தமிழ் மக்களின் செய்திகள் - இலங்கை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • தமிழ் மக்களின் செய்திகள் - இலங்கை

தமிழ் மக்களின் செய்திகள் - இலங்கை Tamil People News - Srilanka

தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - JUNE 22
22/06/2025

தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - JUNE 22

22/06/2025

பிரான்ஸில் இருந்து இலங்கை கொள்வனவு செய்த எயார்பஸ் விமானத்தின் முதல் விமான பயணம்

22/06/2025

ஈரானில் உள்ள புஷேர் அணு உலை மீது குண்டு வீசப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது என்றும்புகுஷிமா அளவிலான விபத்தினை ....

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியுடன் சர்ச்சையில் சிக்கிய பிள்ளையானின் சகா!மட்டக்களப்பு மாவட்ட ஒரு சில மக்கள் இண...
03/08/2024

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியுடன் சர்ச்சையில் சிக்கிய பிள்ளையானின் சகா!

மட்டக்களப்பு மாவட்ட ஒரு சில மக்கள் இணைந்து அமைச்சர்கள், அமைச்சுப்பதவிகள் வேண்டும் என்று சொல்லி உருவாக்கி விட்டார்கள் ஆனால் அதுவே இன்று எமது மாவட்டத்திற்கான சாபக்கேடாக மாறிவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனருத்தாணம் செய்யப்படும் கிரான் ஆதி வைரவர் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு நேற்று (2) மாலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் ஆலய வெளி முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் திட்டத்தை நான் கொண்டு வந்தபோது அதை அம்பாறை மாவட்டத்திற்கு மாற்றி விட்டார்கள்.இவ்வாறு பல விடயங்களை அவர்கள் தடுக்கிறார்கள்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாதவனை பிரச்சினைக்கு கூட இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலே சரியான ஒருவரை தேர்ந்து வாக்களித்து எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகளை பெற முயற்சிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைதுகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ச...
31/07/2024

தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண் - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சியாகம பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பேருந்து மோதியதில், அதில் பயணித்த கணவன் மனைவியே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும், விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும், பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதி நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய மின்சார இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்புதிதாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, ...
13/02/2024

புதிய மின்சார இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்

புதிதாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு நிதியின் 2023 ஆம் ஆண்டுக்கான வட்டியை செலுத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றிற்கு அறியப்படுத்தியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, இலங்கை மின்சார சபை சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் நிர்மலன் விக்னேஸ்வரன், புதிய மின்சார இணைப்புக்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு கட்டணத்தின் 2023ஆம் ஆண்டுக்கான 11.67 சதவீத வருடாந்த வட்டியை செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வர...
15/12/2023

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது.அதனை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,''நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்கு கிடைக்க இருக்கிறது.

வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்ய தவறியதாலே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்."என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பச்சைக்கொடி: இரண்டாம் கட்ட கொடுப்பனவை வழங்க IMF அனுமதிஇலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மி...
12/12/2023

இலங்கைக்கு பச்சைக்கொடி: இரண்டாம் கட்ட கொடுப்பனவை வழங்க IMF அனுமதி

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி SDR 508 மில்லியன்களாகும்.

இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.

நிர்வாக சபையின் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் EFF-ஆதரவு (EFF - விரிவாக்கப்பட்ட நிதி வசதி) திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.

மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஜூன் இறுதிக்கான அனைத்து அளவு செயல்திறன் அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. செலவு மிகுதி மற்றும், வரி வருவாயைத் தவிர அனைத்து குறிகாட்டி இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை மூழ்கியது.

எனினும் மார்ச் 2023 இல் IMF பிணை எடுப்பு 2.9 பில்லியன் டொலர்களை முடக்கியதில் இருந்து, நாடு அதன் பொருளாதாரத்தை ஓரளவு உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் நாணய இருப்புக்களை மீண்டும் உருவாக்கவும் முடிந்தது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு EFF திட்டம் ஆதரவளிக்கிறது.

இதற்கிடையில், இலங்கை அதன் கடன்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி (எக்சிம்) வங்கி, அதன் மிகப்பெரிய இருதரப்பு கடனாளர் மற்றும் உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) ஆகியவற்றுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.

நவம்பர் 29 அன்று, இலங்கை அரசாங்கமும் OCC யும் கடன் முறைமைக்கான நிதி விதிமுறைகள் குறித்து கொள்கையளவில் ஒரு உடன்பாட்டை எட்டியதாக வெளிப்படுத்தியது.

கொள்கை ரீதியான ஒப்பந்தமானது சுமார் 5.9 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ள பொதுக் கடனை உள்ளடக்கியது. மேலும், நீண்ட கால முதிர்வு நீட்டிப்பு, வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் உள்ள கடனை உள்ளடக்கிய சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நாடு ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு OCC மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் கடன் முறைமைகள் தொடர்பான இலங்கையின் கொள்கை ரீதியான ஒப்பந்தங்கள் EFF இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.

உத்தியோகபூர்வ கடனளிப்பவர்களுடனான ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதும் கையொப்பமிடுவதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், சீர்திருத்த வேகத்தையும், சீர்திருத்தங்களின் வலுவான உரிமையையும் நிலைநிறுத்துவது ஒரு முழுமையான மற்றும் விரைவான மீட்சியை உறுதி செய்வதற்கு இன்றியமையாதது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் முறைஇலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அட...
11/12/2023

இலங்கையில் விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் முறை

இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் ஆகியவை தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இந்த சட்டங்கள் தற்போது விவாகரத்து பெறுவதற்கான காரணங்களை கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது, விவாகரத்து கோருபவர்கள் நீதிமன்றத்தில் மூன்று காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும், மூன்றாம் தரப்பினருடன் மனைவியால் தகாத முறையில் ஈடுபடுதல், தீங்கிழைக்கும் துறவு அல்லது ஆண்மையின்மை போன்ற விடயங்களே அவையாகும்.

எனினும் இந்த காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதால் விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் வரை விசாரணை செய்யப்படுவதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் புதிய சட்டம், கணவன் மனைவி காணாமல் போனவர்களுக்கு விவாகரத்து விடயங்களை எளிதாக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விடயத்தில் விவாகரத்து கோரும் ஒருவர், குறிப்பிட்ட திகதியில், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் அல்லது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம்.

அவர்கள் தங்களைத் தாங்களே முன்வைக்கத் தவறினால், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றால், விவாகரத்து வழங்கப்படும் வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் விவாகரத்துகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அவசர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகள் எனபவற்றை, தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் உட்பட பல்வேறு வழிகளில் வழங்கப்படக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருளில் மூழ்கிய இலங்கை! நாடு முழுவதும் திடீர் மின்சார தடைதேசிய மின் கட்டமைப்பின் பிரதான மின் வழங்கல் பாதையில் ஏற்பட்ட பழ...
09/12/2023

இருளில் மூழ்கிய இலங்கை! நாடு முழுவதும் திடீர் மின்சார தடை

தேசிய மின் கட்டமைப்பின் பிரதான மின் வழங்கல் பாதையில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்து மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

குறைந்த செலவில் அபுதாபி - கட்டுநாயக்க விமான சேவைஅபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம...
09/12/2023

குறைந்த செலவில் அபுதாபி - கட்டுநாயக்க விமான சேவை

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆரம்ப விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 08.00 மணிக்கு இலங்கை வந்தடையும்.

அதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டதுஇலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் ச...
05/12/2023

இலங்கையின் முதல் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

இது முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மக்களின் செய்திகள் - இலங்கை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share