Life Giving Grace Tamil Fm Jaffna

Life Giving Grace Tamil Fm Jaffna THE LIFE - GIVING GOSPEL OF THE WORD OF GRACE . JAFFNA. SRILANKA👈
🙏ஜீவனை அளிக்கின்ற கிருபையுள்ள சத்தியம் மட்டும் பதிவிடப்படும்.

💖 யோவான் 14 : 1, 27💖 John 14 : 1 , 27🌹 [1] உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்தில...
21/08/2025

💖 யோவான் 14 : 1, 27
💖 John 14 : 1 , 27

🌹 [1] உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
Let not your heart be troubled: ye believe in God, believe also in me.

🌹 [27] சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.

Amen 🌹
21/08/2025

Amen 🌹

Book 8(2)கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு வேண்டியதெல்லாமே நிறைந்திருக்கின்றது. —————-///——-///———“புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய...
19/08/2025

Book 8(2)
கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு வேண்டியதெல்லாமே நிறைந்திருக்கின்றது.
—————-///——-///———

“புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.”
(கொலோசெயர் 1:27 )

கிறிஸ்தவத்தின் சாராம்சம் என்னவென்றால்; இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து செய்து முடித்த மகிமையும், களிப்பும் நிறைந்த நற்செய்தி என்னவென்றால்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாய் உங்களுக்குள் இருப்பதேயாகும்.

கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே எல்லாமாகவும், எல்லாவற்றிற்கும் பதிலாகவும் இருக்கின்றது.

கிறிஸ்து உங்களுக்குள் இருப்பது என்பது பரலோகமே உங்களுக்குள் இருக்கின்றது.
கிறிஸ்து உங்களுக்குள் இருப்பது என்பது தெய்வீகமே உங்களுக்குள் இருக்கின்றது.

இப்பொழுது கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதினால் எல்லாமே உங்களுக்குள் இருக்கின்றது. ஆகையினால்தான் பவுலடிகளார்
1 கொரிந்தியர் 3:21 இல் “இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே” அல்லேலூயா!

மேலும் ரோமர் 6:23 இல் “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் ”
இதுவே கிறிஸ்துவின் நற்செய்தியின் அடிப்படையும், அஸ்திவாரமாகும். ஆயினும் இந்த நற்செய்தியை மேலும் புரிந்துகொண்டு வளரும்பொழுது, இயேசு கிறிஸ்து உங்களுக்கு வெளியே நின்றுகொண்டு உங்களுக்கு நித்திய ஜீவனை வழங்கிக்கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணம் மாறி, அவர்தாமே உங்களது நித்திய ஜீவனாய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை தந்திருக்கிறார் என்பதன் அர்த்தம் அவர் தன்னைத்தானே உங்களுக்கு முழுமையாக தந்திருக்கிறார் என்பதாகும்.
அல்லேலூயா!

இந்த சத்தியத்தை, நிஜத்தை அறிந்து கொண்ட கணத்திலிருந்து உங்கள் எண்ணமும், பேச்சும், ஜெப வாழ்வும் முற்றுமுழுதாக மாற்றம் பெற்றிருக்கும்.
அத்தோடு தைரியமும் புத்துயிர்ச்சியும் பெற்றிருக்கும்.
நீங்கள் தேவனிடம் உங்கள் தேவைகளை குறித்து விண்ணப்பம் செய்யும் ஜெபங்கள் மறைந்துவிடும்.

கிறிஸ்துவையே உங்களுக்குள் நீங்கள் கொண்டிருக்கும்பொழுது வேறென்ன தேவைகளும், விண்ணப்பங்களும் உங்களுக்கு இருக்கமுடியும்?

கிறிஸ்துவே எல்லாமுமாக இருக்கிறார்.
எல்லாமுமே கிறிஸ்துவுக்குள் இருக்கிறது.

கிறிஸ்துவுக்குள் நீங்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதனை மீண்டும் தாரும் என்று விண்ணப்பித்து ஜெபிப்பது தவறானது. உதாரணமாக எனக்கு சுகத்தை தாரும் என்று ஜெபிக்க வேண்டாம். மாறாக கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே உங்களின் சுபாவமாக இருக்கிற தெய்வீக சுகத்தை சுதந்தரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்றிகரமான வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் உங்களுடைய நிஜமான சொத்தாக இருக்கின்றது. உங்களுக்கு தேவையான மகிமை நிறைந்த, அசாதாரண வாழ்க்கை மற்றும் நீதி எல்லாம் கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக இருக்கிறது.
(2 பேதுரு 1:3 )

இப்பொழுது லூக்கா 12:22 இல் இயேசு கிறிஸ்து சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.
“....இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். “

அவரே உங்கள் நிறைவாக இருக்கின்றார். கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு வேண்டியதெல்லாம் நிறைந்திருக்கிறது. அல்லேலூயா!

