
30/08/2025
அஸ்ஸலாமு அலைகும்
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ…
பாடசாலையின் பழைய மாணவர்களது பங்களிப்பு என்பது பாடசாலைகள் நல்ல முறையில் இயங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
அந்த வகையில் எமது மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 2019 பழைய மாணவர்களாகிய நாம் எமது சக்திற்கு ஏற்ப ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம் ..
அல்ஹம்துலில்லாஹ்.
பெரும்பாலும் நடுத்தர/மற்றும் ஏழை மாணவர்களே எமது பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். இந்நிலையில் மினசாரத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தேவைபடுகின்றது!
இன்னுமின்னும் சுமைகளை அந்த மாணவர்களின் மீது திணிப்பது இயலாத காரியமே!
இதற்கு மாற்றீடாக சோலர் பொருத்தும் போது எமது பாடசாலையின் பெரும் சுமையை நீங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாடசாலையின் பழைய மாணவர்களாக எம்மலான பங்களிப்பை வழங்கி வைத்துள்ளோம்..
குறித்த உதவியை வழங்கிய எமது 2k19 OBA MMNS உறவுகள் அனைவருக்கும் ஏக இறைவன் பறக்கத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..