At-Taqwa

At-Taqwa � DM for Paid Promotion
� Islamic Brands Collaboration
� Islamic Content | Dawah | Awareness

✨ நல்லுறவு ஏற்பட துஆ ✨நபி ஷுஐபு (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِ...
02/04/2026

✨ நல்லுறவு ஏற்பட துஆ ✨
நபி ஷுஐபு (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
📖 “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக. தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் சிறந்தவன்.”
📌 (அல்குர்ஆன் 7:89)
🌿 மனிதர்களுடன் நல்லுறவு, நியாயம் மற்றும் அமைதி நிலைக்க இந்த துஆ ஒரு அழகான வழிகாட்டல்…
#துஆ #குர்ஆன் #நினைவூட்டல் #அமைதி #இஸ்லாம்

✨ நெஞ்சம் விரிவடைய துஆ ✨நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲رَبِّ اشْرَحْ لِي صَدْرِيوَيَسِّرْ لِي أَ...
01/04/2026

✨ நெஞ்சம் விரிவடைய துஆ ✨
நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
📖 “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை விரிவாக்கி தருவாயாக!
என் காரியங்களை எனக்கு எளிதாக்கிவைப்பாயாக!”
📌 (அல்குர்ஆன் 20:25–26)
🌿 மன அழுத்தம், குழப்பம் இருக்கும் நேரங்களில் இந்த துஆ நமக்கு அமைதியையும் தெளிவையும் தரும்…
#துஆ #குர்ஆன் #நினைவூட்டல் #இஸ்லாம்

✨ குழப்பங்களில் இருந்து நேர்வழி பெறும் துஆ ✨நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲إِنَّ رَبِّي لَس...
31/03/2026

✨ குழப்பங்களில் இருந்து நேர்வழி பெறும் துஆ ✨
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கேட்ட அழகான வேண்டுதல் 🤲
إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
📖 “நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை கேட்பவன்.”
🤍 “என் இறைவனே! என்னையும், என் சந்ததியினரையும் தொழுகையை நிலைநிறுத்துவோராக ஆக்குவாயாக. என் துஆவையும் ஏற்றுக் கொள்வாயாக.”
🤲 “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், அனைத்து முஃமின்களையும் மறுமை நாளில் மன்னிப்பாயாக.”
📌 (அல்குர்ஆன் 14:39–41)
🌙 குழப்பமான நேரங்களில் இந்த துஆ நமக்கு ஒளியாக இருக்கும்…

Kpm Sharif Abdhul Malik குர்ஆன் ஹதீஸ் சுன்னா குர்ஆன் ஹதீஸ்களை அறிந்து பின்பற்றுவோம் Mohamed Nimžǎțħ

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து பெரிய அடையாளங்களில் யஃஜுஜ், ம...
23/03/2026

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து பெரிய அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் குறித்து திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் அல்ல. அவர்கள் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகின்றனர்.

துல்கர்னைன் கட்டிய தடுப்பு

முன்பு ஒரு காலத்தில் துல்கர்னைன் என்ற அரசர் உலகின் பல பகுதிகளுக்கு பயணம் செய்தார். அவர் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அடைந்த போது, அதற்கப்பால் எந்த மொழியையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைச் சந்தித்தார்.

அவர்கள் துல்கர்னைனை நோக்கி:

“துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று கேட்டனர்.

அதற்கு துல்கர்னைன்:

“என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. நீங்கள் எனக்கு உதவுங்கள்; உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை அமைக்கிறேன்” என்று கூறினார்.

அவர் இரும்புப் பாளங்களை அடுக்கி, அதன் மீது உருகிய செம்பை ஊற்றி இரண்டு மலைகளுக்கிடையே ஒரு வலுவான தடுப்பை அமைத்தார்.

இதனால் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரால் அந்தத் தடுப்பின் மீது ஏறவும் முடியவில்லை; அதில் துளை போடவும் முடியவில்லை.

