Let's talk something

Let's talk something Let's discuss something useful.

2017 October , இலங்கை மின்சார சபைக்கும்(CEB), ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் (ADB) இடையே மேற்கொள்ளப்படட ஒப்பந்தத்தின் அடிப...
27/09/2025

2017 October , இலங்கை மின்சார சபைக்கும்(CEB), ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் (ADB) இடையே மேற்கொள்ளப்படட ஒப்பந்தத்தின் அடிப்படையில் , இலங்கை மின்சார சபையால் $256.7 மில்லியன் பெறுமதியுடைய 3.45 MW திறனுள்ள 30 காற்றாலைகளை அமைப்பதன் மூலம் 100 MW (103.5 MW) காற்றாலை பண்ணை அமைக்க யோசனை முன்மொழியப்பட்டு அதில் அண்ணளவாக 78% அதாவது $200 மில்லியன் கடனடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் மிகுதி $56.7 மில்லியன் இலங்கை மின்சார சபையும் பங்காளிப்பதாக முடிவாகின்றது.

இதனடிப்படையில் இலங்கை மின்சாரசபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 2020 - 2021 காலப்பகுதியில் மன்னார்த்தீவு இதற்காக தெரிவுசெய்யப்படுகின்றது.

ஆனால் இந்த திட்டம் தொடங்கப்படாமலேயே , கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் எந்த வித திறந்த விலைமனுக்கோரல்களும் இல்லாமல்
நேரடியாக அதானி குழுமத்திற்கு, மன்னார் தீவில் 250MW திறனுள்ள காற்றாலை பண்ணையும், பூநகரியில் 234MW திறனுள்ள காற்றாலை பண்ணையும் $442 மில்லியன் முதலீட்டின் மூலம் அமைப்பதற்குமான அனுமதி வழங்கப்பட்டு 2022 March இல் இலங்கை மின்சார சபைக்கும் அதானி குழுமத்திற்கும் இடியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. இது 2021 இல் கெளதம் அதானிக்கும் கோத்தபாய ராஜபக்ச விற்கும் இடையி நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் மூலம் சாத்தியமானதாக சொல்லப்பட்டது.

எனினும் 20 வருடங்களுக்கு அதானி குழுமத்திடமிருந்து இலங்கை மின்சார சபை, மின் அலகுகளை வாங்குவதற்கான உத்தியோக பூர்வ ஒப்பந்தம் 2023 February இல் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது 8.26US¢/kWh (அண்ணளவாக ~27.5 LKR/unit) என்ற அடிப்படையில் கைச்சாத்திடப்படுகின்றது. எனினும் இது முன்னைய ஒப்பந்தத்தின் தொடர்சியாகும்.

மின் அலகின் அதி உச்ச விலை மற்றும் திறந்த விலை மனுக்கோரல் மூலம் அதானி குழுமம் தேர்வு செய்யப்படாமை அத்தோடு சூழலியல் காரணங்கள் கருத்தில் கொள்ளப்படாமை என்பவற்றை காரணங்காட்டி அதானி குழுமம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடைசெய்யக்கோரி மன்னார் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

புதிதாக பதவிக்கு வந்த NPP அரசாங்கத்தின் மின் அலகுக்கான விலைகுறைப்பு நெருக்குதல் கோரிக்கை மற்றும் உயர் நீதி மன்ற வழக்குகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக 2025 February இல் அதானி குழுமம் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது.

எனினும், 2030 இற்குள் 70% ஆன மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து பெறுவதற்கான இலக்கை அறிவித்திருந்த புதிய அரசாங்கம், மன்னார் காற்றாலை திட்டத்தைப் பகுதியளவில் தொடர முடிவு செய்து, திறந்த விலைமனுக்கோரல் மூலமாக இலங்கை மின்சார சபைக்கும் HayWind (the wind energy arm of Hayleys Fentons, a Sri Lankan company) என்கின்ற இலங்கைக் கம்பெனிக்கும் இடையில் 5 MW திறனுள்ள 10 காற்றாலைகளை அமைப்பதன் மூலம் 50MW காற்றாலை பண்ணை அமைக்க 2025 May இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 18 மாதங்களில் இதை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

HayWind , 4.65US¢/kWh என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதானி குழுமத்தின் விலையோடு ஒப்பிடும் போது இது மிக மிக குறைவாகும்.

