Local News

Local News உடன் செய்திகள்

 #மட்டக்களப்பு  #ஆரையம்பதியில்  #பஸ்வண்டி  #மோதியதில் 3  #வயது  #ஆண்குழந்தை  #உயிரிழப்பு  #சாரதி  #கைதுஆடைத்தொழில்சாலைக்...
30/06/2025

#மட்டக்களப்பு #ஆரையம்பதியில் #பஸ்வண்டி #மோதியதில் 3 #வயது #ஆண்குழந்தை #உயிரிழப்பு #சாரதி #கைது

ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்வண்டியில் ஏற முற்பட்ட பெண்ணான தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பஸ்வண்டி மோதிய விபத்தில் குழந்தை பரிதபகராமக உயிரிழந்ததையடுத்து சாரதியை கைது செய்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி முதலாம் பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய பிரகாஷ் றிகேஸ்வரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த வீதியைச்சேர்ந்த தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கம்பனி பஸ்வண்டியில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பஸ் வண்டியில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பஸ்வண்டி ரயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Bahriyans 2002 (O/L) Batch அமைப்பினால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கல்வி மேம்பாட்டிற்கான நிதியுதவி வழ...
30/06/2025

Bahriyans 2002 (O/L) Batch அமைப்பினால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கல்வி மேம்பாட்டிற்கான நிதியுதவி வழங்கி வைப்பு..!
~~~~~~~~~~~~~~~~~~~

ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்

கல்முனை Bahriyan’s 2002 O/L Batch அமைப்பினால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் எழுதும் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள், விஷேட வகுப்புக்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிதியுடன் கடந்த கால வினாப்பத்திர பொதியை பெற்றுக் கொள்வதற்கான நிதி என்பன இன்று (30) காலை ஆராதனை நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களான SN. ஹஸ்மி, SL. நாசிக் ஆகியோரால் அதிபர் M. நவாஸ் செளபி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். மேலும் காலை ஆராதனைக் கூட்டத்தில் Bahriyan’S 2002 ( O/L) Batch அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா!தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற...
30/06/2025

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தரும், வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் யோ. நந்தகோபன் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான எந்திரி ச. சர்வராஜா கலந்துகொண்டிருந்தார்.

இவ் விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 250 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன. முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ரூபிகா அருந்தவம் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிவிழி சுதாஜி வெள்ளிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சற் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்சினி டன்ஸ்ரன், மன்னார் சேவியர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றித்திக்கா அன்ர அன்ரன் பிலிப்ஸ், யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை விருதை இம்முறை பாக்கியநாதன் சசிக்குமார், பாக்கியநாதன் ராஜ்குமார் ஆகிய இருவரும் பெற்றிருந்தார்கள். மரநடுகைப் பணியைச் சிறப்பாகச் செய்துவரும் சகோதரர்களான இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் அதிக எண்ணிக்கையான தாவரங்களை அடையாளம் கண்டவர்கள் தாவராவதானிகளாகவும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ள இவ்விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. பலகருத்துக்கழகத்தின் கல்வியியல் சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார். இலங்கையில் வழங்கப்பட்டுவரும் சூழல்சார் விருதுகளில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த முன்னிலை விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் மோதிய வேனும் மோட்டார் சைக்கிளும்  தீப்பற்றி எரிந்து நாசம் - கிளிநொச்சி பூநகரியில் சம்பவம்தனியார் வாகனம் ஒன...
30/06/2025

நேருக்கு நேர் மோதிய வேனும் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்து நாசம் - கிளிநொச்சி பூநகரியில் சம்பவம்

தனியார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனமும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Adaderana

வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன் எஸ்.எம்.எம்.முர்ஷித்.ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் ...
30/06/2025

வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 24.06.2025ம் திகதியன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக படகில் சென்ற மூவர் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனைத் தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்தவரை மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் தாக்கி நிலையில் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குத்தி விட்டதாகவும் நோவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டு வரும் நோக்கில் வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை வந்தடைந்தது.

மரணமடைந்தவர் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்ஆ பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய மீராலெப்பை சஹாப்தீன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இம்மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடித்துறைமுக கடலோரப்பாதுகாப்புப் படையினரும் நடாத்தி வருகின்றனர்.

*எரிபொருள் விலை குறைந்தது ஐம்பது சதமாவது குறைக்கப்படும்…- அமைச்சர்*எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைந்தது 50 சதமாவது குறை...
30/06/2025

*எரிபொருள் விலை குறைந்தது ஐம்பது சதமாவது குறைக்கப்படும்…- அமைச்சர்*

எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைந்தது 50 சதமாவது குறைய வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இருப்பினும், விரைவில் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“மறுமலர்ச்சி காலத்தில் பொறியியல் நிபுணர்களின் பங்கு” என்ற தலைப்பில் தேசிய அறிஞர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பொறியியல் நிபுணர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய நாட்களில், எரிபொருள் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் சேமித்து வைத்துள்ளனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ஆனால் இதுபோன்ற செயல்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும், எண்ணெய் விலைகள் தவிர்க்க முடியாமல் குறையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எண்ணெய் விலை எவ்வளவு குறையும் என்பதை சரியாகக் கூற முடியாது என்றாலும், குறைப்பு இருக்கும் என்பது உறுதி என்று அமைச்சர் ஜெயக்கொடி குறிப்பிட்டார்.

