Jaffna trekker

Jaffna trekker Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna trekker, Media/News Company, jaffna, Jaffna.

Company focuses to deliver high quality fabricated fiber material to satisfy industrial and social needs within the Sri Lankan market and export to foreign orders. Our strong product knowledge and expertise has allowed us to create a niche within the industry as a trusted party supplying durable goods for esteemed organizations at an attractive price.

01/01/2025
ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரிய யாகுடியா பிரதேசத்தில் நிரந்தர உறைபனியால் மூடப்பட்ட  ஒரு குழந்தை பாலூட்டியின் (mammoth) குறிப்பி...
24/12/2024

ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரிய யாகுடியா பிரதேசத்தில் நிரந்தர உறைபனியால் மூடப்பட்ட ஒரு குழந்தை பாலூட்டியின் (mammoth) குறிப்பிடத்தக்க வகையில் நன்கு பாதுகாக்கப்பட்ட எச்சங்களை நேற்று திங்கட்கிழமை கண்டுபிடித்தனர்.

50,000 ஆண்டுகள் பழமையான இந்த பாலூட்டி எச்சத்திற்கு "யானா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

100kg நிறை, மற்றும் 120cm உயரம் மற்றும் 200cm நீளம் கொண்ட யானா இறக்கும் போது ஒரு வயது மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பே உலகின் மிகச் சிறந்த பாதுகாக்கப்பட்ட பாலூட்டி சடலம் என்றும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏழு முழு எச்சங்களில் ஒன்றாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம், இதே பகுதியில் விஞ்ஞானிகள், 32,000 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடையதாகக் கருதப்படும் ஒரு காட்டுப்பூனையின் பகுதியளவு உடலின் எச்சங்களையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 44,000 ஆண்டுகள் பழமையான ஓநாயின் எச்சங்களையும் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதி...
21/12/2024

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி ஓகே நான் கிளம்பறேன்'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?'

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி'

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?'

🍁🌹🍁அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.

🍁🌹🍁எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.

🍁🌹🍁ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.

🍁🌹🍁அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.

🍁🌹🍁ஒரு சண்டை சங்கிலி தொடர்‌போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.

🍁🌹🍁அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.

🍁🌹🍁இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..
😔😔😔

ஆனாலும் விட மாட்டாங்க🙄🙄

இன்று அதிகாலை  (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையி...
18/12/2024

இன்று அதிகாலை (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்தில் பயணித்த சாரதி உதவியார் உட்பட, Landmaster சாரதி மற்றும், உதவியாளர் காயம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

14/12/2024

Really Surprising...

ஐந்து நிமிடம் தான் பொறுமையாக கேளுங்கள் கலிபோர்னியாவில் பூகம்பத்தில் தனது மகன்கள் மனைவி இவர்களை இழந்த ஒருவர் வெறுத்துப் போய் காட்டுப்பகுதியில் புலம்பி அலைந்து திரிந்தார்.

காயம்பட்ட ஒரு அழுக்கான அருவருக்கத்தக்க ஒரு குரங்கு குட்டியை கண்டார் எடுத்து வளர்த்தார்.

தனது தந்தையின் இசைக்கருவியை தூசு தட்டி எடுத்து மாலை நேரங்களில் இசைத்தார், அந்த குரங்குக்கும் கற்றுக் கொடுத்தார்.

அது இசையில் ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றது போன்று உடனடியாக மனிதர்களைப் போன்று வாசிக்க ஆரம்பித்தது.

இதோ உங்கள் முன்

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்!
05/12/2024

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்!

'Nation Branding campaign' என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை .....

1st: Colombo Sri Lanka 🇱🇰2nd: Auckland NZ 🇳🇿3rd: Shanghai China 🇨🇳4th: Toronto CA 🇨🇦
30/11/2024

1st: Colombo Sri Lanka 🇱🇰
2nd: Auckland NZ 🇳🇿
3rd: Shanghai China 🇨🇳
4th: Toronto CA 🇨🇦

 #குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்....1. வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அ...
29/11/2024

#குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்....

1. வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்கப் பழகிக்கொள்வது அவர்களின் கல்வி உயர்வுக்கும் உதவும். புத்தகங்களின் மூலம் அவர்களின் அறிவும் வளரும்.

2. உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்களைப் பழக்காமல், வீட்டுக்கு வெளியில் சென்று வெயிலில் விளையாட அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்கு அதில் உற்சாகமும் கிடைக்கும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவதால், சமூகத்தில் பழகும் குணமும் பெறுவார்கள். உடலும் நலமாக இருக்கும். கை, கால்களின் இயங்குதிறனும் சிறப்பாக வளரும்.

