newsinlanka.com

newsinlanka.com WhatsaApp 0710770539 website
https://newsinlanka.com

அட்டன் கல்வி வலயம் கேர்க்கசோல்ட் 02 த.வி அதிபராக யோகமலர் நியமனம் பெற்றுள்ளார்.கெம்பியன் த.வி பிரதி அதிபராக கடமையாற்றிய இ...
11/06/2026

அட்டன் கல்வி வலயம் கேர்க்கசோல்ட் 02 த.வி அதிபராக யோகமலர் நியமனம் பெற்றுள்ளார்.

கெம்பியன் த.வி பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் நேற்று மத்திய மாகாண ஆளுனரிடம் கேர்க்கசோல்ட் 02 இற்கான அதிபராக நியமன கடிதத்தினை பெற்றுக்கொண்டார்

11/06/2026

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஐ.எம்.எச்.ஓ நிறுவனத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் பி. முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் திருமதி எ. சுமதி கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.எச்.ஓ திட்ட இயக்குநர் கந்தையா விக்னேஸ்வரன் இ உதவி கல்வி பணிப்பாளர்களான டி. நாகராஜ் திருமதி.ஆர்.ஜெயந்தினி என்.சிவக்குமார் எஸ்.மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் தலவாக்கலை மசூதிக்கு வருகைஆர்.எப்.எம்.சுஹெல்"அனைத்து மதத் தலை...
11/06/2026

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் தலவாக்கலை மசூதிக்கு வருகை

ஆர்.எப்.எம்.சுஹெல்

"அனைத்து மதத் தலைவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்து, அதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை நோக்கிப் பணியாற்றுதல்" என்ற கருப்பொருளுடன், ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திட்டத்தின் கீழ், மதங்களுக்கிடையிலான மத மற்றும் குடிமைப் பங்காளர்களின் காலாண்டு மாவட்டக் கூட்டம் இன்று (11) தலவகெல மசூதியில் நடைபெற்றது.

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான தலைப்புகளில் அனைத்து மதத் தலைவர்கள், குடிமைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்கப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஸ்லாம் பற்றிய அறிவை வழங்குவதும், அந்த மதத்திற்குள் இருக்கும் கலாச்சாரங்களைப் பற்றிக் கற்பிப்பதும், புரிந்துகொள்ள வைப்பதும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

இலங்கையின் தேசிய சமாதான சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குடிமைச் சமூக அதிகாரிகள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள், மற்றும் இளைஞர் சமூகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அட்டன் கல்வி வலயம் லொனக் தமிழ் வித்தியாலய அதிபராக கே.ஜெயபாலன் நியமனம் பெற்றுள்ளார்.குயில்வத்தை கல்லூரி பிரதி அதிபராக கடம...
11/06/2026

அட்டன் கல்வி வலயம் லொனக் தமிழ் வித்தியாலய அதிபராக கே.ஜெயபாலன் நியமனம் பெற்றுள்ளார்.

குயில்வத்தை கல்லூரி பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநரிடம் லொனக் த.வி அதிபராக நியமன கடிதத்தினை பெற்றுள்ளார்.

அட்டன் கல்வி வலயம் டிக்கோயா நுண்கலை கல்லூரி புதிய அதிபராக கந்தையா மகேந்திரன் நியமனம் பெற்றுள்ளார்.செல்வகந்தை தமிழ் வித்த...
11/06/2026

அட்டன் கல்வி வலயம் டிக்கோயா நுண்கலை கல்லூரி புதிய அதிபராக கந்தையா மகேந்திரன் நியமனம் பெற்றுள்ளார்.

செல்வகந்தை தமிழ் வித்தியாலய அதிராக கடமையாற்றிய இவர் நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநரிடம் நுண்கலை கல்லூரி அதிபராக நியமன கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான  விண்ணப்பம் கோரல்2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மத...
11/06/2026

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 க.பொ.த (உயர்தர) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகக் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் இணையவழி (Online) விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் 09ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பிப்பதற்கான இறுதித் நாளாகும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11/06/2026

வாகன உரிமையாளருக்கு எப்படி இருக்கும் நாயின் இச்செயலை கண்டதும்....

