eelathesakkural ஈழதேசக்குரல்

eelathesakkural ஈழதேசக்குரல் News Media

19/06/2023
19/06/2023

கடந்த 14-06-2023 அன்று மாங்குளம் பிரதேசத்தில் கிழவன்குளம் கிராமத்தில் நவரூபன் என்ற குடும்பஸ்த்தர் கிளிநொச்சி வனசீவ...

தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிட...
24/03/2023

தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம். Gajendrakumar Ponnambalam speech at UNHRC 23.03.2023
( பி. கு. Non self governing territory - இன்னமும் சுயஆட்சி பெறப்படாத நிலப்பகுதிகளாக இன்றைய நிலவரப்படி 17 பகுதிகளை ஐ.நா. அமைப்பு அடையாளப்படுத்தி பிரகடனம் செய்திருக்கிறது

Non-Self-Governing Territories Under Chapter XI of the Charter of the United Nations, the Non-Self-Governing Territories are defined as "territories whose people have not yet attained a full measure of self-government”. The General Assembly, by its resolution 66 (I) of 14 December 1946, noted a li...

24/03/2023

ஐநா மனித உரிமை பேரவையில் திரு.கஜேந்திரகுமார் MP 23/03/2023 ஆற்றிய உரை.
தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம்.
ஐநா மனித உரிமை பேரவையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று 23/03/2023 ஆற்றிய உரை.
ஆயுத மோதல் முடிவுற்று 13 ஆண்டுகளின் பின்னரும் தொடரும்
சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு !
ஐ.நா.மனித உரிமை பேரவையின் 52 ஆவது அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
கனம் அவைத்தலைவர் அவர்களே,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.
சிறிலங்காவின் நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது .
இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும், குறிப்பாக சிங்களவர்கள்/ பெளத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட, பெளத்த மத ஆலயங்கள் சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாயாறு, தையிட்டி , நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன, இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.
இவற்றுள் பெரும்பாலனவை சிறிலங்கா அரச ஆதரவோடு , தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது, உதாசீனப்படுத்தி, கட்டமைக்கப்பட்டுவரும் ஆலயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு - சில இடங்களில் . இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில் , தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு, சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். உண்மையில் இந்த தமிழர்களின் பாரம்பரிய - புராதன அடையாள நிலமானது, சிங்கள பெளத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது .
'மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்'' எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது - அந்தபகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது .
புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வெடுக்குநாறி மலையினை பெளத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன் , அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருட்திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.
கனம் அவைத்தலைவர் அவர்களே,
ஆயுத மோதல் முடிவிற்று 13 ஆணடுகள் கடந்த நிலையிலும் ,
நடைமுறையில் - தமிழர்கள் மீது, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட கலாசார இனவழிப்பும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஆகவே ,
- சிறிலங்காவிற்கு ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும்
- சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும்
- தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம்.
( பி. கு. Non self governing territory - இன்னமும் சுயஆட்சி பெறப்படாத நிலப்பகுதிகளாக இன்றைய நிலவரப்படி 17 பகுதிகளை ஐ.நா. அமைப்பு அடையாளப்படுத்தி பிரகடனம் செய்திருக்கிறது
https://www.un.org/dppa/decolonization/en/nsgt

08/03/2023

international donors should not support for racist agenda of the SriLankan Government aganist Tamils - Gajendrakumar PonnambalamMP
Parliament speech 08-03-2023

மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் ஆரம்பிக்கப்படுவதற்கு / முன்னெடுக்கப்படுவதற்கு ஒ...
05/03/2023

மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் ஆரம்பிக்கப்படுவதற்கு / முன்னெடுக்கப்படுவதற்கு ஒன்றரை வருடங்கள் முன்னதாக நூற்றாண்டுக்கு மேலாக மாடுவளர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிந்த தமிழ்ப் பண்ணையாளர்களை வன்முறையை பிரயோகித்து அகற்றினார்கள்.
அவ்வாறு நன்கு திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்ப் பண்ணையாளர்களை பெருமளவில் அப்புறப்படுத்திய நிலையில் தற்போது மாதுறு ஓயா வலதுகரை நீர்ப்பாசனத் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட

மேற்படி மேச்சல்தரை நிலங்களில் சிங்களவர்களை மட்டும் குடியேற்றுவதற்காகவே பண்ணையாளர்கள் மீது தொடர் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் தமிழ.....

23/02/2023
முன்னணிப் போராளி அண்ணன் சுகாஸிற்கு புத்தகவைநாள் வாழ்த்துக்கள். இதுநம்தேசம் அண்ணனை வாழ்த்துவதில் பேருவகை அடைகிறது.
23/02/2023

முன்னணிப் போராளி அண்ணன் சுகாஸிற்கு புத்தகவைநாள் வாழ்த்துக்கள்.
இதுநம்தேசம் அண்ணனை வாழ்த்துவதில் பேருவகை அடைகிறது.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.
15/12/2022

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.

08/12/2022

வெலிக்கடை சிறையில் த.நிமலனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார்.
கடந்த 2009 ஆண்டு கைதுசெய்யப்பட்டு 13 வருங்களாக சிறையில் வாடும் நிமலன் அவர்கள் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டனர்.

08/12/2022

“மண்டாஸ்” புயல் கனமழையை எதிா் கொள்ள தயாராக இருக்க வேண்டும்! யாழ். பல்கலைகழக சிரேஷ்ட விாிவுரையாளா் நா.பிரதீபராஜா.

08/12/2022

தமிழ்த் தேசத்தின் கடற்தொழில் திட்டமிட்டு அரசினால் அழிக்கப்படுகின்றது.
மயிலத்தமடுவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே கால்நடைவளர்ப்பாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
விவசாயத்துறையில் உள்ளீடுகளின் அதிக விலை காரணமாக வடக்கு கிழக்கு விவசாயம் முற்றாக பாதிப்பு.
சிறிய வெங்காயச் செய்கையாளர்கள் 70 வீதமானோர் தமது உற்பத்தியை கைவிட்டுள்ளார்கள்.

Address

Jaffna
JA40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when eelathesakkural ஈழதேசக்குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to eelathesakkural ஈழதேசக்குரல்:

Share