சூழலியல் காரணங்களுக்கு அப்பால் 100 kWh மின் அலகிற்கு அதானி குழுமம் $8.26 ஆக விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில் HayWind அதற்க்கு $4.65 ஆக விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. இதன் மூலம் புதிய இலங்கை அரசாங்கம் 44% இனை சேமித்திருக்கின்றது.

வடக்கு மாகாணம் தற்போது தனது பொருளாதாரப் பயணத்தின் முக்கியமான கட்டத்திலுள்ளது . இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்கள...
19/09/2025

வடக்கு மாகாணம் தற்போது தனது பொருளாதாரப் பயணத்தின் முக்கியமான கட்டத்திலுள்ளது . இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பின் கடைசி இடத்தில் இருக்கின்றபோதும் நம்பிக்கையளிக்கின்ற வகையில் வளர்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றது.

வடக்கு மாகாணத்தில், போருக்கு பின்னரான மறுசீரமைப்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், இன்னும் ஒரு முக்கியமான மற்றும் அதிக சிரத்தையோடு அடையாளப்படுத்தப்பட்ட அல்லது அடையாளப்படுத்தப்பட வேண்டிய சவாலாக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இன்னும் தொடர்ந்து நீடிக்கின்றது.

தேசிய அளவில் பெண்களின் LFPR (Labor Force Participation Rate) 31 % (2023) ஆக இருக்கின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இது அதே அளவிலோ அல்லது அதைவிடக் குறைவாகவே உள்ளது.இதன் பொருள், மாகாணத்தின் மனித மூலதனத்தின் தோராயமாக பாதி, முறையான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளில்பயன்படுத்தப்படாமல் உள்ளது.

ஏன் இது முக்கியம்?
பெண்களின் பொருளாதார பங்கேற்பு என்பது பாலின சமத்துவம் மட்டுமல்லாது இது ஒரு பொருளாதார அவசியமாகும் ஏனென்றால் இது பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி, வறுமை குறைப்பு மற்றும் சமூக நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றது என ஆய்வுகள் சொல்கின்றன.

வடக்கு மாகாணம் போன்று கட்டமைப்பு சவால்கள் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு குறைபாடு அதிகமாக உள்ள ஒரு மாகாணத்தில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை ஊக்குவிப்பது பொருண்மியரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்கின்ற அடையாளப்படுத்தப்பட வேண்டிய/ தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்
⭕சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகள் - பெண்களை வீட்டுப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தும் மனப்போக்கு.
⭕குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இல்லாமை - இது வீடுகளில் இருந்து தூர இடங்களில் வேலை செய்வதை சிரமமாக்குகிறது.
⭕திறன் இடைவெளி - நவீன வேலைகளுக்குத் தேவையான பயிற்சி இல்லாமை.
⭕முறையான வேலை வாய்ப்புகள் குறைவு - குறிப்பாக கிராமப்புறங்களில்.

வடக்கு மாகாணம் தனது திறமையான மனித வளத்தின் பாதியை புறக்கணிக்க முடியாது. பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம், மாகாணம் ஒன்றிணைந்த வளர்ச்சி, வறுமை குறைப்பு மற்றும் நிலைத்த பொருளாதாரம் நோக்கி நகரவேண்டும். பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் அல்லது அதிகாரமளித்தல் என்பது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகமெடுக்கச் செய்யும்.

🌊 Sri Lanka’s Exclusive Economic Zone: A Strategic Ocean FrontierSri Lanka commands an EEZ of 532,619 km², eight times i...
11/09/2025

🌊 Sri Lanka’s Exclusive Economic Zone: A Strategic Ocean Frontier

Sri Lanka commands an EEZ of 532,619 km², eight times its land area, unlocking vast opportunities in the Blue Economy. This maritime treasure supports fisheries, offshore energy, marine tourism, and global shipping, positioning the island as a strategic hub. Rich in resources yet challenged by illegal fishing, climate change, and pollution, the EEZ demands smart governance, tech-driven exploration, and regional partnerships. With sustainable strategies, it can power economic growth, security, and environmental resilience.