11/06/2026

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்காக பாடல் வரிகளை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து பாடியும் காட்டி விட்டார்

11/06/2026

மத்திய மாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள்

மத்திய மாகாணத்தில் உள்ள 08 கல்வி வலயங்களிலுள்ள 14 பாணசாலைகளுக்கு புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அவர்களின் தலைமையில், கண்டி ஆளுநர் அலுவலக அரங்கில் நேற்று (10) நடைபெற்றது.

மத்திய மாகாண அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கண்டி, தெனுவர, தெல்தெனியா, கட்டுகஸ்தோட்டா, வத்தேகம, கொத்தமலை, ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 1C, 2 மற்றும் 3 ஆம் வகுப்புப் பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபோல, கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மதுபானி பியசேன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி, மாகாண கல்வி இயக்குனர் நவோமி ஹெட்டியாராச்சி, மேலதிக மாகாண இயக்குனர் (நிர்வாகம்) மங்கலிக திசநாயக்க, கல்வி அமைச்சகத்தின் பிரதி இயக்குனர் கே.டி.எம்.ஏ.கே. அலிகேவெல, மாண்புமிகு ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள், கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் நியமிக்கப்பட்ட அதிபர்கள் குழுவினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

10/06/2026

கொழுந்து மடுவத்தில் குவிந்து கிடக்கும் கடிதங்கள்

நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சல்லாவ வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக உடப்புஸ்சல்லாவ நகரில் உள்ள தபால் நிலையத்திலிருந்து டலோஸ் எனிக் தோட்டங்களுக்கு கடிதங்கள் விநியோகிப்பதற்காக டலோஸ் மற்றும் எனிக் தோட்ட காரியாலயங்களுக்கு சென்று அனைத்து கடிதங்களும் வழங்கப்படுகின்றன

இந்த கடிதங்கள் குறித்த தோட்டத்தில் காணப்படுகின்ற கொழுந்து நிறுக்கும் இடத்தில் பொதுவாக பெட்டிகளில் போடப்பட்டு காணப்படுகிறது. இவ்வாறு அநேக கடிதங்கள் மற்றும் பதிவு தபால் மூலம் வருகை தரும் கடிதங்கள் என காணப்படுகிறது.

இவை அனைத்தும் பொதுமக்களுக்கு நேரே வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதில்லை இதனால் மக்களுக்கு தபால் சேவை சிறப்பான தரமான செய்திகள் வழங்கப்படுவதில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்குவதோடு மக்களின் சிறப்பு உரிமைகள் கேள்விக்குறியானதாகவே காணப்படுகிறது. குறிப்பாக பாடசாலை கடிதங்கள் வங்கியில் இருந்து வரக்கூடிய கடிதங்கள் பதிவு கடிதங்கள் அவசர கடிதங்கள் எதுவாக இருப்பினும் குறித்த பெட்டியில் போடப்படுவதால் இவை குறித்த காலத்திற்குப் பிறகு குப்பைகளுக்கு செல்கின்றன.

வாசிக்க தெரிந்த மக்கள் அவர்களுக்கு கடிதங்கள் வரும் பட்சத்தில் பார்த்து எடுத்துக் கொண்டால் மாத்திரமே கடிதங்கள் அவர்களின் கைகளுக்கு செல்லும். அதனை விடுத்து தூர இடங்களில் இருப்பவர்கள் இந்த கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வி அமைச்சரிடம் விரைவியபோது குறித்த தோட்டத்திலிருந்து மக்கள் கடிதம் ஒன்று அவருக்கு வழங்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இத்தனை வருட காலங்களாக எவரும் கண்டு கொள்ளாத ஒரு விடயம் இனியாவது மக்களுக்கு விடிவு ஏற்படுமா என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது.

இந்த நவீன காலத்திலும் இவ்வாறான செயல்பாடுகள் அரச அதிகாரிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

ஆகவே எதிர்காலத்தில் இதற்கான சிறந்த தீர்வு பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when newsinlanka.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to newsinlanka.com:

Share