AARA TAMIL TV

AARA TAMIL TV video creater social networking

28/06/2025

சைவ ஆலயங்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூசை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விபரம் நம்மில் பலருக்கு தெரியாது. தொன்றுதொட்டு செய்து வரும் ஒரு வழக்கத்தை நாமும் அப்படியே கடைபிடிக்கிறோம் என்பதே நம் நிலைப்பாடாக இருக்கிறது. அறிந்து செய்யும் போதே எதுவும் அர்த்தமுள்ளதாகிறது என்பதால் தேங்காய் உடைப்பதன் பல்வேறு காரணங்களைப் பார்ப்போம்.

தேங்காய் ஒரு மனிதனின் தலை போன்று காணப்படுகிறது. மனிதனின் ஆணவத்தை, கர்வத்தைத் தலைக்கனம் என்று சொல்கிறோம். அன்பு இதயத்தில் இருப்பதாகக் குறிப்பிடுவது போலவே கர்வம் தலையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறோம். நம் ஆணவத்தை அழித்துக் கொள்வதற்கு அடையாளமாக நாம் தேங்காய் உடைக்கிறோம். அந்த ஆணவம் அழியாத வரை மனிதன் என்றுமே இறை அருளுக்குப் பாத்திரமாக ஆவதில்லை.

தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம். அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன் பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும் ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக தேங்காய் இருக்கிறது.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. இரண்டு கண்களுடன் பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறைவழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளின் போது மா இலைகளுடன் கூடிய நீர் நிரம்பிய கலசத்தின் மேல் தேங்காய் வைக்கப்பட்டு அந்தக் கலசம் பூசிக்கப்படுவதை பலரும் பார்த்திருப்போம். பெரியோர்களை வரவேற்கவும் கூட இது போன்ற கலசம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு உயர்ந்த நிலையில் தேங்காயை நம் முன்னோர் வைத்திருக்கக் காரணம் தேங்காயை ஆன்ம ஞானத்திற்கு சம்பந்தப்பட்ட பொருளாய் அவர்கள் நினைத்திருந்தது தான்.

தேங்காய் முற்றுவதற்கு முன் இளநீராய் இருக்கும் போது இறைவனின் அபிசேகத்திற்கு மிக உகந்ததாய் கருதப்படுகிறது. உப்பு நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் கொண்டாலும் தென்னை மரம் அதனை, சுவையான இனிப்பான இளநீராக மாற்றித் தருவதும் கூட பக்குவப்பட்ட ஞான மனநிலை பெற்றவரின் தன்மையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகத்தில் தான் பெறுவது எத்தனை மோசமானவைகளாய் இருந்தாலும் அவற்றை அப்படியே உலகிற்குத் திருப்பித் தந்து விடாமல் தன் ஞானத்தன்மையினால் அதனை நன்மை தருவனவாக மாற்றி உலகிற்கு அளிக்கும் ஞானியின் செயலாய் இளநீரைச் சொல்லலாம். அதனாலேயே இளநீர் இறை அபிசேகத்திற்கு விசேடமான பொருளாக எண்ணப்படுகிறது. அதனாலேயே இறைவனுக்கு இளநீர் அபிசேகம் செய்பவருக்கு ஆன்மிகம் அல்லது ஞானப் பாதையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கூறப்படுகிறது.

தேங்காயில் அறவே நீரற்ற முற்றிய கொப்பரைத் தேங்காயோ பற்றற்ற நிலைக்கு அடையாளமாய் மாறுகிறது. கொப்பரைத் தேங்காயாக மாறும் போது மூன்று மேலான நிலைகளைத் தேங்காய் அடைகிறது.

முதலாவதாக, தேங்காய் தன் அகப்பற்றான நீரை அகற்றி விடுகிறது.

இரண்டாவதாக, அந்த நீரின் உண்மையான சுவையையும், சத்தையும் தன்னுள் இணைத்துக் கொண்டு விடுகிறது.

மூன்றாவதாக, புறப்பற்றான ஓட்டை விட்டு விலகி விடுகிறது.