(அல்குர்ஆன் 18:94–99)

யுக முடிவில் அவர்கள் வெளிப்படுவார்கள்

அந்தத் தடுப்பு ஒரு காலம் வரை நிலைத்திருக்கும். ஆனால் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அது உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்படுவார்கள்.

“யஃஜூஜ், மஃஜூஜ் திறந்து விடப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்.”

(அல்குர்ஆன் 21:96)

அவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் அளவுக்கு கூட்டமாக இருப்பார்கள்.

யஃஜூஜ் மஃஜூஜ் செய்யும் அழிவு

அப்போது அல்லாஹ் அவர்களை வெளிப்படுத்துவான். அவர்கள் பூமி முழுவதும் பரவி விடுவார்கள்.

அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா ஏரியின் தண்ணீரைக் குடித்துவிடுவார்கள். பின்னால் வருபவர்களுக்கு தண்ணீர் எதுவும் மிஞ்சாது.

அந்த நேரத்தில் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் முற்றுகையிடப்படுவார்கள். கடும் பஞ்சம் நிலவும். ஒரு மாட்டின் தலை கூட மிகப் பெரிய செல்வத்துக்கு சமமாக மதிக்கப்படும்.

அப்போது ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். உடனே அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் கழுத்துகளில் ஒரு நோயை ஏற்படுத்துவான். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்து விழுவார்கள்.

பூமி முழுவதும் அவர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கும். அதனால் துர்நாற்றம் பரவும்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பெரிய பறவைகளை அனுப்புவான். அவை அந்த உடல்களைத் தூக்கிச் சென்று எறியும்.

பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். பூமி முழுவதும் சுத்தமாகி விடும்.

(முஸ்லிம் 5228)

அதன் பிறகு பூமியில் வளம் பெருகும்

அதன் பின்னர் பூமியில் அபிவிருத்தியும் பரகத்தும் ஏற்படும்.

ஒரு மாதுளையைப் பலர் சேர்ந்து சாப்பிடுவார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள்.

பாலில் பரகத் ஏற்படும். ஒரு ஒட்டகத்தின் பால் ஒரு பெரிய கூட்டத்துக்கு போதுமானதாக இருக்கும்.

(முஸ்லிம் 5228)

யஃஜூஜ் மஃஜூஜின் எண்ணிக்கை

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்தே வந்தவர்கள்.

“அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளைப் பெற்ற பிறகே மரணிப்பார்கள்.”

(தப்ரானி)

இதனால் அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதை அறியலாம்.

அவர்கள் தோற்றம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் தோற்றத்தைப் பற்றி கூறும்போது:

• முகங்கள் கேடயம் போல அகன்றதாக இருக்கும்

• கண்கள் சிறியதாக இருக்கும்

• முடிகள் செம்பட்டையாக இருக்கும்

(அஹ்மத் 21299)

அவர்கள் அடைக்கப்பட்டுள்ள இடம்

யஃஜூஜ் மஃஜூஜ் எந்த நாட்டில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாகக் கூறவில்லை.

அதனால் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் உறுதியாகக் கூற முடியாது.

இன்றைய நவீன சாதனங்கள் இருந்தாலும் பூமியின் ஒவ்வொரு பகுதியும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மலைகள், காடுகள், குகைகள் போன்ற பகுதிகளில் மனிதன் இன்னும் முழுமையாகச் சென்று பார்க்கவில்லை.

எனவே உலகின் எங்காவது ஒரு பகுதியில் அவர்கள் மறைந்து இருப்பது சாத்தியமற்றதாகக் கருத வேண்டியதில்லை.

அவர்கள் அழிக்கப்பட்ட பின்

யஃஜூஜ் மஃஜூஜ் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா செய்வார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் ஹஜ் செய்ய யாரும் இல்லாத நிலை உருவாகும். அப்போது தான் உலக முடிவு நாள் ஏற்படும்.