பொருளாதாரத்தின் கடைசி எல்லை கடல்கள் என அழைக்கப்படுவதுண்டு. இலங்கை போன்ற நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவிற்கு இத...
10/09/2025

பொருளாதாரத்தின் கடைசி எல்லை கடல்கள் என அழைக்கப்படுவதுண்டு. இலங்கை போன்ற நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவிற்கு இது ஒரு மிகப்பொருத்தமான கூற்றாகும். United Nations Convention on the Law of the Sea (UNCLOS) படி, பிரத்யேக பொருளாதார மண்டலம் (EEZ) என்பது ஒரு நாட்டின் நிலத்தின் எல்லையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 Km) வரை நீள்கிறது. இதில் அந்த நாட்டிற்கு கடல் நீர்மட்டம், கடலடித்தளம் மற்றும் அதன் அடிப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய, பயன்படுத்த, பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க உரிமை உண்டு.

புவியியல் எல்லை மற்றும் சட்ட கட்டமைப்பு
---------------------------------------------------------
இலங்கையின் EEZ சுமார் 532,619 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உலகளவில் முதல் 60 இடங்களில் ஒன்றாகும். ( EEZ has consistently been reported between 510,000 km² and 532,619 km² in various sources over the past 10 years. The variation is due to different measurement methodologies, but the legal extent remains unchanged at 200 nautical miles from the baseline)

இதன் எல்லைகள்.
⭕இந்தியா (வடக்கு மற்றும் மேற்கு) – மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா
⭕மாலதீவு (மேற்கு) – லக்ஷதீவு கடல்

இந்த கடல் எல்லைகள், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் மாலதீவுடன் கையெழுத்திட்ட இருதரப்பு ஒப்பந்தங்களால் வரையறுக்கப்பட்டன. கடல் மண்டல சட்டம் எண். 22, 1976 இலங்கையின் EEZ-ஐ வரையறுத்த முதல் உள்நாட்டு சட்டமாகும். மேலும், இலங்கை UNCLOS உடன்படிக்கைகளை அங்கீகரித்துள்ளது அத்தோடு 200 கடல் மைல்களுக்கு அப்பால் தனது கண்டத்தட்டினை(continental shelf) விஸ்தரிப்பதற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பொருளாதார முக்கியத்துவம்
---------------------------------------------------------
EEZ இலங்கையின் நீல பொருளாதாரத்தின்(Blue Economy) முதுகெலும்பாகும். இது நிலையான கடல் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டது.

முக்கிய துறைகள்:
⭕மீன்பிடி மற்றும் நீர்வளம்: Tuna மற்றும் பிற பெரிய மீன்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
⭕கடல்சார் சக்திவளம் : எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, காற்றாலை, அலை மற்றும் அலைச்சலின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்.
⭕கடல் சுற்றுலா: திமிங்கில அவதானிப்பு , நீர்மூழ்கல் மற்றும் பசுமை சுற்றுலா.
⭕கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடம்: கிழக்கு-மேற்கு கடல் பாதையில் இலங்கையின் இடம் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மையமாகும்.

உலகளவில், கடல் பொருளாதாரம் ஆண்டுக்கு $1.5 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு இது 2030க்குள் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மூலோபாய முதலீடுகளின் மூலம் இதிலிருந்து பெரும் பங்கைக் கைப்பற்ற முடியும்.

EEZ-இல் உள்ள வளங்கள்
--------------------------------------------------------------
⭕உயிரியல் வளங்கள்: Tuna, இறால் மற்றும் பிற மதிப்புமிக்க மீன்கள்.
⭕உயிரற்ற வளங்கள்: ஹைட்ரோகார்பன் களஞ்சியம், பல்வேறு உலோகக் தாதுக்கள் மற்றும் கனிமங்கள்.
⭕உயிரினப் பன்மை: பவளப்பாறைகள், கடல்புற் படுக்கைகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள்.

சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்
---------------------------------------------------------
பெரும் வாய்ப்புகள் இருந்தாலும், இலங்கையின் EEZ பல சவால்களை எதிர்கொள்கிறது:
⭕சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடி: வெளிநாட்டு படகுகளின் அடிக்கடி நுழைவு.
⭕காலநிலை மாற்றம்: பவளப்பாறை வெண்மைப்படுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அமிலமயமாக்கல்.
⭕கடல் மாசுபாடு: பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எண்ணெய் கசிவு.
⭕தொழில்நுட்ப குறைபாடு: ஆழ்கடல் ஆய்வு மற்றும் கண்காணிப்பில் உள்ள திறன் குறைபாடு.

