முஅத்தின் எழுப்பும் "அல்லாஹு அக்பர்" என்ற முழக்கம், மறுமை நாளில் இஸ்ராஃபில் (அலைஹி ஸலாம்) அவர்கள் எழுப்பும் (சூர்) ஒலியை நினைவூட்டுகிறது. எனவே, அதானின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் போது அவர்கள் மரணத்தையும், இறைவனின் திருசந்நிதியில் விசாரணக்கு நிற்பதையும் சிந்திக்கிறார்கள் .

☆ அகக் கண்களால் அழைப்பை ஏற்பது "ஹய்ய அலாஸ் ஸலாஹ்" (தொழுகையின் பக்கம் விரையுங்கள்) என்ற அழைப்பு வெறும் ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பு மட்டுமல்ல; அது ஆன்மா தன் படைத்த இறைவனைப் சந்திக்கும் உண்மையான பேரின்பத்திற்கான அழைப்பு என்று சூஃபி ஞானிகள் விளக்குகிறார்கள்.

☆ சில தரீக்காக்களைச் சேர்ந்த சூபிகள், அதான் ஒலியைக் கேட்கும் காலகட்டத்தில் மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு அதான் வார்த்தைக்கும் தங்களின் உள்ளத்தால் (கல்பு) 'அல்லாஹு' என்று திக்ரு செய்து அந்த ஆன்மீக அலைகளுடன் ஐக்கியமாகும் சிறப்பான பயிற்சியைக் கடைபிடிக்கின்றனர்.

​ஆதாரங்கள்

• ​ஸஹீஹ் புகாரி
• ​ஸஹீஹ் முஸ்லிம்
• ​இஹ்யா உலுமுத்தீன்
---------------------------------------------------
தகவல் -
அல் ஆலிம் ஹாபிழ் முஹம்மத் ஸிராஜுத்தீன் நஜாஹி
{செயலாளர் - அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா}

விழிப்புணர்வு: சுன்னத் வல் ஜமாஅத் பெயரால் பரப்பப்படும் கொள்கை குழப்பங்களும், புத்தகங்கள் மீதான அவசர ஆதரவும்-------------...
08/07/2026

விழிப்புணர்வு: சுன்னத் வல் ஜமாஅத் பெயரால் பரப்பப்படும் கொள்கை குழப்பங்களும், புத்தகங்கள் மீதான அவசர ஆதரவும்
-----------------------------------------------------------------------
​சுன்னத் வல் ஜமாஅத் என்பது ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இமாம்கள் மற்றும் ஸூபி பெரியார்கள் நமக்குக் காட்டித்தந்த தூய அகீதாவாகும். ஆனால், இன்று துரதிர்ஷ்டவசமாக சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரையே ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி, சில புதிய நவீன சிந்தனைகளும், பித்அத்தான அகீதாக்களும் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

​புத்தகங்கள் மீதான அவசர ஆதரவும், விளைவுகளும்
----------------------------------------------------------------
​இன்று எந்தவொரு புத்தகத்தையும் முழுமையாக வாசித்து, அதன் உள்ளடக்கங்களை ஆழ்ந்து ஆய்வு செய்யாமல், ஏதோ ஒரு அடையாளத்திற்காகவோ அல்லது சிலரின் தூண்டுதலுக்கோ அடிபணிந்து ஆதரவு தெரிவிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

​கடந்த காலங்களில் 'மன்ஹஜ்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட புத்தகத்திற்கு, அதன் உள்ளடக்கத்தை உணராமல் பல உலமாக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர், தஸவ்வுஃப் துறையில் அறிஞர்களான கலாநிதி தீன் முஹம்மத் அஸ்ஹரி (PhD) போன்றவர்கள் அந்தப் புத்தகத்தில் இருந்த பிழைகளை கொழும்பு தெவடகஹ பள்ளி வாசலில் நடைபெற்ற சுன்னத் ஜமாத்தின் முக்கியமான உலமாக்களுக்கு மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகே உண்மை நிலவரம் புரிந்தது.

பின்னர் அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்' என்ற பெயரில் வஹாபித்துவ கொள்கைகளை வெளிப்படையாகப் போதிக்கும் மற்றொரு புத்தகம் வெளிவந்தது . எனவே, "ஒரு புத்தகத்தை முழுமையாகப் பார்க்காமல், அனுபவம் வாய்ந்த சுன்னத் ஜமாத் உலமாக்களிடம் ஆலோசனை பெறாமல் அதற்கு ஆதரவு வழங்காதீர்கள்" என்பதுவே நாம் உலமாக்களுக்கும் இளைஞர்களுக்கும் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள்.

