THINK LANKA

THINK LANKA “--- Think Smart - Think Sri Lanka ---“
(1)

Think Lanka is an independent news and analysis platform covering Sri Lanka’s politics, economy, climate change, and people’s issues with clarity and facts. Think Lanka என்பது இலங்கையின் அரசியல், பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் மக்களின் குரலை உண்மைகளுடன் தெளிவாக எடுத்துரைக்கும் சுயாதீன ஊடக மேடையாகும்.

அதிக விலைக்கு அரிசி விற்ற கடைகள் முற்றுகை! பெருந்தொகை பணம் அபராதம்அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் குடிநீர...
27/04/2026

அதிக விலைக்கு அரிசி விற்ற கடைகள் முற்றுகை!
பெருந்தொகை பணம் அபராதம்

அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் குடிநீர் போத்தல்கள் விற்ற பல வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் அதிரடியாக சுற்றிவளைத்தனர். பல இடங்களில் வர்த்தகர்களுக்கு ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சோதனைகள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஸ்ஸப்ப தேரரின் விசித்திரமானபுதுக் கதை22 பேருக்கு மொட்டை போட்டு, காவி உடை அணிவித்து போதைப்பொருளை கொடுத்து அனுப்பியது ஒரு...
27/04/2026

கஸ்ஸப்ப தேரரின் விசித்திரமான
புதுக் கதை

22 பேருக்கு மொட்டை போட்டு, காவி உடை அணிவித்து போதைப்பொருளை கொடுத்து அனுப்பியது ஒருவேளை அரசாங்கத்தின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

- பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர்

கொழும்பில் பாரிய போதை மாத்திரை வேட்டை! 4 பேர் கைதுகொழும்பு கோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுப் பணியகம் நடத்திய விசேட சோத...
27/04/2026

கொழும்பில் பாரிய போதை மாத்திரை வேட்டை! 4 பேர் கைது

கொழும்பு கோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுப் பணியகம் நடத்திய விசேட சோதனையில் சுமார் 2.04 இலட்சம் போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.4 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தர்மபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தை விற்பனை முயற்சி!கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ....
27/04/2026

தர்மபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தை விற்பனை முயற்சி!

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்ய முயன்ற தாய், உடந்தை ஆண் மற்றும் வாங்கியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

27/04/2026

அர்ச்சுணா எம்.பி மீது கல்லை விட்டு எறிந்த பெண்மணி.

டபக்கென்று அர்ச்சுணா துப்பாக்கியை கையில்
எடுத்ததால் பரபரப்பு

நாமலின் புதிய கண்டுபிடிப்புஇப்போது நம்மிடம் ஒரு பிக்பொக்கெட் அரசாங்கம் உள்ளது. அது பட்டப்பகலில் நிதி அமைச்சகத்தைக் கொள்ள...
27/04/2026

நாமலின் புதிய கண்டுபிடிப்பு

இப்போது நம்மிடம் ஒரு பிக்பொக்கெட் அரசாங்கம் உள்ளது. அது பட்டப்பகலில் நிதி அமைச்சகத்தைக் கொள்ளையடித்துள்ளது. திருடன் என்று கூறிக்கொண்டு திரியும் பிக்பொக்கெட் திருடன் சொல்வதைக் கேட்டு, அப்பாவி மக்கள் அவனைத் துரத்திச் செல்கிறார்கள்.

- நாமல் ராஜபக்ஷ

நீண்டகாலமாக டிமிக்கி கொடுத்து வந்தயாழப்பாண போதைப்பொருள் வியாபாரி கைதுயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்ப...
27/04/2026

நீண்டகாலமாக
டிமிக்கி கொடுத்து வந்த
யாழப்பாண போதைப்பொருள்
வியாபாரி கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

23/04/2026

ஹிரு சொந்தக்காரரின் தம்பியை வெளியில் எடுப்பதற்கு புதிய ஜனாதிபதி ஒருவர் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவரின் தம்பிக்கு கம்பி எண்ண வேண்டிவரும். அதனால்தான் அரசாங்கத்தை கவிழ்த்து நாமலை கொண்டுவர பார்க்கின்றனர்.

- அசித்த நிரோஷன் எம்.பி.

யாழ் நகர அபிவிருத்திக்கு 5 ஆண்டு திட்டம் – முதல் கட்டமாக ரூ.250 மில்லியன் ஒதுக்கீடுயாழ் நகரை 5 ஆண்டு திட்டத்துக்குள் அபி...
23/04/2026

யாழ் நகர அபிவிருத்திக்கு 5 ஆண்டு திட்டம் – முதல் கட்டமாக ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு

யாழ் நகரை 5 ஆண்டு திட்டத்துக்குள் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகர அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

பழைய பேரூந்து நிலையம், திண்மக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் இதில் ஆராயப்பட்டன. அடுத்த ஆண்டில் யாழுக்கு 10 மெட்ரோ பேருந்துகள் வழங்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

23/04/2026

நிதி அமைச்சு கணினி அமைப்பில் அங்கீகரிக்கப்படாத இணைய ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. காவல்துறை மற்றும் தொடர்புடைய பிரிவுகள் விசாரணையை ஆரம்பித்துள்ளன. மேலதிக ஆய்வுக்காக 5 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

- அமைச்சர் அனில் ஜயந்த

இலங்கையரின் ஆயுட்காலம் உயர்வுகடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்...
23/04/2026

இலங்கையரின் ஆயுட்காலம் உயர்வு

கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில்
உயர்ந்துள்ளது. இதற்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் வெற்றியே முக்கிய காரணம். 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் போலியோ, ரூபெல்லா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், குழந்தை மரண விகிதம் குறைந்து, நாட்டின் பொது சுகாதார நிலை மேம்பட்டுள்ளது.

- நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் பாலித கருணாபேம

சுரேஸ் சலேவை காப்பாற்றியரணில் விக்ரமசிங்க?ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவரை சுரேஷ் ச...
23/04/2026

சுரேஸ் சலேவை காப்பாற்றிய
ரணில் விக்ரமசிங்க?

ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவரை சுரேஷ் சலே பரிந்துரைத்ததாகவும், விசாரணை குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டதாகவும் சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

ரணிலின் ஆட்சிக்காலத்தில் சுரேஷ் சலேவுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டமை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when THINK LANKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share