SL News Magazine

SL News Magazine உலக தமிழ் பேசும் மக்களுக்கான இலங்கை ?

10/02/2023

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰
*10.02.2023*
*சூரியனின் ஒரு பகுதி உடைகிறதா? [VIDEO]*
https://chat.whatsapp.com/JKjoa46em5sCHkYGQaiARZ
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியனின் மேற்பரப்பின் ஒரு பகுதி வட துருவத்தில் ஒரு சூறாவளி போல் பிரிந்து சுழல்வதை அவதானித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் இருந்து எரியும் ஒரு பொதுவான நிகழ்வு என்றாலும், இது முன்னோடியில்லாத உமிழ்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

*👧LOCAL NEWS WHATSAPP COMMUNITY GROUP- GIRLS 👇🏻*

https://chat.whatsapp.com/JXTnGEQQzplFGcdONg3uP1

*LIKE & FOLLOW OUR PAGE*
https://www.facebook.com/localnews.net?mibextid=ZbWKwL

*JOIN OUR FB GROUP*
https://www.facebook.com/groups/390944468820035/?ref=share
__________________________________
எமது குழுமங்களில் உங்களது விளம்பரங்கள் பதிவிட CONTACT NUMBER 👇
0775162245

09/10/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

தாமரைக் கோபுரம் சிங்கபூரில் உள்ள கோ பங்கி நிறுவனத்துடன் காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் சாகசத்தை (bungee jumping) ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பங்கி ஜம்ப் என்ற சாகசம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

https://chat.whatsapp.com/DA1aJF2fzQh7a2vS1xz1Q4

______________________

தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன்...

*📷 photo👇🏻*

09/10/2022
05/09/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

*இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியிடப்பட்டது!*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கி.கிராம் 113 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு புதிய விலையான 4,551 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

5 கி.கிராம் 45 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு புதிய விலை 1,827 ரூபாவாகவும் 2.3 கி.கிராம் 21 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு புதிய விலை 848 ரூபாவாகவும் விற்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

02/09/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

_📌லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் குறைவடையும் : புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் : லிட்ரோ தலைவர்_

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

02/09/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰
*திருமணமான சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

திருப்பூர் குதியை சேர்ந்த 32 வயதான ஒருவருக்கும், 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடல்புடலாக செய்து வந்தனர்.நேற்று காலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் புடைசூழ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ருவரும் சம்பிரதாயப்படி கோவிலில் பூஜை செய்து, ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்பு அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மணமகனின் காலை பார்த்த மணமகள், 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை கண்டார். இதுகுறித்து மணமகள் கேட்டபோது, ஒரு விபத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக மணமகன் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் அதை தன்னிடம் முன்பாகவே கூறாமல் மறைத்து விட்டதாக கூறி, தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

*LIKE & SHARE*

01/09/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

*இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம்*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்டத்திலான இணக்கப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின்படி, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளது.

48 மாத காலத்துக்கு இத்திட்டம் செயற்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

31/08/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

*செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அரச பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை : கல்வி அமைச்சு*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

31/08/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

*உச்சம் தொட்டது ஒகஸ்ட் மாத பணவீக்கம்*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8% ஆக காணப்பட்டிருந்
நிலையிலேயே ஒகஸ்ட்டில் 64.3% ஆக உயர்ந்துள்ளது.

ஜூலை மாதம் 90.9% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7% ஆகவும் ஜூலையில் 46.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 50.2% ஆகவும் அதிகரித்துள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் அதிகரிப்பு 0.83% ஆகவும் உணவு அல்லாத பொருட்கள் 1.62% ஆகவும் அதிகரித்ததுள்ளது.

31/08/2022

🇱🇰 *LOCAL NEWS* 🇱🇰

*டாக்டர்கள் வாங்கிய கோழி புரியாணியில் கரப்பான் பூச்சி பொரியல்: மட்டக்களப்பில் சம்பவம்!*

https://chat.whatsapp.com/COpoXcbbk6H3AVr7Ykglc3

கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவம் ஒன்றின் உரிமையாளாரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணயில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சில வைத்தியர்கள் விருந்துபசாரம் ஒன்றுக்காக கோழி புரியாணியை குறித்த ஹோட்டலில் ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரிந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு
பிரதேச சுகாதார வைத்திய
அதிகாரிக்கு முறைப்பாடு
தெரிவித்ததையடுத்து
உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை
சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தார்.

Address

K. P Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when SL News Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL News Magazine:

Share