04/01/2021
சுயமாக தொழில் / வியாபாரம் செய்யும் அல்லது ஆரம்பிக்க ஆர்வம் உள்ள பெண்களுகான வாய்ப்பு!
Great opportunity for Women Entrepreneurs!
எதிர் வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி, 2021 அன்று மாலை 3:00 மணி முதல் இடம்பெறும். (இலங்கை நேரம்)
(Rhythmic Yoga Academy Sri Lanka)
ரித்மிக் யோகா அகாடமி வழங்கும் ஆன்லைன் நிகழ்வாகும்.
“WISE” (மகளிர்களுக்கான நிகழ்ச்சி திட்டம்) என்று அழைக்கப்படும் இவ் ஆன்லைன் நிகழ்வுக்கான உத்தியோகப்பூர்வ சமூகப்பங்காளியாக Volunteers LK மற்றும் நிகழ்ச்சி அனுசுரனையாக Leo Club of Colombo City மற்றும் Rotaract Club Of PanColombo மற்றும் ஊடக அனுசுரனையாக Gethu Tv , Nanban FM - நண்பன் FM Nanban TV - நண்பன் TV
வழங்குகின்றமை குறிபிடத்தக்கது.
இந்த நிகழ்வானது COVID-19 இன் போது ஏற்பட்டுள்ள சவால்கள் மிக்க இக்காலத்தில் பெண்களுக்கு வணிகத்தைத் தொடங்குவதற்கு அல்லது அதில் வெற்றிபெறுவதற்கு உதவுவதில் கவனம் செலுத்தி, இந்த நிகழ்வின் ஊடாக, பெண்கள் தங்கள் ஆரம்ப அனுபவத்தை அல்லது வியாபாரத்தை மேம்படுத்துவதில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.மேலும் வியாபாரம் மற்றும் யோகா மூலமாக அனுபவம் வாய்ந்தவர்களின் சொற்பொழிவு மற்றும் அறிவுரைகளையும் பெற்று கொள்ளலாம்.
அதுமாத்திரமின்றி இந் நிகழ்வின் முடிவில், பெண்கள் தொழில் முனைவோர் கனவைத் தொடர ஆலோசனைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் யோகா பயிற்சி மூலமான ஊக்குவிப்பு வழிமுறைகளும் உடல் மனம் ஆரோக்கியத்திறகான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் பெண்கள் பங்கு பெறலாம். எந்தவொரு பெண்களும் ஒரு தொழிலைத் தொடங்க விரும்புவதாயின் அல்லது உங்கள் வணிகத்தை அனைத்து தடைகளையும் கடந்து முன்னேற விரும்புகின்ற மற்றும் பாடசாலை கல்வியினை முடித்துள்ள பெண்களும் இந் நிகழ்வில் பங்கு பெறலாம்.
மொழிக்கான எவ்வித தடையும் இல்லை.
100% இலவசமாக வழங்கும் நிகழ்வு.
ஆன்லைன் பதிவு இங்கே கிளிக் செய்யவும். 👉 https://rhythmic.yoga/wise