Jaffnacnn.com

  • Home
  • Jaffnacnn.com

Jaffnacnn.com jaffna news newspaper reported

வற்றாப்பளைக்கு பொங்கலுக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!
10/06/2025

வற்றாப்பளைக்கு பொங்கலுக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி பொங்கல் - 2025முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை...
07/06/2025

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி பொங்கல் - 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை #கண்ணகி_அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் வருகின்ற 09.06.2025 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.

1. 26.05.2025 ஆம் திகதி திங்கள் கிழமை - பாக்குத் தெண்டல் (அதிகாலை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அவ் ஆலயச்சூழலில்

2. 02.06.2025 ஆம் திகதி திங்கள் கிழமை - தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு (மாலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து சிலாவத்தை தீர்த்தக் கரையில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் காட்டாவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்து உப்பு நீரில் அம்பாளுக்கு விளக்கு வைக்கப்படும்)

3. 08.06.2025 ஆம் திகதி ஞாயிற்று கிழமை - காட்டு விநாயகர் பொங்கல்

4. 09.06.2025 ஆம் திகதி அதிகாலை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து பண்டங்களுடன் #வற்றாப்பளை_வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று விளக்கு வைக்கப்பட்டு அம்பாளுக்கு வைகாசிப் பொங்கல் நடைபெறும்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - உடலத்தினை தேடும் பொலிஸார்வவுனியாவில் தனது மனைவியின் க...
03/06/2025

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - உடலத்தினை தேடும் பொலிஸார்

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த கண்ணகை அம்மன் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம்
03/06/2025

கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த கண்ணகை அம்மன் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உறுதி...
03/06/2025

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உறுதி...

இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் பொங்கல் தீர்த்தம் எடுத்தல்
02/06/2025

இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் பொங்கல் தீர்த்தம் எடுத்தல்

ஓமந்தை விபத்தில் உயிரிழந்த இந்திய தூதரக உத்தியோகத்தர் பிரபா அண்ணணின் மகன் அக்க்ஷையும் விடைபெற்றார் அண்மையில் அகாலமான இந்...
01/06/2025

ஓமந்தை விபத்தில் உயிரிழந்த இந்திய தூதரக உத்தியோகத்தர் பிரபா அண்ணணின் மகன் அக்க்ஷையும் விடைபெற்றார்

அண்மையில் அகாலமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் யாழ் போதனா வைத்தியசாலை ICU இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01.06.2025 இரவு 8 மணியளவில்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 😥

‼️   கிளிநொச்சி பூநகரியில் நேற்று மாலை வாள்வெட்டு ,சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்.கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவுக்கு...
01/06/2025

‼️ கிளிநொச்சி பூநகரியில் நேற்று மாலை வாள்வெட்டு ,சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்.

கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் 31.05.2025 அன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பிரணவன் (வயது 28)என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இனம் தெரியாதவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்ந்த இரங்கல்.

முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தில்தோணியில் தாமரைப்பூ பறிக்கசென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் அதிர்ச்சியைஏற்படுத்...
01/06/2025

முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தில்
தோணியில் தாமரைப்பூ பறிக்க
சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில்
இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே

முல்லைத்தீவு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் தரம் 10 ல் கல்வி கற்கும்
மாணவிகள் இருவர் கோயில் கேணியில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் பலியாகி உள்ளனர்.
ஒரே நாளில் 4 உயிர்கள் போயிருக்கிறது.
முல்லைத்தீவில் நடந்த சோகம். கேணியில் தவறி விழுந்
பாடசாலை மாணவிகள் இருவர்.

முல்லைத்தீவில் தொடரும் சோகம்.. மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. ஒரே நாளில் பறிபோன 4 உயிர்கள்..!
01/06/2025

முல்லைத்தீவில் தொடரும் சோகம்.. மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. ஒரே நாளில் பறிபோன 4 உயிர்கள்..!

உயிரிழந்த மாணவிகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்😢😢
01/06/2025

உயிரிழந்த மாணவிகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்😢😢

முல்லைத்தீவில் நடந்த சோகம்.. செல்பி மோகத்தால் பறிபோன பாடசாலை மாணவிகளின் உயிர்.!குமுழமுனை கொட்டுக்கிணற்றுபிள்ளையார் ஆலய க...
01/06/2025

முல்லைத்தீவில் நடந்த சோகம்.. செல்பி மோகத்தால் பறிபோன பாடசாலை மாணவிகளின் உயிர்.!

குமுழமுனை கொட்டுக்கிணற்று
பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி
விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு - குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி
எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். இந் நிலையில்
இருவரும் கேணிக்குள் தவறி
விழ்ந்துள்ளனர். இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும்.
பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jaffnacnn.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share