20/01/2026
M.kokulsn
ஆசிரியர் #இடமாற்றங்களின்போது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்!
ஆசிரியர் இடமாற்றத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றுநிருபம் 13/59 மற்றும் தேசிய இடமாற்றக் கொள்கை (2007/20) கூறும் முக்கிய தகவல்கள்
❓ கேள்வி 1: இடமாற்றம் பெற்ற ஒரு ஆசிரியர் உரிய நாளில் புதிய பாடசாலையில் கடமையை ஏற்கத் தவறினால் என்ன நடக்கும்?
✅ பதில்: இடமாற்றக் கட்டளை கிடைத்ததும், உரிய திகதியில் அல்லது அதற்கு அடுத்த நாளில் முன்னனுமதி அல்லது விடுமுறை அனுமதி இன்றி கடமையை ஏற்கத் தவறினால், அவர் தாமாகவே பதவியை விட்டு விலகியவராக (Vacation of Post) கருதப்படுவார். அத்துடன் அவரது இடமாற்ற உத்தரவும் ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும்.
❓ கேள்வி 2: ஒரு ஆசிரியர் உரிய நாளில் கடமையைப் பொறுப்பேற்க முடியாவிட்டால் அதிபர் என்ன செய்ய வேண்டும்?
✅ பதில்: குறித்த ஆசிரியர் உரிய நாளில் சமூகமளிக்காதது மற்றும் அதற்கான விடுமுறை அனுமதி பெறாதது குறித்து 24 மணிநேரத்திற்குள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதிபர் அறிவிக்க வேண்டும். இதன் பிரதி ஒன்று அலுவலக நிர்வாகக் கிளைக்கும் அனுப்பப்பட வேண்டும்.
❓ கேள்வி 3: இடமாற்றம் பெற்ற ஆசிரியரின் பெயர் விபரங்கள் சம்பப் பட்டியலில் (Salary Sheet) தொடரலாமா?
✅ பதில்: இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல் வராதவரை, அந்த ஆசிரியரின் பெயரை சம்பப் பட்டியலில் அனுமதிக்கக் கூடாது. இதனை மீறி ஏதேனும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால், அந்தத் தொகை அதிபரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
❓ கேள்வி 4: இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீடு (Appeal) செய்திருந்தால் பழைய பாடசாலையிலேயே தொடர முடியுமா?
✅ பதில்: ஆம். இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீட்டுச் சபையில் முறையிட்டிருந்தால், அதற்கான தீர்ப்பு கிடைக்கும் வரை தற்போது பணியாற்றும் பாடசாலையிலேயே சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
❓ கேள்வி 5: மேன்முறையீட்டுச் சபையின் முடிவு எவ்வளவு காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்?
✅ பதில்: மேன்முறையீட்டுச் சபையானது இடமாற்றம் பெற்ற திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தனது இறுதி முடிவை ஆசிரியருக்கு வழங்க வேண்டும்.