19/04/2026
மலையக மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை.
இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ் (SIDPS) எனும் தொண்டு நிறுவனம், கலையின் ஊடாக சமூக மாற்றத்தை நோக்கி நகரும் கொட்டகலையை கேந்திரமாக கொண்டு இயங்கும் சங்கு கலைக்கழகம் (SANGU SKK) தொண்டு நிறுவனமும் இணைந்து விருத்தி மற்றும் unops நிறுவனத்தின் அனுசரணையில் 15, 16 மற்றும் 18ம் திகதிகளில் சாமிமலை ,நோர்வூட், ஸ்டோகம், மாநிலு, பொகவந்தலாவ , லிந்துல, நாகசேனை, மேரேயா, பசுமலை, டயகம, அக்கரபத்தனை,மன்றாசி, உடபுசல்லாவ, நிதண்டஹினா, ராகலை, கந்தபளை, நுவரேலியா, நானுயா ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் கிராமங்கள் தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைத்தார்கள்.
துண்lடு பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகள்.
01. Dithwa சூராவலியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாய பாதுகாப்பான இடங்களில் வீட்டு வசதிகளையும் அவர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தல்.
02.மலையக மக்களுக்கு வீடமை ப்பிற்க்காக பொருத்தமான காணி உறுதியுடன் குறைந்தது 20 பேர்ச்சேஸ் நிலைத்தை வழங்குதல்.
03. நாளாந்த சம்பள முறைக்கு பதிலாக நிரந்தர வாழ்வாதாரத் திற்க்கான புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
04.அனைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் மேலதிகமாக தேவையான காணிகளை ஒதுக்கி அதனை அளவீடு செய்து தோட்டத்துறையில் இருந்து வேறுபடுத்தி கிராம கட்டமைப்பு முறையின் மூலம் அரச கட்டமைப்பின் கீழ் கொண்டு வருதல்.
05.அரச தோட்ட காணிகளை (JEDB, SLSPC மற்றும் எல்கடுவ) தனியாருக்கு வழங்குவதை நிறுத்தி அதை அங்குள்ள மக்களுக்கு வாழ்வதற்கும் வாழ்வாதாரத்திற்குமாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
06.தற்போது தோட்ட குடியிருப்புக்களில் பரம்பரையாக வாழும் ஆயிரக்கானக்கான குடும்பங்கள் பலவந்தமாக குடியிருப்பதாக தாக்கல் செய்த நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுதல்.
07.தோட்டங்களின் குத்தகை காலம் மீண்டும் அதிகரிப்பதை தடுத்து மக்களுக்கு ஏற்ற வீடமைப்பு மற்றும் உணவு இறையான்மைக்கான கலப்பு பயிர்செய்கை முறைக்கான நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுத்தல்.
08. இந்திய வீட்டு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதுடன் மேலதிகமாக அரசு போதுமான நிதியை பாதிட்டினூடாக ஒதுக்கீடு செய்து வீடமைப்பு திட்டத்தை விரிவு படுத்துதல்.
09. அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் சுமார் 8000 க்கும் மேற்பற்ற குடும்பங்களுக்கு பாத்துக்கப்பான பிரதேசங்களில் காணி உரிமையுடன் தனி வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
10.மலையகத்தில் உள்ள சகல நிலங்களையும் விஞ்ஞன ரீதியி லான ஆய்வு செய்து அதன் அடிப்படையிலான சிறந்த தீர்மானம் ஒன்றிணை மேற்கொள்ளுதல்.
11.இதுவரை ஆயிரக்கானக்கான குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் நிலைமையை மாற்றியமைத்து உடனடியாக தனி வீடுகளில் அவர்களை
குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
போன்ற 11 கோரிக்கைகள் இதுண்டு பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தித்வா புயலின் பின்னர் வீடுகளை இழந்து தவிக்கும் பெருந் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம நகரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தொடர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிரந்தர இல்லங்கள் அமைக்க தற்போதைய அரசாங்கம் முன் வர வேண்டும் என கோரிக்கை முன் வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்குவோர் - விருத்தி மற்றும் UNOPS நிறுவனத்தினர்.