(புகாரி 1593)

22/03/2026

Ramadan is over,
Eid is over,
Back on the same depressed life again.💔🥺

நோன்புப் பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நற்செயல்கள் என்னவெனில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அதிகால...
20/03/2026

நோன்புப் பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நற்செயல்கள்

என்னவெனில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அதிகாலை நேரத்தொழுகையை (பஜ்ர்) நிறைவேற்றிட வேண்டும். பிறகு, புத்தாடை அணிந்து, நறு மணம் பூசி, ஏதேனும் உணவு, பழங்களை ஒற்றைப்படையில் சாப்பிட வேண்டும்.

சூரியன் உதயமாகி 15 அல்லது 20 நிமிடத்திற்க்குள் அதன் நிழல் மூன்று மீட்டர் அளவு சாயும் நேரம் வந்தவுடன் ஊர் மக்கள் ஒன்று கூடி, ஒற்றுமையாக திடல் நோக்கி சென்று தொழுதிட வேண்டும். அதற்கு முன்பு ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு, விளிம்பு நிலையில் வாழும் பொருள் இல்லாதோருக்கு நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாத் அல் பித்ர்) முதலில் வழங்கிட வேண்டும்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் செல்லும் போது வழியில் தென்படும் ஏழைகளுக்கு ஈகையை அள்ளி வழங்கிட வேண்டும்.

தொழுகை முடிந்ததும் அமைதியாக கலைந்து சென்று, இல்லம் திரும்பும்போது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில் தென்படும் ஏழை களுக்கும் ஈகைகளை வாரி வழங்கிட வேண்டும்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

நோன்புப் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையான அதே ஆண்டில் கடமையாக்கப்பட்டது. முப்பது நாட்கள் நாம் நோன்பு வைப்பதற்கு உதவிய இறைவனுக்கு நன்றி பாராட்ட இறைவன் வகுத்துக் கொடுத்த தினம் தான் பெருநாள் தினம். வகுத்துக் கொடுத்த தொழுகைதான் நோன்புப் பெருநாள் தொழுகை. நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை முடிந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.' (அறிவிப் பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

`நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும்-பின்னும் எதையேனும் தொழவில்லை.

பெருநாள் தினத்தின் தொழுகையிலும் கூட இறைவனுக்கு அடுத்து ஏழைகளின் நலனை நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கான தர்மங்களை வசூல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து வைத்தார்கள்.

நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒன்று கூடி, அறுசுவை விருந்து படைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்து பிறரையும் உண்டு மகிழச் செய்து, எல்லோரிடமும் இணங்கி பெருநாளைக் கொண்டாட வேண்டும்.

இரண்டு பெருநாட்களிலும் விதவிதமான உணவு பண்டங்களை சமைத்து, வயிறார உண்டு பிறரின் பசியையும் போக்க வேண்டும். இரண்டு பெருநாட்களிலும் பட்டினியாக இருந்து நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

`நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள், மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.' (ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

1) பெருநாளில் இறைவனை வணங்கி வாழவேண்டும்,

2) இல்லாதவருக்கு வழங்கி வாழ வேண்டும்,

3) எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும்.

இதுதான் இஸ்லாமிய இரு பெருநாட்களின் தத்துவமாக அமைந்துள்ளது. பெருநாள் அன்று இனிய மாலைப் பொழுதினிலே கேளிக்கை, நையாண்டி, ஆடல்-பாடல் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் உறுதியுடனும், மன வலிமையுடனும் மனநிறைவாக மகிழ்ந்து கொண்டாடுவோம்.

பெருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது. மார்க்கத்திற்கு முரணாக உள்ள அனாச்சாரங்களில் ஈடுபடக்கூடாது.

இலங்கையில் உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை (வெள்ளிக்கிழமை இரவு) ...
19/03/2026

இலங்கையில் உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை (வெள்ளிக்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.