3. பணத்தைச் சேமிக்கக் கற்றுக்கொடுங்கள். பணத்தின் மதிப்பையும் உணர்வார்கள். தங்கள் கண்ணெதிரே உயரும் சேமிப்பைப் பார்த்து, சேமிக்கும் பழக்கத்தையும் பெறுவார்கள்.

4. டி.வி. கம்ப்யூட்டர், செல்போன் என்று ஒளிரும் ஏதோ ஒரு திரையைப் பார்த்தபடியே இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர். அவற்றுக்கு அடிமையாகவிடாமல், நேரக் கட்டுப்பாட்டை அறிமுகம் செய்யுங்கள்.

5. எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க அவர்களைப் பழக்குங்கள். பொம்மைகளைப் பிரித்துவைத்து விளையாடினால், மீண்டும் அவற்றை அடுக்கி வைக்கச் சொல்லுங்கள். படித்து முடித்ததும் புத்தகங்களை ஒழுங்காகப் பையில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது என்று பழகினால், எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்யும் திறமை அவர்களுக்குக் கிடைக்கும்.

6. தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்குச் சோம்பல் பழகாது. எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்வதற்குப் பழகிக்கொள்வர்கள்.

7. தாங்கள் இருக்கும் இடத்தையும் தங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, இனிமையான தூக்கம், வியர்வை சிந்தும் விளையாட்டு என்று உடல்நலனுக்கு உகந்த வாழ்க்கைமுறையை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

8. பல் துலக்குவது, குளிப்பது, முறையாகக் கை கழுவுவது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, வாயை மூடிக்கொண்டு இருமுவது, வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்ததும் கால்களைக் கழுவுவது என்று சுகாதாரமான நாகரிகங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். வளர்ந்த பிறகு அவர்களை எல்லோரும் மதிப்பார்கள்.

9. அக்கம்பக்கக் குடும்பத்தினர், தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என்று எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் பழகச் சொல்லுங்கள். நட்புகளை உருவாக்கிப் பராமரிப்பது வாழ்க்கை முழுக்கத் தேவைப்படும் ஒரு பண்பு.

10. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கடின உழைப்பைக் கொடுக்க அவர்களைப் பழக்குங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களை இது வாழ்க்கையில் உயர்த்தும்.

 #இலங்கையை அண்மித்த  #கடற்பரப்பில் உருவாகும்  #அழிவை ஏற்படுத்த வல்ல பேராபத்து.  #அவதானமாக இருப்போம் .....இன்று (23.11.20...
23/11/2024

#இலங்கையை அண்மித்த #கடற்பரப்பில் உருவாகும் #அழிவை ஏற்படுத்த வல்ல பேராபத்து. #அவதானமாக இருப்போம் .....

இன்று (23.11.2024) அதிகாலை 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு

நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இது எதிர்வரும் 24.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் 25.11.2024 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். இது 26.11.2024 அன்று புயலாக ( மிதமான வலுக்கொண்ட புயலாக) மாற்றமடையும்.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இது கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்வரும் 26.11.2024 க்கு பின்னரே கணிக்கலாம். தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி - கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் எதிர்வரும் 25ம் திகதி இரவு அல்லது 26ம் திகதி கிழக்கு கடற்பகுதி க்கு(அம்பாறைக்கு அண்மித்து) பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 24.11.2024 முதல் தீவிரமடையும். குறிப்பாக எதிர்வரும் 25.11.2024 முதல் 28.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரையான 48 மணி நேரத்தில் 350 மி.மீ. இனை விட உயர்வான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

25.11.2024 முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். 26,27 மற்றும் 28ம் திகதிகளில் காற்றின் வேகம் கடற்பகுதிகளில் 70 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரை வீசக் கூடும். உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேற் குறிப்பிட்ட கடற் பகுதிகளில் பல நாட் கலங்களில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரை திரும்புவது அவசியம்.

பொதுவாக சாதாரண சந்தர்ப்பங்களில் அதிக கனமழை கிடைத்தாலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் புயல் போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும் கன மழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில்;

1. கரையோரப் பகுதிகளில் புயல் காற்று காரணமாக உயர்வான அலைகளின் விளைவால் நிலப்பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும்.
2. புயலின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நிலப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீர் வடிந்து கடலை சென்றடையாது.
3. வேகமான காற்றோடு கூடிய மழை என்பதனால் மழையின் பாதிப்பு உயர்வாக இருக்கும்.
4. நிலம் ஏலவே நிரம்பியுள்ளமையால் மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு 10. மி.மீ. உம் நிலத்தின் மேலேயே தேங்கி நிற்கும்.
மேற் குறிப்பிட்ட காரணிகள் காரணமாக எதிர்வு கூறப்பட்டுள்ள புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே.....

