24/08/2025
உலகில் நன்கு அறியப்பட்ட உயர்ந்த படித்த அரச தலைவர் ஒருவர் அரசியல் பழிவாங்கல் மூலம் கைது..அவர் ஓரு royalist, கண்டி சிங்கள உயர் வம்சம் வழியில் வந்த ஓரு Demo.அரசியல் வாதி..மொத்த சிங்கள மக்களுக்கும் மகா நாயக்கர் களுக்கும் இது ஓரு கௌரவ பிரச்சினை.. மோசமான அரசியல் பழி வாங்கல் இது தொடரும்.. நாட்டை மீட்கவே ஆணை வழங்கிய மக்களே கவலையடைந்து உள்ளார்கள்.. ரணில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி, மற்றும் பிரதமர். 2020 களில் விழுந்த நாடு. படு குழியில் இருந்த நாட்டை மீண்டெழும் நாட்டை இலங்கை மக்கள் விரும்பும் ஓரு உன்னத தலைவரை கைது செய்து மீண்டும்.படுகுழிக்குள் தள்ளி விட்டார்கள் இந்த JVP அரசு..IMF மூலம் பேசி நாட்டை நம்பிக்கை ஊட்டி மீட்டவர் ரணில். இனி IMF கூட இலங்கையக்கு உதவி செய்ய யோசிப்பார்கள்.. இவங்கள திருத்த முடியாது என்று..JVP நாட்டை அரகல மூலம் பின்னணி வகுத்து கைப்பற்றிய போது.. பலர் கூறியது,அரசியல் பழிவாங்கல் கள் இலங்கைக்கு புதிதல்ல..போலி இடது சாரிகள் சாயம் வெளுக்கும் என்று.. இன்று அதுவும் ஓரு Utuber சொல்லி ஓரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்ய படும் கேவலம் இலங்கை அரசியல் தான், நீதி துறை க்கே சவால்?..
குப்பை அரசியல் வாதிகளால் உலகில் மீண்டு வரும் நாடு நற்பெயரை இழக்க போகிறது......
ஓரு சாதாரண அழைப்பிதழ் உள்ள வெளிநாடு பயண விடயத்தில் இலங்கை யின் ஆக சிறந்த ஜனாதிபதி ஒருவர் கைது செயாபட்டுள்ளமை இலங்கைக்கு நல்லதல்ல.. அதுவும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் தடவை CID போன்ற ஓரு சாதாரண அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.. நாளை ஏதோ ஓரு காரணத்துக்காகக் அனுரவும் கைது செய்ய படுவார்.. இது மோசமான முன் உதாரணம்.. படுகொலை, அல்லது தேசவிரோதம், ஊழல் போன்ற குற்ற சாட்டுக்கள் இருந்தாலும் பரவாயில்லை.. ஓரு வெளிநாட்டு பயணம் தொடர்பில்.. கைது.. 🤔
ரணில் ஓரு சதி செய்து அரசியல் மூலம் ஜனாதிபதி ஆகியவர் இல்லை.. தனது 500 கோடி பெறுமதி யான வீட்டையே அரசுக்கு எழுதி கொடுத்த ஓரு mr. கிளீன் இலங்கையை மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில் நிலைப்படுத்தி மீண்டும் உயிர்ப்பிப்பதில் ரணில் விக்கிரமசிங்கே ஒரு தீர்க்கமான பங்கை வகித்துள்ளார்.
• 1993 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் படுகொலைக்குப் பிறகு, அவர் ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நாடு அராஜகத்திற்குள் செல்வதைத் தடுத்தார்.
• 2000 ஆம் ஆண்டு, நாடு அதன் முதல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, அவர் வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுத்தார்.
• 2022 ஆம் ஆண்டு, நமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில், அவர் தலைமை தாங்கி இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தார்.
அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட பயணமாக லண்டனுக்கு சென்றமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது இது சிலமணி நேரத்திற்கு ஊடகங்களுக்கு அவ்வளவு தான்.
அரசியல் அமைப்பின் 35 ஆவது சரத்தின் படி முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் செய்த எந்த ஒரு செயலுக்காகவும் அவரை நீதிமன்றில் நிறுத்த முடியாது. 19 ஆம் திருத்த சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் சார்ந்த விடயத்தில் மட்டும் முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் நிறுத்த முடியும்.
சரி இப்போ எந்த சட்ட ஏற்பாட்டின் படி ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைக்க போகின்றீரகள் ???? சந்தர்ப்பம் இல்லை. ஆக மொத்தம் ரணில் விக்கிரமசிங்க இன்றும் சில மணி நேரத்தில் பிணையில் வீடு செல்வார்.
இந்தப் பின்னணியில், ஒரு யூடியூபர் கணித்தபடி அவர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் நமது நாட்டின் நிறுவனங்களையும் நமது எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பழிவாங்கும் மற்றும் அழிவுகரமான அரசியலின் தொந்தரவான போக்கை பிரதிபலிக்கின்றன.
மீண்டும் ஓரு ஆட்சி மாற்றம் நிகழ அரசே வழி வகுக்கிறது என்பதும் கவலையே..