அவ்வகையில், ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2026 மார்ச் 21ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் 01ஆம் பிறை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

🌟 சொர்க்கவாசியின் சலுகைகள் - ஒரு முழுமையான பார்வை 🌟அன்பான நண்பர்களே! இன்று சொர்க்கவாசிகள் அனுபவிக்கும் அற்புதமான சலுகைகள...
18/03/2026

🌟 சொர்க்கவாசியின் சலுகைகள் - ஒரு முழுமையான பார்வை 🌟

அன்பான நண்பர்களே! இன்று சொர்க்கவாசிகள் அனுபவிக்கும் அற்புதமான சலுகைகள் பற்றி சிந்திப்போம். அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்துள்ள சொர்க்கம் எத்தகையது என்று குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

---

🏰 நுழைவாயில் சலுகைகள்:

🚪 சொர்க்கத்தின் 8 வாயில்கள் - உங்கள் விருப்பப்படி எந்த வாயிலின் வழியாக வேண்டுமானாலும் நுழையலாம்
👥 ரய்யான் என்ற சிறப்பு வாயில் - நோன்பாளிகள் மட்டும் நுழையும் சிறப்பு வாயில்
🤝 மலக்குகள் உங்களை வரவேற்பார்கள்: "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள்; ஆகவே, இதில் நிலையாகத் தங்கியிருங்கள்" (அல்குர்ஆன் 39:73)

---

👑 ஆடம்பர வசதிகள்:

🛏️ தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன கட்டில்கள், பட்டால் நிரம்பிய மெத்தைகள்
💎 ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரண்மனைகள்
🌴 அடர்ந்த நிழல் தரும் மரங்கள்
🌹 குங்குமம், கஸ்தூரி போன்ற நறுமணங்கள்
👗 பட்டு மற்றும் பூம்பட்டாடைகள் - என்றும் அழியாத ஆடைகள்
💍 தங்க வளையல்கள், முத்துக்கள் அணியும் அலங்காரங்கள்

---

🍇 உணவு பானங்கள்:

🍎 எந்தப் பழத்தை விரும்பினாலும் உடனே கிடைக்கும்
🥩 அவர்கள் விரும்பும் பறவை இறைச்சிகள்
🍷 தூய்மையான, போதை தராத மது ஆறுகள்
🥛 சுவையில் மாறாத பால் ஆறுகள்
🍯 தெளிவான தேன் ஆறுகள்
🍶 தண்ணீர் ஆறுகள்
🍴 70,000 தட்டுகளில் உணவு பரிமாறப்படும்
🍽️ கடைசி உணவாகவும் சுவையாக இருக்கும்

---

👨‍👩‍👧‍👦 குடும்ப சந்தோஷங்கள்:

💑 ஹூருல் ஈன் - தூய்மையான, அழகிய துணைகள்
👨‍👩‍👧 நம்பிக்கையாளர்களாக இருந்த குடும்பத்தார் ஒன்று சேர்வார்கள்
👶 குழந்தைகள் என்றென்றும் இளைஞர்களாக இருப்பார்கள்
❤️ எந்தப் பொறாமையும், வெறுப்பும் இருக்காது
🤝 உண்மையான நட்பு என்றென்றும் நிலைக்கும்

---

😊 உணர்வு சுகங்கள்:

😌 எந்தச் சோர்வும், களைப்பும் இருக்காது
😴 தூக்கம் கூட விருப்பப்பட்டால் மட்டுமே
🚽 எந்த மல ஜல கழிவுகளும் இருக்காது
🤧 எச்சில், சளி, தும்மல் போன்றவை இருக்காது
😭 எந்தக் கவலையும், துக்கமும் இல்லை
🥰 முகங்களில் என்றும் பிரகாசமும் மகிழ்ச்சியும்
🎵 யாருக்கும் கேட்காத இனிய குரல்கள் - தாவூத் நபியின் குரல் போன்று

---

🏞️ இயற்கை எழில்:

🌳 நிழல் தரும் மரங்கள் - 100 வருட பயண தூரம் நிழல்
🍃 குளிர்ந்த காற்று
💧 தங்கம், வெள்ளி, முத்து, ரத்தினங்களால் ஆன கூழாங்கற்கள்
🌸 மணம் வீசும் பூக்கள்
🏝️ மணல் கூட கஸ்தூரியால் ஆனது
🌊 பரந்த தோட்டங்கள்

---

✨ மாபெரும் சிறப்புகள்:

👁️ அல்லாஹ்வின் தரிசனம் - மிகப்பெரிய சுகம்! மேகங்களுக்குப் பின்னால் இருந்து சந்திரனைப் பார்க்க முடியாதது போல் இல்லாமல், பகலில் சூரியனைத் தெளிவாகப் பார்ப்பது போல் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள்

🏆 அல்லாஹ்வின் திருப்தி - "இவற்றையெல்லாம் விட மிகப் பெரியது அல்லாஹ்வின் திருப்தியே!" (அல்குர்ஆன் 9:72)

👑 விஜிட் அல்லாஹ் - ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அல்லாஹ்வை சந்திப்பார்கள்

📜 அல்லாஹ் கூறுவான்: "நேர்மையான ஆண்களுக்கும், நேர்மையான பெண்களுக்கும் சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது. அதில் நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு தூய்மையான மாளிகைகள் உண்டு. அல்லாஹ்வின் திருப்தி மிகப்பெரியது. இதுவே மகத்தான வெற்றியாகும்." (அல்குர்ஆன் 9:72)

---

🏷️ சொர்க்கத்தின் பெயர்கள்:

1️⃣ ஜன்னத்ுல் ஃபிர்தௌஸ் - மிக உயர்ந்த சொர்க்கம்
2️⃣ தாருஸ்ஸலாம் - சமாதானத்தின் இல்லம்
3️⃣ தாருல் முகாமா - நிரந்தர இல்லம்
4️⃣ ஜன்னாத்துல் அத்ன் - நிரந்தர தங்கும் சொர்க்கம்
5️⃣ தாருல் கரார் - நிலையான இல்லம்
6️⃣ தாருல் ஹுல்த் - என்றென்றும் இருக்கும் இல்லம்
7️⃣ தாருல் முத்தகீன் - இறையச்சமுள்ளவர்களின் இல்லம்

---

💫 சிறப்பு குறிப்புகள்:

🔹 சொர்க்கத்தில் எவரும் எந்தத் துன்பமும் அடைய மாட்டார்கள்
🔹 சொர்க்கவாசிகள் என்றென்றும் இளைஞர்களாக இருப்பார்கள்
🔹 ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கும்
🔹 சொர்க்கத்தில் எதுவும் சலிப்பை ஏற்படுத்தாது
🔹 சொர்க்கவாசிகளின் பிரார்த்தனை "சுப்ஹானக்கல்லாஹும்ம" என்றும், அவர்களின் முகவரி "ஸலாமுன்" என்றும், அவர்களின் பிரார்த்தனையின் முடிவு "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்றும் இருக்கும்

---

🤲 துஆ:

யா அல்லாஹ்! எங்கள் அனைவருக்கும் உன்னதமான ஃபிர்தௌஸ் சொர்க்கத்தை வழங்குவாயாக!
எங்களை முக்தா (நரக நெருப்பிலிருந்து விடுபட்டவர்கள்) ஆக்குவாயாக!
எங்கள் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பாயாக!
உன்னை தரிசிக்கும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் வழங்குவாயாக! ஆமீன் 🤲

ஊனமாகப் பிறப்பது... இறைவனின் கோபமா? 🤔 அல்லது...? 🫂நம் சமூகத்தில் ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்துவிட்டால், "இது இறைவனின் சாபம...
18/03/2026