மூலோபாய மற்றும் பாதுகாப்பு பரிமாணங்கள்
------------------------------------------------------------
இலங்கையின் EEZ உலகின் மிகவும் பரபரப்பு மிக்க கப்பல் பாதைகளில் ஒன்றில் அமைத்துள்ளது.ஆகவே இப் பிராந்தியத்தில் கடற் பாதுகாப்பை உறுதி செய்வது கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க முக்கியமானது.

எதிர்கால வாய்ப்புகள்
----------------------------------------------------------------
EEZ-இன் முழு திறனை வெளிப்படுத்த இலங்கை செய்ய வேண்டியது:
⭕கடல் பரப்பு திட்டமிடல் (Marine Spatial Planning - MSP): நிலையான வள ஒதுக்கீட்டிற்காக.
⭕நீல பொருளாதாரத் திட்டம்: கடல்சார் வளர்ப்பு, பசுமை சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் விரிவாக்கம்.
⭕ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முதலீடு: ஆழ்கடல் ஆய்வு மற்றும் கடல் உயிரினப் பல்வகைமைப் பாதுகாப்பு.
⭕ஆட்சி வலுப்படுத்தல்: வலுவான சட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம்.

இலங்கையின் EEZ ஒரு கடல் எல்லை மட்டுமல்ல அது ஒரு மூலோபாய பொருளாதார எல்லை. நிலையான மேலாண்மை, தொழில்நுட்ப புதுமை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் மூலம், EEZ இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் அடித்தளமாக மாறலாம்.

நன்றிகள் : Kumar Ganesh

'ICE' எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின்(crystal methamphetamine) போதைப்பொருளைத் தயாரிக்க பயன்படுத்தப்படலாம் என சந்தே...
08/09/2025

'ICE' எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின்(crystal methamphetamine) போதைப்பொருளைத் தயாரிக்க பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 50,000 கிலோ கிராம் வேதியியல் பொருட்கள் மிடெனிய, தலாவா பகுதியில் உள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 2 பில்லியன் இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தோடு தொடர்புடையதாக சந்தேக நபர்களாக கீழ்க்கண்டோர் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.
⭕Kehelbaddara Padme – பாகிஸ்தானிலிருந்து கொள்கலன்களில் வேதியியல் பொருட்களை இறக்குமதி செய்ததாக நம்பப்படுகிறது.

⭕Backhoe Saman – இவரது விசாரணையின் மூலம் பொருட்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் காவல்துறை கண்டறிந்தது. .

⭕Sampath Manamperi மற்றும் Piyal Manamper – SLPP கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள். இவர்கள் Boom Truck மூலம் பொருட்களை மறைத்து, மேல் பகுதியில் சீமெந்தால் மூடி மறைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

அமெரிக்க உளவுத்துறை இரண்டு சந்தேகத்திக்கிடமான கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கியிருந்தது. அத்தோடு,இரண்டு பாகிஸ்தான் நாட்டு நபர்கள் இந்த ICE தயாரிப்பில் உதவியதாக கூறப்படுகிறது.

Sampath மனம்பேரி மற்றும் Piyal மனம்பேரி ஆகிய SLPP தொடர்புடைய நபர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் SLPP கட்சி கடும் அழுத்தத்தினை எதிர் கொண்டுள்ளதது. இதன் விளைவாக SLPP கட்சி இவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

தற்போதைய நிலை:
⭕ Manamperi சகோதரர்கள் தப்பி ஓடிவிட்டுள்ளனர்.

⭕விசாரணைகள் தொடர்கின்றன.

⭕மேலும் கைது மற்றும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மிடெனிய போதைப்பொருள் சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியல் மற்றும் குற்றவியல் தொடர்புகளை முற்றிலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கர்த்தால் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு கதவடைப்பு கோரப்பட்ட்து. இது பல விதமான கருத்து ம...
08/09/2025

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கர்த்தால் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு கதவடைப்பு கோரப்பட்ட்து. இது பல விதமான கருத்து மோதல்களை உருவாக்கியிருந்தது.இந்தக் கருத்து மோதல்களுக்கு பின்னாலுள்ள பல அரசியற் காரணங்களை தாண்டி பொருண்மிய ரீதியாக உண்மையிலேயே வடக்கு மாகாணத்தால் கதவடைப்பு மூலம் அல்லது ஒருநாள் வியாபார/உற்பத்தி சந்தையை முடக்குவதன் மூலம் அரச இயந்திரத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து ஏதும் செய்தியை சொல்லலாமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும்.

