15/09/2024
நேற்றைய ‘சிரச-சடன’ நிகழ்ச்சியின் மூலம் அனுர தனது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறார் என்பது முதல், NPP தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல்வேறு சந்தேகங்கள் வரை சுற்றியிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் பதிலளித்தார்.
நிகழ்ச்சியை தொலைக்காட்சியூடாக நேரடியாகப் பார்த்தவர்களுக்குப் புறம்பாக, சுமார் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் Sirasa YouTube channel ஊடாகவும் 35,000 க்கும் மேற்பட்டவர்கள் AKD YouTube channel ஊடாகவும், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் Facebook ஊடாகவும் நேரடியாக கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
இதுவரை ‘சிரச-சடன’ நிகழ்ச்சியை (கடந்த 15 மணித்தியாலத்திற்குள் மாத்திரம்) 500,000 க்கும் மேற்பட்டோர் Sirasa YouTube channel ஊடாகவும், 300,000 க்கும் மேற்பட்டோர் AKD YouTube channel ஊடாகவும் பார்வையிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மாற்றம் ஒன்று வருகிறது! நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதாக அது அமையட்டும்! ☺️