ஊனமாகப் பிறப்பது... இறைவனின் கோபமா? 🤔 அல்லது...? 🫂

நம் சமூகத்தில் ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்துவிட்டால், "இது இறைவனின் சாபம்" அல்லது "இவர்கள் செய்த பாவத்தின் பலன்" என்று பலர் பேசுவதைக் கேட்கிறோம். 😔💔

ஆனால் இஸ்லாம் இதைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? இது முற்றிலும் மாறுபட்ட, ஆழமான பார்வை. 🏻✨

🌙 இஸ்லாமிய நம்பிக்கையின் படி:

1. இது ஒரு சோதனை (பரீட்சை): 🏋️‍♂️
ஊனமாகப் பிறப்பது குழந்தையின் பாவத்திற்காகவோ, பெற்றோரின் தவறுக்காகவோ நிகழ்வதில்லை. இது அல்லாஹ்விடமிருந்து வரும் ஒரு சோதனை. இந்தச் சோதனை யாருக்கு?
· குழந்தைக்கு: தன் நிலையைப் பொறுமையுடன் ஏற்று, இறைவனை நம்பி வாழ்வது.
· பெற்றோருக்கு: பொறுமையாக, அன்புடன் பிள்ளையை பராமரித்து, அதற்குரிய நன்மையை அடைவது.
· சமூகத்திற்கு: அவர்களை ஏளனம் செய்யாமல், அரவணைத்துச் செல்வது.

2. இது பாவத்தின் பலன் அல்ல: 🙅‍♂️
திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது: "எந்த ஒரு சுமையையும் சுமப்பவர் மற்றவரின் சுமையை சுமக்க மாட்டார்." (அல்குர்ஆன் 53:38). அதாவது, ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றொருவர் தண்டிக்கப்படமாட்டார். ஒரு குழந்தை தன் பெற்றோரின் பாவத்திற்காக தண்டிக்கப்படுவதில்லை.

3. இது கருணையின் அடையாளம் கூட: 🌟
சில நேரங்களில், ஊனங்கள் மூலம் அல்லாஹ் ஒரு குழந்தையை இவ்வுலகின் தீமைகளிலிருந்து பாதுகாக்கிறான். மேலும், இதன் மூலம் அக்குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் மகத்தான நன்மைகளை வழங்குகிறான்.

👨‍👩‍👧 இதில் பெற்றோருக்கு என்ன கிடைக்கும்?

· மகத்தான நன்மை (அஜ்ர்): ஒரு ஊனமான குழந்தையை அன்புடன் பராமரிக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சிரமத்திற்கும் அல்லாஹ் பெற்றோருக்கு நன்மைகளை வழங்குகிறான். 😇
· சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்து: பொறுமையுடன் இக்குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெற்றோருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடம் வாக்களிக்கப்பட்டுள்ளது. 🏡
· ஒரு குறைந்தபட்சம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உடலில் எந்தக் குறை இருந்தாலும், அது எனக்கு சொர்க்கத்தில் ஒளியாக மாறும்" என்பதைப் போல, இவ்வுலகின் குறைகள் மறுமையில் ஒளியாக மாறும்.

💬 நாம் என்ன செய்ய வேண்டும்?

· பொறுமை: பொறுமையே மிகப்பெரிய ஆயுதம். 🤲
· அன்பு: அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். ❤️
· மரியாதை: அவர்களை சமூகத்தின் முக்கிய அங்கமாக மதியுங்கள். 🤝
· துஆ செய்யுங்கள்: அவர்களுக்கு சுகத்தையும், பொறுமையையும் தருமாறு இறைவனிடம் வேண்டுங்கள். 📿

🤲 துஆ:
"யா அல்லாஹ், ஒவ்வொரு சோதனையையும் எங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவாயாக! ஒவ்வொரு சிரமத்திற்கும், பொறுமைக்கும் எங்களுக்கு நன்மைகளை வழங்குவாயாக! ஊனமான சகோதரர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மேலான வெகுமதியைத் தருவாயாக! ஆமீன்." 🤲✨