Central Bank of Sri Lanka (2015, 2018, 2022, 2023 (Provisional)—press release & figure. தரவுகளின் படி வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது, 2023 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ~4.7% ஆக இருந்தது. இது மக்கள் தொகை மற்றும் புவியியல் அளவுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய பொருண்மிய அடைவினையே சொல்லி நிற்கின்றது.பிந்திய 2023 தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் 43.7% இனை மேல் மாகாணம் வழங்கி முதலிடத்தில் உள்ளதோடு, வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பிடிக்கின்றது. (வடக்கின் பொருளியல் நிலையை இந்த கட்டுரை ஆராய்வதால் கிழக்கு மாகாணம் தவிர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பொருளியல் நிலை ஆராய்வானது அடுத்த பதிவுகளில் இடம்பெறும்)

ஆனால், வரலாற்று ரீதியாக, வடக்கு மாகாணம் மிகப் பெரிய உற்பத்தி பங்கை வகித்தது (1983 இல் தேசிய கடல் மீன் பிடிப்பில் ~40%, 1990க்கு முன் ஆனையிறவு உப்பளம் ஆண்டுக்கு 60 – 80 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்தது), ஆனால் 1983 – 2009 வரையான உள்நாட்டு யுத்தம் காரணமாக உள்கட்டமைப்பு, தொழில்கள் மற்றும் சந்தை அணுகல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பல தசாப்தக் குழப்பங்களுக்குப் பின், வட மாகாணம் இப்போது இணைப்பு (Connectivity) தளத்தில் நம்பகமான வளர்ச்சி பாதையை காண்பிக்கின்றது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்கு அதிகரித்திருப்பதை அண்மைய தரவுகள் வெளிப்படுத்துகின்றன.இது ஒரு சிறிய அடைவாக இருப்பினும் பொருண்மிய ரீதியாக வடக்கு மாகாணம் பயணிக்கும் திசை சரியாக உள்ளதென்றே தரவுகள் சொல்கின்றன.

பொருட்டு நிர்வாக இணைப்புக்கள்(logistics links)(ரயில்/படகு/விமான/துறைமுகம்) புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடித் துறை, வேளாண்மைச் செயலாக்கம், இலகு உற்பத்தி, சேவைகள் போன்ற துறைகளில் முதலீடுகள்(targeted investment ) செய்யப்பட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வட மாகாணத்தின் பொருளாதார நிறை (weight) கணிசமாக உயரும்.

தரவுகள் என்ன சொல்கின்றன?
--------------------------------------------------------------
⭕ வட மாகாணத்தின் தேசிய GDP பங்கு 2015‑இல் ~3.5% இருந்து 2023‑இல் ~4.7% (தற்காலிக மதிப்பீடு) வரை உயர்ந்துள்ளது (CBSL மாகாண GDP வெளியீடுகள்)

⭕2023 இல் மேற்கு மாகாணம் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது (≈ 43.7%). வட மேற்கு (~10.9%), மத்திய (~10.3%), வடக்கு ~4.7

மீன்பிடித்துறை - வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணத்தின் பலமான ஒரு பொருண்மிய மூலமாக இருந்தது எனினும் போர்க்காலத்தில் கடுமையாக குறைவடைந்து இப்போது மெதுவான வளர்ச்ச்சியைக் காட்டுகின்றது. 1983‑இல் ~40% ஆக இருந்த வட மாகாணத்தின் கடல்சார்ந்த மீன்பிடி பங்கு 2009‑இல் ~7% ஆக குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்ந்ததையடுத்து 2017‑இல் ~12% வரை மீண்டுள்ளது.( ICSF/ADB மீன்பிடி துறை அறிக்கைகள் (வட மாகாணத்தின் போருக்கு முன் பின்னான பங்களிப்பு))

ஏன் இப்போது?
--------------------------------------------------------------
பொருட்டு நிர்வாக இணைப்புக்கள் (logistics links) வலுவடைந்ததன் காரணமாக வடக்கு மாகாணம் பொருண்மிய ரீதியான நம்பிக்கையை வெளிப்டுத்துகின்றது

⭕ரயில்: யாழ் தேவி 2014 இல் யாழ்ப்பாணம் வரை மீண்டும் ஓடத் தொடங்கியது.( யாழ் தேவி (2014) மீட்பு—IRCON/ரயில்வே குறிப்புகள்)

