RJ Askar

RJ Askar VasanthamFM/TV News Reader,presenter,Atrist,poet,writer

16/09/2026
16/09/2026
STF பிடியில் அங்கொட பிரியங்கரவின் பிரதான போதைப்பொருள் சதிவலைப் பின்னல் முகவர்வெள்ளவத்தை - நாகஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப...
16/09/2026

STF பிடியில் அங்கொட பிரியங்கரவின் பிரதான போதைப்பொருள் சதிவலைப் பின்னல் முகவர்
வெள்ளவத்தை - நாகஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையின் போது, துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தொகையுடன் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த அங்கொட பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான முகவராகச் செயற்பட்டு வந்தவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை II பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுவினால் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதயவியல் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா:-————————————கிழக்கு மாகாண மக்க...
16/09/2026

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதயவியல் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா:-
————————————

கிழக்கு மாகாண மக்களுக்கான விரிவான மற்றும் நவீன இருதய சிகிச்சைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள புதிய இருதயவியல் பிரிவு கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (16) முற்பகல் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 8 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக மொத்தம் 2,403 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கமும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனமும் (JICA) வழங்கிய நட்புரீதியான ஆதரவிற்கும், இத்திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

அரவிந்த மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடி விராந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமைக்கு தாயாரின் இறுதிச் கிரியையே காரணம் - வழக்...
16/09/2026

அரவிந்த மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடி விராந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமைக்கு தாயாரின் இறுதிச் கிரியையே காரணம் - வழக்கறிஞர் தகவல்..

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக புதிய விமானங்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சந்தேகநபருக்குப் பிணையாளர்களாக (பிணைதாரிகளாக) ஆஜராகியிருந்த இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பசந்த அமரசேன இன்று பிடி விராந்து பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான காலஞ்சென்ற கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்காகப் பிணை நின்ற பிணைதாரிகளான அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் இன்றைய தினம் (16) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையiயடுத்தே இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாக மன்றில் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும், அவர்களின் தாயாரின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு எந்தவொரு எழுத்துமூலமான அறிவித்தலையும் விடுக்கத் தவறியுள்ளதால், பிடி விராந்தை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதுகுறித்த விடயங்களை அறிவிக்குமாறு நீதவான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துடனான தோல்விக்குத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாமையே காரணம்: சரித் அசலங்கஇங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு...
16/09/2026

இங்கிலாந்துடனான தோல்விக்குத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாமையே காரணம்: சரித் அசலங்க

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியைச் சந்திக்கத் திட்டங்களைச் சரியாகச் செயற்படுத்தாமை முக்கிய காரணம் என இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (15) நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக எந்தவொரு அனுசரணையாளரும் (Sponsor) முன்வராமை சுட்டிகாட்டத்தக்கது .

இங்கிலாந்து அணி வழங்கிய 255 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்குச் சுருண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கை அணி முகங்கொடுத்த 19 ஓவர்களில், எந்தவொரு ஓட்டமும் பெறாத 61 பந்துகள் வீசப்பட்டமை அந்த இன்னிங்ஸின் மற்றுமொரு சுட்டிகாட்டத்தக்க விடயமாகும்..

வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சே...
16/09/2026

வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலக சம்பியன் ரமேஷ் தரங்க, நாட்டிற்கு வருகை தந்தபோது அவரது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து டர்கிஷ் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது, ரமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து டர்கிஷ் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்!முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனை...
16/09/2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஆன் டி லிவேரா (Anne de Livera) என்பவரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 01:10 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவையின் SQ-469 இலக்க விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (15) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் சிங்கப்பூருக்குப் பயணம் செய்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷவை சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகளுக்காக அழைத்துச் சென்றுள்ள ஆன் டி லிவேரா அவர்கள், சிகிச்சை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்துகம சி.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கர மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது...
16/09/2026

மத்துகம சி.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கர மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூபா 42 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், நீண்ட காலமாக அப்பகுதி மக்களாலும் பாடசாலை சமூகத்தாராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேவையாகும். தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இப்பணிகள், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when RJ Askar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share