CeylonTv

CeylonTv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CeylonTv, TV Channel, Colombo.

17/04/2026

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச வருமானத்தை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றிருப்பதாக, சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன அறி...
15/04/2026

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச வருமானத்தை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றிருப்பதாக, சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 10 முதல் 15 ஆம் திகதி வரையிலான, 6 நாட்களில் மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாய் (100 கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில், 5000 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி மாத்திரம் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

#சஜீவநந்தனகனகரத்ன

மர்ம ஆயுதங்களை வெளிப்படுத்துமா ஈரான்..ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் தொடருமானால், இதுவரை பார்த்...
15/04/2026

மர்ம ஆயுதங்களை வெளிப்படுத்துமா ஈரான்..

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் தொடருமானால், இதுவரை பார்த்திராத புதிய ஆயுதங்கள் மற்றும் இராணுவ உத்திகளை ஈரான் வெளிப்படுத்தும் என, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

#இரான்




#போர்செய்தி #உலகசெய்தி
#சர்வதேசசெய்தி

நாளைய கை விசேடம்:தமிழ் சிங்கள புத்தாண்டின், நாளை புதன்கிழமை காலை 9.04 முதல் 9.55 வரையிலான நேரமும் கைவிசேடத்திற்கு உகந்த ...
14/04/2026

நாளைய கை விசேடம்:

தமிழ் சிங்கள புத்தாண்டின், நாளை புதன்கிழமை காலை 9.04 முதல் 9.55 வரையிலான நேரமும் கைவிசேடத்திற்கு உகந்த நேரமாகும்.

இதேவேளை, சிங்கள மரபுகளின் பிரகாரம், புத்தாண்டில் தலைக்கு எண்ணெய்க்கு தேய்க்கும் தேசிய வைபவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘நாத்த’ தேவாலய வளாகத்தில் நாளை புதன்கிழமை இடம்பெறும்.

மல்வத்தை, அஸ்கிரி, உபய விஹாரைகளின் அனுசாசனத்துடன் இடம்பெறும் புத்தாண்டு சடங்கில். அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பார்.

பின்னவலையில் உள்ள யானைகள் பாதுகாப்பு நிலையத்தில், யானைகளின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சடங்கு அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நாளை காலை 6.30இற்கு இடம்பெறும்.

#கைவிசேடம் #விசேடம் #பின்னவலை #புதன்கிழமை
#பராபவ #சிங்கள #கண்டி #சிங்களமரபு #ஸ்ரீ #தலதாமாளிகை #ஸ்ரீதலதாமாளிகை #சித்திரை

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு உதயம்..இலங்கை மக்கள் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்...
14/04/2026

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு உதயம்..

இலங்கை மக்கள் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் வருடச் சக்கரத்தில் பராபவ என்றழைக்கப்படும் ஆண்டு இன்று பிறந்திருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படிஇ காலை 8.40 இற்கு பராபவ வருடம் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ற காலை 4.40 முதல் நண்பகல் 12.40 வரை புண்ணிய காலமாகும். அந்நேரத்தில் மருத்து நீர் தேய்த்து நீராடுதல் நலம்.
சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளையும், வைரம் மற்றும் பவளம் போன்ற ஆபரணங்களையும் அணிதல் நன்மை தருமென சோதிட நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

#பராபவ #மருத்துநீர் #பராபவபுத்தாண்டு #சோதிடநிபுணர்கள் #தமிழ்சிங்கள #சித்திரை #புத்தாண்டு #உதயம் #தமிழ்சிங்களபுத்தாண்டு

'புறக்கோட்டை' என்ற சொல் புநக்கோட்டை என்பதாக அச்சேற்றப்பட்டு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் கல்வெட்டாகக் காட்சிப்பட...
10/04/2026

'புறக்கோட்டை' என்ற சொல் புநக்கோட்டை என்பதாக அச்சேற்றப்பட்டு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் கல்வெட்டாகக் காட்சிப்படுத்தப்பட்டது தவறுதான்.

அதற்காக மனம் வருந்துவதோடு அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களிடமும் தமிழ் மொழிப் பற்றாளர்களிடமும் மன்னிப்பு கோரப்பட்டு இருக்கிறது.

இது தவறுதலாக இடம்பெற்றதேயன்றி திட்டமிட்டுச் செய்யப்பட்டதொன்றல்ல.

எனினும் நாம் அதனை மீள்பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
குறித்த தவறு திருத்தப்பட்டு பெயர்க்கல்வெட்டு மீள்நடுகை செய்வதற்கு Clean Sri Lanka செயலகம் ஒப்புக்கொண்டுள்ளது.

#புறக்கோட்டை #மன்னிப்பு #புநக்கோட்டை #தவறு #மீள்பரிசீலனை #தமிழ்மொழி #கிளீன்ஸ்ரீலங்கா #புறக்கோட்டை #மத்தியபேருந்துநிலையம்

09/04/2026

கொழும்பு மத்திய பேருந்து
நிலையம் மக்கள்
பாவனைக்கு...

"கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

​சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவில், இலங்கை விமானப்படையின் நேரடி பங்களிப்புடன் இந்த மறுசீரமைப்பு பணிகள் மிக குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

#கிளீன்ஸ்ரீலங்கா #புறக்கோட்டை #மத்தியபேருந்துநிலையம்
#இலங்கைவிமானப்படை

புதன்கிழமை விடுமுறை ரத்து..அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு வ...
06/04/2026

புதன்கிழமை விடுமுறை ரத்து..

அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறை, ஏப்ரல் 8 முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார்.

#விடுமுறை #விடுமுறைரத்து

06/04/2026

பெஞ்சமின் நெதன்யாகு
தாக்கப்பட்டாரா..?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் முன்னிலையில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

#இஸ்ரேல் #இஸ்ரேலிய #ஊடகவியலாளர் #பெஞ்சமின்நெதன்யாகு #இஸ்ரேலியபிரதமர் #பாராளுமன்றஉறுப்பினர்கள்

04/04/2026

உயிர்த்தெழுந்தார் இயேசு..!⛪
ஆம்

உயிர்ப்புப் பெருவிழா இன்று

#புனிதவெள்ளி #புனிதவியாழன் #அடியார்கள் #நம்பிக்கை
#குருத்தோலை #குருத்தோலைஜாயிறு #கத்தோலிக்க #கிறிஸ்தவ #இயேசுபிரான் #உயிர்த்தஞாயிறு #இயேசுவின்பாடுகள்

இன்று புனித வெள்ளி..🙏👇******கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்கள்; இன்றைய தினத்தை புனித வெள்ளியாக அனுஷ்டிக்கிறார்கள்.இய...
03/04/2026

இன்று புனித வெள்ளி..🙏👇

******

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்கள்; இன்றைய தினத்தை புனித வெள்ளியாக அனுஷ்டிக்கிறார்கள்.

இயேசுவின் பாடுகள், மரணம், என்பவற்றையும் இன்றைய நாளில் தியானிக்கிறார்கள்.

இன்றைய தினத்தில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் உண்ணா நோண்பிருந்து இறைவேண்டலில் ஈடுபடுகிறார்கள்.

தவக்காலத்தின் இன்றைய, இறுதி திருச்சிலுவைப் பாதையிலும் அடியார்கள் கலந்து கொள்கிறார்கள்.

தவக்காலம் என்பது, 40 நாட்களை உள்ளடக்கியதாகும். இது சாம்பல் புதன் என அழைக்கப்படும் திருநீற்று புதனுடன் ஆரம்பமானது.

தவக்காலத்தின், புனித வாரம், கடந்த குருத்தோலை ஜாயிறுடன் ஆரம்பமானது. நேற்றைய தினம் புனித வியாழன் ஆகும்.

இந்த தினத்தில்தான் இயேசு நாதர் தனது அப்போஸ்தலர்கள் 12 பேரின் கால்களை கழுவி தமது இறுதி இரவுணவை உண்டதாக வரலாறு கூறுகிறது.

அதேவேளை, நற்கருணை, குருத்துவம் என்பனவும் இதே தினத்திலேயே உருவானது என்பது அடியார்களின் நம்பிக்கையாகும்.

மனுக்குலத்தை பாவங்களிலிருந்து மீட்க உலகில் அவதரித்தவர் இயேசுபிரான் என்பது கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களின் விசுவாசமாக இருக்கிறது.

புனித வார வழிபாடுகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதணைகளை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#புனிதவெள்ளி #புனிதவியாழன் #அடியார்கள்
#குருத்தோலை #உயிர்த்தஞாயிறு #குருத்தோலைஜாயிறு #கத்தோலிக்க #கிறிஸ்தவ #இயேசுபிரான் #நம்பிக்கை #இயேசுவின்பாடுகள்

50 வருடங்களுக்கு பிறகு நிலவை நோக்கியபயணம்..****** நாசாவின் Artemis II விண்கலம், 50 வருடங்களுக்கு பிறகு நிலவை நோக்கிய பயண...
02/04/2026

50 வருடங்களுக்கு பிறகு நிலவை நோக்கிய
பயணம்..

******


நாசாவின் Artemis II விண்கலம், 50 வருடங்களுக்கு பிறகு நிலவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பெண், ஒரு கறுப்பினத்தவர் உள்ளடங்களாக நான்கு விண்வெளி வீரர்கள் இந்த பயணத்தில் ஈடுபடுகிறார்கள்.

எதிர்க்காலத்தில் நிலவில் குடியேறும் கனவிற்கு அருகாமையில் செல்லக்கூடிய ஆய்வு விபரங்களை இந்த பயணம் முன்வைக்கும் என நாசா அறிவித்திருக்கிறது.



Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when CeylonTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share