​சுன்னத் ஜமாஅத் கொள்கையைச் சிதைக்கும் நவீன நோய்
---------------------------------------------------------
இந்த வரிசையில், மீண்டும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரிலேயே BMICH மண்டபத்தில் புதிய புத்தகம் ஒன்று வெளியிடப்படுவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளன. இத்தகைய முன்னெடுப்புகள் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைகளை சிதைக்கும் ஒரு நவீன நோயாகவே உருவெடுத்துள்ளன.

தற்போது தப்லீக் ஜமாத்தின் கருத்துக்களையும், நவீன வாதங்களையும் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கையாகக் காட்ட ஒரு சில உலமாக்கள் முயற்சி செய்கின்றனர்.

நபிமார்கள் மற்றும் இறைநேசர்களை (அவ்லியாக்களை) நேசிப்பதையும், ஸியாரத், தர்கா, கந்தூரி, கொடியேற்றம், ஸாலிஹீன்களின் கரங்களை முத்தமிடுதல் போன்றவற்றை வழமையாகக் கொண்டுள்ள சுன்னத் ஜமாஅத்தினரின் உணர்வுகளை மெல்ல மெல்ல மழுங்கடிக்க முயற்சி செய்கின்றனர்.

தரீக்காக்களின் வழிகாட்டலையும், ஷைகுமார்களின் வழிகாட்டலையும் 'கண்மூடித்தனமான பின்பற்றுதல்' என்று சித்தரிக்கின்றனர்.

வஹ்ததுல் வுஜூத் போன்ற நுட்பமான விடயங்களை மேலோட்டமாகக் கூறி, முன்னோர்கள் காட்டிய வழியைத் தடம் புரளச் செய்கின்றனர்.

​இப்படிப்பட்டவர்கள் தப்லீக் ஜமாத்தின் தவறான கொள்கைகள் குறித்தோ அல்லது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை இழிவுபடுத்திப் பேசிய தப்லீக் தலைவர்களின் கருத்துக்கள் குறித்தோ பகிரங்கமாகக் கேள்வி எழுப்பத் தயங்குகிறார்கள்.
இதற்குக் காரணம், இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்யும் 'நடுநிலை' வேடமிடுவதுதான்.

​இளைஞர்களே, உலமாக்களே விழித்தெழுங்கள்!
​உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்பது இமாம்கள், சூபியாக்கள் கற்றுத் தந்த அகீதா. அதை விட்டுவிட்டு, நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப, புத்தகக் குழுவினர் தயாரித்துத் தரும் 'ஷரீஅத்' சட்டங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமக்கான கொள்கை ஷரீஅத்,தரீகத்,ஹகீகத்,மஃரிபத் என்பதை மறந்த விடாதீர்கள்

எந்தவொரு புத்தகமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் சுன்னத் ஜமாத்தின் அடிப்படை அகீதாவுடன் ஒத்துப்போகிறதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தப்லீக் ஜமாத் மற்றும் பிற வழிகெட்ட கொள்கைகளைப் பற்றியும், அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறித்துக் கொண்ட தவறான பார்வைகள் குறித்தும் மென்மையான போக்கு காட்டும் உலமாக்களிடம் இதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற தரீக்காக்களின் ஒளிமயமான பாதையை, நவீன காலப் பிழையான பாதைகளுக்குக் கொடுத்துவிடாதீர்கள்.
​சுன்னத் ஜமாஅத் என்பது ஒரு புனிதமான நம்பிக்கை. அதனைச் சிதைக்கும் எந்தவொரு புத்தகத்திற்கும், கருத்திற்கும் முகஸ்துதிக்காகவோ அல்லது சூழல் நிர்ப்பந்தத்திற்காகவோ ஆதரவு அளிக்காதீர்கள். கொள்கையில் உறுதியாக இருப்பதே ஈமானைப் பாதுகாக்கும்.

​
இங்ஙனம்,

​செயலாளர்,
மௌலவி அல்-ஹாபிழ் தேசகீர்த்தி முஹம்மத் ஸிராஜுத்தீன் நஜாஹி,
அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா.

26/05/2026

Address

96/Kandawala Road Ratmalana
Colombo
USTHATHMUHAJIREENNADHVI

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Majlisul Ulama - ACMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share