*GMOA தலைவராக மீண்டும் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன்*அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ...
29/06/2025

*GMOA தலைவராக மீண்டும் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன்*

அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அந்தந்த பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 #ஓட்டமாவடியில் டயர் வெடித்ததில் லொரி குடைசாய்ந்து விபத்து.!!சிறிய ரக லொரி  ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன...
28/06/2025

#ஓட்டமாவடியில் டயர் வெடித்ததில் லொரி குடைசாய்ந்து விபத்து.!!

சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் வைத்து இன்று (28) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கொழுப்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொரியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொரியின் டயர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் லொரியை ஒழுங்கு படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

28.06.2025

 #சுவையான  #திரிபோஷா கப்கேக் அறிமுகம்நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அ...
27/06/2025

#சுவையான #திரிபோஷா கப்கேக் அறிமுகம்

நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் புதிய தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க கூறுகிறார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷாவை மீண்டும் கொடுக்கலாம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், திரிபோஷா நிறுவனம் பல்வேறு சுவைகளில் சத்தான மற்றும் சுவையான திரிபோஷா கப்கேக் (Cup Cake) தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.

சொக்லேட், வாழைப்பழம், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி மற்றும் மாம்பழ சுவைகளில் திரிபோஷா Cup Cake கள் தயாரிக்கப்படவுள்ளன.

நிறுவனத்தின் ஜா-எல தலைமை அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க தெரிவித்தார்.

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த மாளிகைக்காடு பிரதேச பய...
27/06/2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த மாளிகைக்காடு பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!!!
-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•-•
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்தில் YWMA மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து மாளிகைக்காடு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இருசக்கர நாற்காலி வழங்கிவைப்பட்டன.

இதன்போது பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சுகாதாரஊடக அமைச்சின்  வழி காட்டுதலில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்குணவு விழிப்புணர்வு நிகழ்வ...
27/06/2025

சுகாதாரஊடக அமைச்சின் வழி காட்டுதலில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்குணவு விழிப்புணர்வு நிகழ்வு

(சிஹாரா லத்தீப்)

கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தும் விழிப்புணர்வு திட்டம் ஒன்றை சுகாதாரமற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த மாவட்ட மட்டத்தில் நடத்தி வருகின்றனர்.

சுகாதாரமற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலில் இந்த விசேட திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போசாக்கற்ற கர்ப்பிணி தாய்மாருக்கு போசாக்கு உணவுகளை விழிப்புணர்வூட்டும் விசேட திட்டமொன்று மட்டக்களப்பு மாவட் ட த்தில்தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கர்ப்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டங்களும், கண்காட்சிகளும்,விழிப்புணர்வு ஊர்வலங்களும்,செயலமர்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உணவுகளை விழிப்புணர்வூட்டும் கண்காட்சியொன்று நடைபெற்றது.

ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கௌரி, மற்றும் தினேஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய தாய்சேய் நலன் வைத்திய அதிகாரி கே கிருசுதன்ஸஉள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த சத்துணவு கண்காட்சியில் க ர்ப்பிணி தாய்மார்கள் உட் கொள்ள வேண்டிய சத்துணவுகள் சிறுபிள்ளைகளைக் கொண்டுள்ள தாய்மார்மற்றும் பாலூட்டும் தாய் மார்கள் கடைப் பிடிக்க வேண்டிய உணவு வகைகள் சத்துணவுவகைகள்,கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தும். விழிப்புணர்வு பதாகை களும்காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் அல்ஹாஜ். எம்.எஸ். நழீம் அவர்களினால் பழைய பொதுச்சந்தை கட்டட தொகுதியினை வியாபாரிகளிடம் விரைவி...
27/06/2025

ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் அல்ஹாஜ். எம்.எஸ். நழீம் அவர்களினால் பழைய பொதுச்சந்தை கட்டட தொகுதியினை வியாபாரிகளிடம் விரைவில் கையளிக்கும் முகமாக சுயாதீனமாக அனைத்து விடயங்களையும் திறன் பட மேற்கொள்வதற்கு 11நபர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவானது கடந்த திங்கட்கிழமை தற்காலிக பொதுச்சந்தைக்கு நேரடியாகச் சென்று விபரங்களை சேகரித்துக் கொண்டது.

சேகரிக்கப்பட்ட விபரங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கூட்டமானது கௌரவ தவிசாளர் அவர்களது தலைமையில் 2025-06-25ஆம் திகதி பி.ப 8.00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பழைய சந்தை கட்டட தொகுதியினை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கௌரவ உறுப்பினர் எம்.ஐ.ஏ நாசர், எஸ்.எம் ஜப்பார், ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், எஸ். றகுபரன், குழு சார்பாக எம்.எல்.ஏ வாஜித், ஏ.சி.எம் சயீட், ஏ.ஏ லுதுப் றஹ்மான், எம்.எஸ். அபூதாஹிர், எம்.எஸ். பஸீர், எம்.ஜே. றபியுதீன், எம்.எஸ்.எம். நஸீர், எம்.எல்.எம் இம்தியாஸ், எம்.எஸ்.ஏ கபூர், உட்பட நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், வருமானப் பரிசோதகர்களான என்.வாஹித், எம்.எஸ்.எம் தாரிக், ஏ.சி.எம் சப்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Address

Kayar Road
Eravur

Telephone

+94775162245

Website

https://chat.whatsapp.com/LAlff9GHiYs8JHKOnLpsZ1

Alerts

Be the first to know and let us send you an email when Local News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share