
08/05/2025
*UNIVERSITY COURSE GUIDANCE PROGRAM -2025-*
Education and social Development association(ESDA) ஏற்பாட்டில் 2024/2025 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் மூன்று பாடங்களும் சித்தியடைந்த சகல துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு, கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்தல் மற்றும் ஏனைய கல்வியல் தொடர்பான தகவல்களை வழங்கும் நிகழ்வு, இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் கற்கின்ற சிரேஷ்ட மாணவர்களைக் கொண்டு முற்றிலும் இலவசமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ✨
◾🏫இடம் : மட்/அலிகார் தேசிய பாடசாலை பிரதான மண்டபம்
◾🗓️காலம் : 2024.05.11 ஞாயிற்றுக்கிழமை
◾⏳நேரம்: 8.00 am - 12.30pm
இந்நிகழ்வின் போது,
1. வெளிவந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி 03 பாடங்களிலும் சித்திகளைப் பெற்ற சகல துறை மாணவர்களுக்குமான பல்கலைக்கழக courses பற்றிய வழிகாட்டல்கள்
2. மிகச் சிறந்த மற்றும் குறைந்த z score பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கான நுட்ப முறைகள்.
3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை
4. Aptitude course இற்கு விண்ணப்பிக்கும் முறை.
5. பொதுக்கற்கை நெறிகள் பற்றிய தெளிவுகள் போன்றன வழங்கப்படும்
6. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய தெளிவூட்டல்கள்
7. எதிர்காலத்துக்கான தொழில் வழிகாட்டல்கள்
📍சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படும் இக்கருத்தரங்கில் நீங்களும் கலந்து கொள்வதோடு உங்கள் பல்கலைக்கழக பாடநெறித் தெரிவு மற்றும் உயர் கல்வி கனவு குறித்த உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி எதிர்காலத் திட்டத்தை சிறந்த முறையில் வகுத்துக் கொள்ள இன்றே பதிவு செய்யுங்கள்!
🖇️ https://surveyheart.com/form/681c6595ae73296d6ec8af24
இந்த இலவச வழிகாட்டல் நிகழ்வில் அனைத்து மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/FInmEDOMNMEJSmLhAzreTb
மேலதிக தகவல்களுக்கு
Azhar Mohamed (ESDA - president) : 75 017 3545
Project Head :
Ravoos (Educational Coordinator) : 75 617 7274
Caption & Design by : Ashfak (JU)