இந்த புயல் தொடர்பான முன்னறிவிப்பினை சாதரணமாக கருத வேண்டாம்.

இந்த நிமிடம் வரை சகல மாதிரிகளும்(கிட்டத்தட்ட 19 மாதிரிகள்) இந்த புயல் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழை வீழ்ச்சியையும், வேகமான காற்றையும், அதீத கடற் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றே வெளிப்படுத்துகின்றன.

ஆகவே ஒரு புயலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். ஒரு அனர்த்தத்துக்காக எம்மை தயார்ப்படுத்தி அந்த அனர்த்தம் நிகழாது விட்டால், அதனால் எமக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் நாம் தயாராக இல்லாமல் அனர்த்தம் ஒன்று நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மோசமானதாக இருக்கும். ஆகவே எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம்.

வடக்கு ,கிழக்கு தென் மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல் அவசியம்.

எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக உயரம் கொண்ட கடலலைகள் காரணமாக கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உள்வருகை தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மற்றும் காலி மாவட்ட கரையோர மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

கனமழை காரணமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என்ற விடயத்தை அனைத்து மக்களுக்கும் அறிவித்தல் வேண்டும். குறிப்பாக 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக விழிப்போடு இருத்தல் அவசியம்.

மிக வேகமான காற்றினால் பாதிக்கக்கூடிய மரங்கள், கட்டிடங்கள் என்பன போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.

-நாகமுத்து பிரதீபராஜா-

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
22/11/2024

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

1. கோழி முட்டையின் மேல் அமர்ந்து அடைகாக்கும் முன் ! தேவையான முட்டைகளை இடுகிறது - திட்டமிடல் ( Good Planning )2. அடை காக்...
15/11/2024

1. கோழி முட்டையின் மேல் அமர்ந்து அடைகாக்கும் முன் ! தேவையான முட்டைகளை இடுகிறது - திட்டமிடல்
( Good Planning )

2. அடை காக்கும் போது, ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும் - ஒழுக்கம் ( Discipline )

3. சாப்பிடாமல் அதிக நேரம் அடை காக்க அமர்வதால் தன் உடல் எடையை இழக்கிறது! - தியாகம் மற்றும் சுய மறுப்பு ( Sacrifice and self denial )

4. அடுத்த கோழி இட்ட முட்டை என்றாலும் அடைகாக்கும்! - பாகுபாடற்ற மற்றும் தாராளமான மனம் ( Indiscriminate and Generous )

5. பொறுமையுடன் 21 நாட்கள் முட்டையின் மேல் அமர்ந்து அடை காக்கும்! சில முட்டைகள் குஞ்சு பொரிக்க வில்லை என்றாலும் மீண்டும் முட்டைகள் தொடர்ந்து இடும் - நம்பிக்கை மற்றும் தைரியம் ( Hope, faith and Sacrifice).

6. எந்த முட்டை குஞ்சு பொரிக்காதது என்று அந்த முட்டையை மட்டும் உருட்டி விட்டு விடும் - உணர்திறன் மற்றும் விவேகம் ( Sensitive & Discerning )

7. அழுகிய முட்டையை தவிர்த்து விட்டு சரியான முட்டை மேல் அக்கறை காட்டும். - புத்திசாலித்தனம், விழிப்புணர்வு மற்றும் யதார்த்தம்! ( wise, conscious and realistic )

8. யாரையும் அதன் குஞ்சுகளை தொட விடாது! - பாதுகாப்பான அன்பு ( Protective Love )

9. எப்பொழுதும் தன் குழந்தைகளை ஒன்றாக வைத்து இருக்கும் - அமைதி ஒற்றுமை ( Unity of Peace)

10. குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும் வரை குஞ்சுகளை விட்டு நகருவதில்லை - வழிகாட்டுதல் ( Mentoring )

உங்கள் கனவுகளை வாழ வையுங்கள், ஒரு நாள் அது நிறை வேறும், அது வளர்வதை பார்ப்பீர்கள்.

நன்றிகள் - Dr. Fami

படுதோல்வியை சந்தித்த முன்னாள் எம்.பிக்கள் !
15/11/2024

படுதோல்வியை சந்தித்த முன்னாள் எம்.பிக்கள் !