⭕கடல்: நாகப்பட்டினம்–காங்கேசன்துறை (KKS) சர்வதேச படகு 2023 இல் மீண்டும் தொடங்கியது.( நாகப்பட்டினம்–KKS சர்வதேச படகு (2023) அறிவிப்புகள்)

⭕விமானம்: IndiGo சென்னை–யாழ்ப்பாணம் (JAF) தினசரி சேவையை 2024 இல் தொடங்கியது.( IndiGo சென்னை–யாழ்ப்பாணம் (2024) தினசரி சேவை)

⭕துறைமுகம்: KKS துறைமுகம் மேம்பாட்டுக்காக உதவி நிதி பெற்றுள்ளது (சரக்கு/பயணிகள் வசதிகள்).( KKS துறைமுக மேம்பாடு (2024) உதவி நிதி அறிவிப்புகள்)

இவை வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் செலவீனங்களைக் குறைகின்றன. அத்தோடு இவை வடக்கு மாகாணத்திற்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள், கைத்தொழில் உள்ளீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வாய்ப்புக்களை எளிதாகின்றது.

அதிக வாய்ப்பு உள்ள துறைகள்
--------------------------------------------------------------
⭕மீன்பிடி மற்றும் நீர்வளர்ப்பு (Fisheries & Aquaculture)
⭕வேளாண்மைச் செயலாக்கம் (Agro Processing)
⭕இலகு உற்பத்தி (கட்டடப் பொருட்கள், மற்றும் ⭕மீளிணைத்தல்) (Light Manufacturing & Construction Inputs)
⭕சேவைகள் & சுற்றுலா (Services & Tourism)
⭕புதுப்பிக்கத்தகுந்த வளங்கள் & உப்பு (Renewables & Salt)

முதலீட்டுக்கு சாத்தியமான 5 யோசனைகள் (2025–2028)
--------------------------------------------------------------
⭕Jaffna Cold Chain & Processing Hub – Anchor for seafood + produce; integrate QA/exports.

⭕Mannar Sustainable Fisheries Cluster – Modern landing, ice, traceability; India facing.

⭕Atchuveli (Jaffna) SME Park 2.0 – Plug and play sheds for light manufacturing.

⭕KKS Port Linked Logistics – Feeder services, bonded warehousing; leverage ferry/cargo synergies.

⭕Community Solar + Agri Productivity – Solar pump irrigation + packhouses; predictable cash flows.

தற்போதைய தரவுகளின் படி வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 2026 இல் 5.2% ஆகவும் 2029 இல் 6% ஆகவும் இருக்கும் ஆனால் இதனை கண்காணிக்க வேண்டும்.

ஆக தற்போதைய பொருண்மிய வளர்சியின்படி 2030 இல் கூட வடக்கு மாகாணத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% மாத்திரமே பங்களிக்க முடியும். இந்த பங்களிப்பு வீதத்தை உயர்த்தாத வரை வடக்கு மாகாணத்தால் பொருண்மிய ரீதியில் அரச இயந்திரத்தை சவாலுக்குட்படுத்தவோ அல்லது அதனோடு பேரம் பேசவோ முடியாது.

- விமலன் குமாரகுலசிங்கம்-
08/09/2025

தரவு மூலங்கள்
⭕CBSL மாகாண GDP வெளியீடுகள் (2015, 2018, 2022, 2023—தற்காலிகம்).
⭕ICSF/ADB மீன்பிடி துறை அறிக்கைகள் (வட மாகாணத்தின் போருக்கு முன்/பின் பங்கு).
⭕யாழ் தேவி (2014) மீட்பு—IRCON/ரயில்வே குறிப்புகள்.
⭕நாகப்பட்டினம்–KKS சர்வதேச படகு (2023) அறிவிப்புகள்.
⭕IndiGo சென்னை–யாழ்ப்பாணம் (2024) தினசரி சேவை.
⭕KKS துறைமுக மேம்பாடு (2024) உதவி நிதி அறிவிப்புகள்.
⭕ADB Conflict‑Affected Region Emergency Project ஆவணங்கள்.
⭕ஆனையிறவு உப்பளங்கள்/உப்பு‑தாதுக்கள் தொடர்பான தொழில்துறை குறிப்புகள்.
⭕ஆச்சுவேலி தொழிற்பூங்கா/SME குழும விரிவாக்க குறிப்புகள்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's talk something posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share