ஜெபம்
————-
ஆசீர்வதிக்கப்பட்ட தகப்பனே!
கிறிஸ்து இயேசுவுக்குள் என் வாழ்வுக்கு வேண்டிய எல்லாவற்றையும் எனக்கு தந்ததற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். கிறிஸ்துவே எனக்கு எல்லாமுமாய் இருக்கின்றர். கிறிஸ்துவுக்குள் எனது வாழ்வுக்கும், தேவபக்திக்கும் வேண்டியதெல்லாம் நிறைந்திருக்கின்றது. இந்த வாழ்வில் எப்பொழுதும் வெற்றி சிறந்து வாழ்வதற்கும், தேவனுக்கு பிரியமாக நடந்து கொள்வதற்கும் வேண்டியதெல்லாம் எனக்குள் நிறைந்திருக்கின்றது. அல்லேலூயா!
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமென்!

மேலதிக வாசிப்பு:
2 பேதுரு 1:3;
1 கொரிந்தியர் 3:21-22

Thanks 🙏
Ps. Mahen & Ps. John

Amen 🙏
19/08/2025

Amen 🙏

18/08/2025
கிறிஸ்தவனின் அனுதின விசுவாச அறிக்கை-8———————////————நான் ஒரு இராஜாவாக இருந்து பின் வரும் விசுவாச அறிக்கைகளை இயேசு கிறிஸ்...
16/08/2025

கிறிஸ்தவனின் அனுதின விசுவாச அறிக்கை-8
———————////————

நான் ஒரு இராஜாவாக இருந்து பின் வரும் விசுவாச அறிக்கைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டளை இடுகிறேன்.

தேவன் என்னை காண்பது போலவே நானும் என்னை காண்கிறேன்.

நான் தேவனாலே மிகவும் நேசிக்கப்பட்டவனாக இருக்கிறேன்.
நான் இப்பொழுதே மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டிருக்கிறேன்.

நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்.
எனது மீட்பராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவினாலே நான் ஒரு இராஜாவக இருந்து ஆளுகை செய்கிறேன்.

இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய விசுவாசத்தில் நடக்கின்றபொழுது தெய்வீக ஆசீர்வாதத்திற்குள் நான் நடைபோடுகிறேன்.

நான் விசேஷித்த கிருபை பெற்றவனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் வளர்ச்சி பெற்றவனுமாக இருக்கிறேன்.

நான் இழந்தைவைகளை மீளப்பெற்றுக்கொண்டுவிட்டேன்,
நான் முன்னுரிமை பெற்றவனாக இருக்கிறேன்.

என்னுடைய வேண்டுதல்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றாயிற்று. என்னை சுற்றிலுமிருக்கிற சட்ட திட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் எனக்கு சாதகமாக அமைத்துள்ளேன்.
ஏனென்றால் தேவனுடைய கிருபை என்மீது நிறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே.

உலகம் சொன்னபடி திறக்கப்படமுடியாத கதவுகள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு இப்பொழுதே திறக்கப்பட்டிருக்கிறது.
எந்த தடைகளும் என்னை தடுத்து நிறுத்த முடியாது.

எந்த இடையூறுகளும் என்னை தாமதப்படுத்தாது.
நான் என்னுடைய பரம பிதாவினால் கனப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.

நான் அவருடைய மெய்யான கிருபையை நேரடியாக அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
நான் அவருக்கு மிகவும் விஷேசித்தவனாக இருக்கிறேன்.

நான் அவருடைய விருப்பத்திற்கும், அனாதி அன்பிற்கும் பாத்திரவானாக இருக்கிறேன்.

நான் அவருடைய கண்மணியாக இருக்கிறேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனும், அவருடைய மகிமை பொருந்திய கிருபையை பெற்றவனுமாக இருக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன். நன்றி தேவனே.