அதனால் தான் அறிஞர்கள் கொப்பரைத் தேங்காயை ஞானத்தோடு உவமைப்படுத்திக் கூறுவார்கள். உலகத்தில் இருந்து பற்றுத் தொடர்பினை முறித்துக் கொள்ளும் மனநிலைக்கு அறிகுறியாகவே கொப்பரையும் அதன் ஓடும் கருதப்படுகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயை வேள்விகளின் போது “பூரண ஆகுதி"யாகப் பயன்படுத்துகின்றனர். வேள்வி யாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் முதலில் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிறைவாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இவ்வாறு அதன் பற்றற்ற நிலையின் காரணமாக கொப்பரைத் தேங்காயே “பூரண ஆகுதி" ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.

இறைவனிடம் பிரார்த்தனை செய்து தேங்காய் நைவேத்தியம் ஆக செய்யப்படுகிறது. தேங்காய் பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிள்ளையாரிடம் ஏதாவது பிரார்த்தனை செய்து அது நிறைவேற தேங்காயை நாலாபக்கமும் சிதறுமாறு தெருவில் உடைப்பதும் உண்டு. தேங்காயை உடைப்பது ஆணவத்தை உடைப்பதற்கொப்பானது. சிதறு தேங்காய் உடைப்பதில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலையையும் காணமுடியும். எப்படி என்றால் சிதறு தேங்காய் துண்டுகளை எத்தனையோ ஏழைகள் எடுத்துச் செல்வது மறைமுகமாக செய்யும் தர்மமாகிறது.

இப்படி தேங்காய் இறைவடிவமாகவும், ஞான நிலைக்கான சின்னமாகவும் கருதப்படுவதால் தான் இறை வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

இப்படியான சிறப்பான தத்துவங்களை கொண்டதே சைவநெறியாகும்.

மதமாற்றக்கும்பல்களும் இறைமறுப்பு பதர்களும் இவ்வுண்மையை வாசித்து தெளிக....

🙏திருச்சிற்றம்பலம்🙏
பண்டிதர் செஞ்ஞொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன்
+94779773538
யாழ்ப்பாணம் இலங்கை

28/06/2025

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்....

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது.....

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!
---------------------------------

(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

(8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

(12) சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...

(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு.....

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

பண்டிதர் செஞ்சொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன்
+94779773538
இலங்கை

28/06/2025

_*இஷ்டி காலம் என்றால் என்ன?*_

நாள்காட்டியில் இஷ்டி காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.

அது என்ன 'இஷ்டி' என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அது என்ன என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப்பகுதியாகும். அதாவது, நான்காம் பாகமாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும் கூடிய காலம் இஷ்டி.

இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மீக நூல்கள் சொல்கின்றன.

இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும். இஷ்டி நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், பன்மடங்கு புண்ணியப் பலன்களைத் தரும். 'இஷ்டி' என்றாலே பூஜை, யாகம் என்றுதான் அர்த்தம்.

'ஓம் இஷ்டி பதயே நமோ நம' என்று குமாரஸ்தவத்தில் முருகப் பெருமானைப் பற்றி குறிப்பிடும் போது சொல்லப்பட்டுள்ளது. பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்றே இதற்குப் பொருள்.

முருகனின் பெயருக்கு விளக்கம்:

ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன்.

முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

குருபரன்: கு அஞ்ஞான இருள், ரு நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

கந்தன்: கந்து யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

சரவணபவன்: சரம் நாணல், வனம் காடு, பவன் தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

ஸ்வாமி: ஸ்வம் சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.

செவ்வேள்: செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

சேயோன்: சேய் குழந்தை, குழந்தை வடிவானவன்.

விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன், அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

சோமாஸ்கந்தன்: ச உமா ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து சிவம், சித்து உமை, ஆனந்தம் கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

சுப்பிரமணியன்: சு மேலான பிரம்மம் பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

மயில்வாகனன்: மயில் ஆணவம், யானை கன்மம், ஆடு மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.

ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது, சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் என்பதால், இன்றைய நாளில் உங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி வளம் பெறுங்கள்.

ஓம் சரவண பவ.

பண்டிதர் செஞ்சொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன்
+94779773538
இலங்கை

28/06/2025

பெண்களைப் பற்றிய 13 ரகசியம்:

1- ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அர்த்தம் இருக்காது. முடிந்தால், அவளை அமைதிப்படுத்துங்கள். மென்மையாக அவளை அணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அந்த கோபத்தை முடித்து வையுங்கள்.

2- ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம், அவள் உண்மையிலேயே மனதார நேசிக்கும் ஆணிடமிருந்து அவள் விலகி இருப்பதுதான். அவள் அப்போது மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

3- ஒரு பெண் ஒரு ஆணை நம்புவதற்கு நிறைய நேரம் எடுக்கும், அவள் மனதை மாற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. பொறுமையாக இருங்கள். நீங்கள் நடுவில் ஏதாவது குழப்பினால், அவளை மறந்துவிட வேண்டியதுதான்.

4- பெண் என்னும் பள்ளியில் நீங்கள் எப்போதுமே பாஸாக(தேர்ச்சி) முடியாது.

5- ஒரு பெண்ணுடனான உங்கள் திருமணச் சான்றிதழ் "ஓட்டுநர் உரிமம்" அல்ல, அது வெறும் "அனுமதி சீட்டு" மட்டுமே. அவள் மனதை கவர, தொடர்ந்து காதலில் இருக்க வேண்டும்.

6- அவள் இப்போது மிகவும் கசப்பாக இருக்கலாம், பிற்காலத்தில் மிகவும் இனிமையான தேவதையாக மாறக்கூடும், இவை அனைத்தும் உங்கள் அணுகுமுறையில் உள்ளது. ஆம், அவளை எப்போதும் சரியாக நடத்துங்கள்.

7- ஒரு பெண் எதையும் மறப்பதில்லை, அவள் அனுபவித்த அதிக வலியை எப்போதும் நினைவில் வைத்திருப்பாள். அவள் காயப்படுத்துவதைத் தவிர்க்கிறாள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து, அவளை அவ்வப்போது மன்னிக்கவும் பழகுங்கள்.

8- ஒரு பெண்ணால் மிகவும் ரகசியமாக இருக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் ஆண்களால் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, தங்கள் அறைக்குச் சென்று நெருங்கிய தோழிகளிடம் அழுவார்கள். எனவே அவளை உங்களுக்கான சிறந்த தோழியாக பாருங்கள். மாற்றுங்கள்.

9- எல்லா பெண்களும் தன்னிடம் ஒரு ஆண் கெஞ்சுவதை விரும்புகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் இதை தவறவிடுகிறார்கள்.
10- எல்லா பெண்களுக்கும் உப்பு போன்ற தனித்துவமான குணம் உண்டு, அவர்களின் இருப்பு கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இல்லையென்றால் அனைத்தும் சுவையற்றதாக போய் விடும்.

11- அவள் உன்னை நேசிக்கிறான் என்றால், நீ அவளிடம் கேட்கும் அனைத்தையும் அவளால் செய்ய முடியும், உன்னை மகிழ்ச்சியாக வைக்க முடியம். ஆனால், உன்னை காதலிக்க வேண்டும் என, அவளை கட்டாயப்படுத்தாதே.

12- நீங்கள் அவளைக் கவனித்துக் கொள்ளாவிட்டாலோ, அவளை திரும்ப திரும்ப காயப்படுத்தினாலோ, அவள் விரும்பும் ஒருவரைக் கண்டுபிடிப்பாள். தேர்ந்தெடுக்கும் உரிமையை எப்போதும் வைத்திருப்பாள் ஒரு பெண்.

13- ஒரு பெண் உன்னை உண்மையாக நேசித்தால், உன்னிடம் பணம் கேட்பதற்கு கூட அவள் வெட்கப்படுவாள், ஆனால் ஒரு நல்ல மனிதன் அவள் கேட்பதற்கு காத்திருக்க மாட்டான், குறிப்பாக அவள் உன்னை நேசித்தால், அவள் உன்னை ஒருபோதும் தேவையில்லாமல் செலவு செய்ய விடமாட்டாள். இது அவர்களின் தனிச் சிறப்பு.

உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் இருந்தால், அவளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் மதிப்பு மிக்கவர்கள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு நல்ல நேர்மையான பெண் இருக்க வேண்டும்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..

28/06/2025

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when AARA TAMIL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AARA TAMIL TV:

Share

Category