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்ட....

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
15/11/2024

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A...

அப்பாவை அதிகம்விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் - கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் …!உலகத்தில...
12/11/2024

அப்பாவை அதிகம்விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் - கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் …!

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள்தான் “தங்கமீன்”.🥰

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.😲

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.🙏 ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.👇🏼

முதலில் பெற்றெடுத்த #தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த #சகோதரி உருவிலான தாய் ,மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த #மகள் உருவிலான தாய்.👍

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள்தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ☹️
ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை காட்டிலும் அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

>> #நேர்மையானநண்பன்
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

>> #உலகைஅறிமுகம்செய்தவர்
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

>> #பாசம்மிக்கவர்
வீட்டில்சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

>> #காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

>> #நண்பன்
காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

>> #சூப்பர்ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

>> #எப்பொழுதும்மாறாதவர்கள்
மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

>> #உன்னதஉறவு
பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் “அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் “தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்...

“ எங்க அப்பா எனக்கு அப்படிதான் “…உங்க அப்பா உங்களுக்கு எப்படினு கமெண்ட்ல சொல்லுங்க .🥰

தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டைவெட்டி கறி சமைத்துவிட்டு, தன் மகளிடம்சொன்னார். “மகளே நம்முடன் சாப்பிடஎன் நண்பர்களையும் அண்டை...
08/11/2024

தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை
வெட்டி கறி சமைத்துவிட்டு, தன் மகளிடம்
சொன்னார்.

“மகளே நம்முடன் சாப்பிட
என் நண்பர்களையும் அண்டை
வீட்டாரையும் அழைக்கலாம். எல்லோரும்
சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகளும் சரியென்று தெருவுக்குவந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்துஎங்கள் வீட்டில் எரியும் தீயை அணைக்கஉதவுங்கள்” என்று.

ஒரு சில நிமிடங்களில் மக்கள் சிலர்
வெளியே ஓடி வந்தனர். மீதமுள்ளவர்கள்
கூக்குரலைக் கேட்காததுபோல் இருந்தனர்.

வந்தவர்களுக்கு நன்றியைக் கூறி, கறி
வீருந்து பரிமாறப்பட்டது. அனைவரும்
நன்றாக சாப்பிட்டனர்.

அவர்கள் சென்ற
பிறகு தன் மகளை பார்த்து கேட்டார்.
"வந்தவர்களை எனக்கு தெரியாது.
இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை.
என்னுடைய நண்பர்கள், உறவினர்கள்
எங்கே?" என்
எங்கே?” என்றார். மகள் சொன்னாள்.

“தங்கள் வீடுகளில் இருந்து வெளியே
வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக
நினைத்த தீயை அணைப்பதற்கே அன்றி
வீருந்து உண்ண அல்ல. இவர்களே
நம்முடைய தாராள மனப்பான்மைக்கும்
விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்."

நீங்கள் வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள்
என்று தெரிந்தும் உங்களுக்கு
உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி
அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு
கொள்ள எப்படி தகுதியானவர்களாக
இருக்க முடியும்?"

பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே உண்மையான உறவுகள்........

திருமணம் முடிந்த கடந்த 30 வருடத்தில் இந்த தம்பதிக்கு 16 குழந்தைகள்.. முதல் பையனுக்கு 29 வயதாம்..நம் வீட்டு குழந்தைகள் ஒர...
08/11/2024

திருமணம் முடிந்த கடந்த 30 வருடத்தில் இந்த தம்பதிக்கு 16 குழந்தைகள்.. முதல் பையனுக்கு 29 வயதாம்..நம் வீட்டு குழந்தைகள் ஒரு ரீமோட்டுக்கு அடித்து கொள்கிறது. குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்பது இவர்கிட்டதான் கத்துக்கணும் போல..16 செல்வங்களும் பெற்று பெரும் வாழ்வு வாழ வேண்டும் என்பது இதுதானோ..😊

தாய் மற்றும் சகோதரிக்கு இளைஞன் செய்த கொடூர செயல்
05/11/2024

தாய் மற்றும் சகோதரிக்கு இளைஞன் செய்த கொடூர செயல்

மொனராகல, வெல்லவாய பிரதேசத்தில் மகன் தனது தாயின் கையின் மூன்று விரல்களை மன்னா கத்தியால் வெட்டி எடுத்த சம்பவம் ஒ...

இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் 🙏
04/11/2024

இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் 🙏

Address

Jaffna
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna trekker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share