Amen 🙏
Ps. Mahen
LGGIM-UK
00 44 7958 32 66 27

🌷மத்தேயு 10 : 1, 8🌷Matthew 10 : 1, 8💫[1] அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த...
16/08/2025

🌷மத்தேயு 10 : 1, 8
🌷Matthew 10 : 1, 8

💫[1] அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
And when he had called unto him his twelve disciples, he gave them power against unclean spirits, to cast them out, and to heal all manner of sickness and all manner of disease.

💫[8] வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
Heal the sick, cleanse the lepers, raise the dead, cast out devils: freely ye have received, freely give.

🌷மத்தேயு 28 : 18 - 20
🌷Matthew 28 : 18 - 20

💫[18] அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
And Jesus came and spake unto them, saying, All power is given unto me in heaven and in earth.

💫[19] ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:

💫[20] நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
ஆமென்.
Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you alway, even unto the end of the world. Amen.

🌷மாற்கு 16 : 17 - 18
🌷Mark 16 : 17 - 18

💫[17] விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues;

💫[18] சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.

🌷லூக்கா 9 : 1 - 2
🌷Luke 9 : 1 - 2

💫[1] அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
Then he called his twelve disciples together, and gave them power and authority over all devils, and to cure diseases.

💫[2] தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
And he sent them to preach the kingdom of God, and to heal the sick.

🌷லூக்கா 10 : 17, 19
🌷Luke 10 :ஸ17,19

💫[17] பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
And the seventy returned again with joy, saying, Lord, even the devils are subject unto us through thy name.

🌷[19] இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you.

🌷யோவான் 1 : 12
🌷John 1 : 12

💫[12] அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:

🌷யோவான் 14 : 12 - 14
🌷John 14 : 12 - 14

💫[12] மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
Verily, verily, I say unto you, He that believeth on me, the works that I do shall he do also; and greater works than these shall he do; because I go unto my Father.

💫[13] நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
And whatsoever ye shall ask in my name, that will I do, that the Father may be glorified in the Son.

💫[14] என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
If ye shall ask any thing in my name, I will do it.

🌷அப்போஸ்தலர் 3 6 - 7
🌷Acts 3 : 6 - 7

💫[6] அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
Then Peter said, Silver and gold have I none; but such as I have give I thee: In the name of Jesus Christ of Nazareth rise up and walk.

💫[7] வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
And he took him by the right hand, and lifted him up: and immediately his feet and ankle bones received strength.

🌷ரோமர் 8 : 2, 6, 10 - 13
🌷Romans 8 : 2, 6, 10 - 13

💫[2] கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death.

💫[6] மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
For to be carnally minded is death; but to be spiritually minded is life and peace.

💫[10] மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness.

💫[11] அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you.

💫[12] ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.

💫[13] மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live.

🌷1 யோவான் 5 : 14 - 15
🌷1 John 5 : 14 - 15

💫[14] நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us:

💫[15 ]நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
And if we know that he hear us, whatsoever we ask, we know that we have the petitions that we desired of him.

🌷வெளிப்படுத்தல் 1 : 18
🌷Revelation 1 : 18

💫[18] மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
I am he that liveth, and was dead; and, behold, I am alive for evermore, Amen; and have the keys of hell and of death.

🌹யோவான் 14 : 12🌹John 14 : 12💫[12] மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற...
14/08/2025

🌹யோவான் 14 : 12
🌹John 14 : 12

💫[12] மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். ஆமேன்🙏
Verily, verily, I say unto you, He that believeth on me, the works that I do shall he do also; and greater works than these shall he do; because I go unto my Father.
Amen 🙏

🌹யோவான் 16 : 23
🌹John 16 : 23

💫[23] அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். ஆமென்🙏
And in that day ye shall ask me nothing. Verily, verily, I say unto you, Whatsoever ye shall ask the Father in my name, he will give it you.
Amen 🙏

14/08/2025
🌹யோவான் 14 : 1, 27🌹John 14 : 1 , 27💫[1] உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்...
14/08/2025

🌹யோவான் 14 : 1, 27
🌹John 14 : 1 , 27

💫[1] உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
Let not your heart be troubled: ye believe in God, believe also in me.

💫[27] சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.

🌹2கொரிந்தியர் 4 : 17
🌹2 Corinthians 4 : 17

💫[17] மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
For our light affliction, which is but for a moment, worketh for us a far more exceeding and eternal weight of glory;

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Life Giving Grace Tamil Fm Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Giving Grace Tamil Fm Jaffna:

Share