05/07/2025
போதுமான தகவல்களை வழங்காது தான் தோன்றித்தனமாக விசாரணைக்கு வாருங்கள் என பொலிசார் அழைத்தால் அது தொடர்பில் தனக்கு தகவல் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை
சந்தேக நபர்களை அல்லது சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கின்ற போது, பொலிஸ் போதுமான (adequate) தகவல்களை வழங்க வேண்டும் என்பதனை குற்றவியல் நடபடிக்கோவையினை மேற்கோள் காட்டி, சுற்றுநிருபம் ஒன்றினை பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டிள்ளார்.
பொலிஸ் தான்தோன்றித்தனமாக, எவ்வித விபரங்களையும் வெளியிடாமல், "விசாரணைக்கு வாருங்கள்" என அறிவிப்பது அன்றாடம் நடைபெற்று வருகின்றது. அறிவித்தலில் விசாரணை குறித்து போதுமான விபரங்கள் வழங்கப்படாதவிடத்து, அது தொடர்பில் அறிவியுங்கள்.
பல சந்தர்ப்பங்களில், தொல்பேசியினூடாக இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அழைக்கின்ற பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரையோ, விசாரணை தொடர்பான விபரங்களையோ வழங்காது, குறித்த திகதியில், குறித்த நேரத்திற்கு, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிப்பதனை நடைமுறையாகப் பின்பற்றிவருகின்றனர்.
பொலிஸ் அதிகாரியின் பெயர், அவரது தொடரிலக்கம், விசாரணை குறித்த விடயங்கள் ஆகியவற்றை வழங்காதவிடத்து அத்தகைய அழைப்புகளை உதாசீனம் செய்யுங்கள். இவ்வாறான அழைப்புகள் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் காரணமாகவும், மற்றத் தரப்பினருடான பொலிஸினுடைய 'உறவின்' காரணமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:
1. சந்தேக நபர்களுக்கு அழைக்கப்படும்போது குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
2. சாட்சிகளுக்கு அவர்களின் வாக்குமூலத்தின் நோக்கம் மற்றும் வாக்குமூலத்திற்கும், முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணைக்குமான பொருத்தப்பாடு (relevance) குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.
3. சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத காரணங்களுக்காக அழைக்கப்பட்ட நபர்களுக்கு கோரிக்கைக்கான போதுமான காரணம்/பின்னணி வழங்கப்பட வேண்டும்.
4. தொலைபேசி மூலம் அழைப்பணை (summons) அனுப்பப்பட்டால், பொறுப்பதிகாரி மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. விசாரணை தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத பிற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும்போது, குறிப்பாக அவைவாறு தகவல்களைப் பகிர்தல் வழக்கினைப் பாதிக்கக்கூடும் என்றால், அதிகாரிகள் இரகசியத்தன்மையைப் பேண வேண்டும்.
(Via Aingkaran Kugathasan)
Consequent to Supreme Court Fundamental Rights application 266/2023 where Vidura Ralapanwe challenged the CID summoning him for a facebook post which he wrote on the Ceylon Electricity Board, the acting IGP has issued a circular directing that when police notice suspects or witnesses to come to the police they must give adequate information to them. The IGP has drawn the attention of the police to the relevant provisions of the criminal procedure code where the police can act only where an offence has been revealed.