28/08/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இன்று அலுவலக வேலை நிமித்தம் வெளியில் செல்லும்போது கென்யா நாட்டைச்சேர்ந்த ஒரு சகோதரரோடு பயணிக்க நேர்ந்தது.
பயணத்தின் பாதிதூரம் பலநாள் நண்பன் ஒருவரைப்போன்று கதைத்துக்கொண்டு வந்த அந்த புதுநண்பர் கதையோட்டத்தின் நடுவே “நீங்கள் முஸ்லிமா” என்று என்னிடம் கேட்டார்… நான் ஆம் என்று கூறியவாரே நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று கேட்கவே, நான் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று சொன்னார்.
எமது இந்த அறிமுகத்திற்கு பிறகு ஒரு விடயத்தை என்னிடம் அழுத்தமாக கூறினார்.
அந்த ஒரு செய்தியை முகநூலில் இருக்கும் எனது மாற்றுமத நண்பர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் முன்வைக்க விரும்புகின்றேன்.
என்னோடு பயணித்த அந்த கென்யா சகோதரர் என்னிடம் இவ்வாறு கூறினார்.
“பாதிதூரம் வரை நீங்கள் முஸ்லிம் என்றோ நான் ஒரு கிறிஸ்துவர் என்பதையோ அறியாமலே நாம் அனைவரும் ஒரே அமைப்பிலுள்ள மனிதர்கள்தான் எனும் அடிப்படையில் மட்டுமே ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம்….தனிப்பட்ட நம்பிக்கையோடு வேறுபடும் வெவ்வேறு மதத்தவர்களாயினும் மனிதர்கள் என்ற அறிமுகம்தானே எங்களை இனங்காண வைத்தது.
ஆகவே, எதற்காக மதத்தை அடிப்படையாக வைத்து சண்டைகள் மற்றும் மதக்கலவரங்கள் ஏற்படவேண்டும்???? மனிதனை மனிதனாக மட்டுமே கருதி அவர்கள் நம்பியிருக்கும் மதத்தினை அடுத்தவர்களும் மதித்து நடந்தாலே இந்த உலகில் அதிகமான மதத்தின் சார்பில் இழக்கும் உயிர்களை வாழவைக்கலாமே”
என்று கூறினார்.
உண்மைதான்…..இந்த விடயம் எல்லோருக்கும் பொதுவானது.
எமது உள்ளங்களை அடுத்தவர்களின் நம்பிக்கைகளையும் கலாச்சாரங்களையும் மதிக்கும் விதமாக மாற்றிக்கொண்டால் பொதுமக்களை வைத்து மதத்தை காரணம் சொல்லி தீயபிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளையும் இனங்காணலாம்.
சுயபரிசோதணை செய்வோம்…..மனிதனை மனிதனாக மட்டும் மதிப்போம்!!!!!!
நன்றி,
இவண்
ஸப்வான் அப்துல் வதூத்