#இஸ்லாம் #ஊனமாகபிறப்பது #சோதனை #பொறுமை #அன்பு #மாற்றுத்திறனாளிகள் #துஆ

The Prophets in Islam
18/03/2026

The Prophets in Islam

ஜமால் ரையான் அவர்களின் பெயரால்  பகிரப்படும் நெஞ்சை உருக்கும் வரிகள்.சில வார்த்தைகள் வாசிக்கப்படுவதில்லை... அவை உணரப்படுப...
16/03/2026

ஜமால் ரையான் அவர்களின் பெயரால் பகிரப்படும் நெஞ்சை உருக்கும் வரிகள்.

சில வார்த்தைகள் வாசிக்கப்படுவதில்லை... அவை உணரப்படுபவை.

சில செய்திகள் சத்தமாக வருவதில்லை... அவை ஒரு மெல்லிய கிசுகிசுப்பாக வந்து ஆழமான தழும்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன.

✨ ஃபிர்அவ்னின் கதை தண்ணீரால் முடிவுக்கு வந்தது.

✨ நம்ரூதின் கதை ஒரு கொசுவால் முடிவுக்கு வந்தது.

✨ காரூனின் கதை பூமிக்குள் புதையுண்டு முடிவுக்கு வந்தது.

✨ அப்ரஹாவின் கதை சிறு கற்களால் முடிவுக்கு வந்தது.

முழு வரலாற்றையும் சுருக்கமாகக் கூறும் ஒரு செய்தி இது:

அக்கிரமக்காரர்களின் கதைகளை அல்லாஹ் மிக எளிய காரணங்களைக் கொண்டும், பலவீனமான கருவிகளைக் கொண்டும், சில நேரங்களில் மிகச்சிறிய உயிரினங்களைக் கொண்டும் முடித்து வைக்கிறான். 🕊️

வலிமை என்பது ஆயுதங்களில் இல்லை...

ஆதிக்கம் என்பது உரத்த குரலில் இல்லை...

முடிவு என்பது 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்று நினைப்பவன் கையில் இல்லை.

மாறாக, முடிவு எப்போதும் இறைவனின் கையிலேயே இருக்கிறது. 🤲✨

தோற்கடிக்கப்படமாட்டாது என்று நினைத்த எத்தனையோ சக்திகள் வீழ்ந்து போயின.

தன்னை அழிவற்றவன் என்று நினைத்த எத்தனையோ அக்கிரமக்காரர்கள் அழிந்து போயினர்.

ஒரு கணத்தில் பூமி முழுவதையும் ஆக்கிரமித்திருப்பதாகத் தோன்றிய எத்தனையோ பொய்கள், ஒருபோதும் இருந்ததே இல்லை என்பது போல மறைந்து போயின.

இந்த வார்த்தைகளில் உள்ள ஆழமான செய்தி:

"அநீதி எப்படி முடிவுக்கு வரும்?" என்று கேட்டு உங்கள் இதயத்தை வருத்திக் கொள்ளாதீர்கள்.

அது வீழும் விதத்தைப் பற்றி சிந்தித்து உங்கள் ஆன்மாவைத் தீர்த்துக் கொள்ளாதீர்கள்...

ஏனெனில், நாம் எதிர்பாராத இடத்திலிருந்தே முடிவு வரும் என்பதை வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. 🌧️🪨🦟

நிம்மதியாக இருங்கள்...

நீதி தாமதமாகலாம், ஆனால் அது ஒருபோதும் அழிந்து போகாது.

ஞானம் மறைந்திருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் இல்லாமல் போகாது.

இந்த வார்த்தைகளை எழுதியவருக்கு இறைவன் அருள் புரியட்டும் 🤍.

உணர்ச்சியை விட உறுதியே முக்கியமானது என்பதையும், இறைவனின் மீதான நம்பிக்கை எல்லா சத்தங்களையும் விட வலிமையானது என்பதையும் இது நமக்கு நினைவூட்டட்டும்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-Taqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share