25/11/2024
தீவிரம் அடையும் சூறாவளி!🌀
💐எமது பெறுமதிமிக்க உயிரையும், உடமைகளையும் இயற்கை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.💐
அதிகாலை இரண்டு மணிக்கு கிழக்குக் கரைக்கு நகர உள்ளதால், இருள் சூழ்ந்த சூழ்நிலையும்,நித்திரை மயக்கமான
நேரமுமாக இருப்பதாலும் மக்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருத்தல் மிக மிக அவசியம்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகாண கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தற்பொழுது உள்ள நிலவரப்படி இப்புயலானது திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனை, மட்டகளப்பு பிரதேச அருகாமையில் நகர்ந்து செல்லவுள்ளது.
தற்போது நகர்ந்து வரும் புயல் சில வேளை வேறு திசை நோக்கியும் செல்லலாம்.
🌀வேகமாக காற்று வீசும். கடற்பிரதேச அண்மையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்யுங்கள்.
🌀பாதுகாப்பற்ற, பழைய சேதமடைந்த வீடுகளில் தங்குவதைத் தவிருங்கள்.
🌀மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிருங்கள். மீனவ உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
🌀அங்கவீனர், மற்றும் வயோதிபர்களை பாதுகாப்பான இடத்தில் அமர்த்தவும்.
🌀முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்கவும்.
🌀மண்ணென்ணெய், விளக்கு, தீப்பெட்டி, மெழுகுதிரிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்.
🌀மழை அதிகமாக காணப்படுவதால்; மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள், குளங்கள் மற்றும் அணைக் கட்டுகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.
🌀குடிநீரை சேமித்து வைக்கவும்.
🌀காற்றிற்கு விழக்கூடிய சுவர்க் கடிகாரங்கள், அலங்காரப் பொருட்களை அகற்றிவிடுங்கள்.
🌀கால்நடைகளை உரிய இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.
💐எமது பெறுமதிமிக்க உயிரையும், உடமைகளையும் இயற்கை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.💐