Success Tamil News

Success Tamil News Success Tamil News

ஒரு நாள் பயிற்சி வகுப்பு  ஆகஸ்ட் 25து யாழ்ப்பாணத்தில்For registration 0718110811Message Paramporul Foundation -Sri lanka...
03/06/2024

ஒரு நாள் பயிற்சி வகுப்பு
ஆகஸ்ட் 25து யாழ்ப்பாணத்தில்
For registration 0718110811

Message Paramporul Foundation -Sri lanka on WhatsApp. https://wa.me/94718110811

20/03/2024

உங்க துணை சண்டைக்கோழி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா? இத பண்ணுங்க - News

Success Tamil provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. உடனுக்குடன் ப...

04/03/2024

இத்தாலியில் மர்மமான சபிக்கப்பட்ட தீவு! இப்படி ஒரு இருண்ட பின்னணியா?

Success Tamil provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. உடனுக்குடன் ப...

Happy Diwali
11/11/2023

Happy Diwali

மாணவி துஸ்பிரயோகம் ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் கைதுகாலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர்  பாடசாலை மாண...
17/10/2023

மாணவி துஸ்பிரயோகம்
ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் கைது

காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி, பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.

யாழில் மனைவியுடன் தம்பி உறவு, அடித்து கொலை செய்ய  காரணம் இதுவே.....!தனது சகோதரருடன் மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் ...
17/10/2023

யாழில் மனைவியுடன் தம்பி உறவு, அடித்து கொலை செய்ய காரணம் இதுவே.....!

தனது சகோதரருடன் மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் அதனை அறிந்து
ஆத்திரமடைந்து இருவரையும் தாக்கியாதாக கைதான கணவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம், சண்டையாக மாறியது.

பனம்மட்டையால் கணவன் அடித்ததில் மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த தன் மனைவியை கணவன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதித்துள்ளார். குறித்த பெண் இன்று காலையிலேயே வைத்தியசாலையில் உயரிழந்துள்ளார். இது தான் நடந்த உண்மைச் சம்பவம்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை இன்று காலையில் பார்க்கச் சென்ற கணவர், சின்னக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சைபெறுபேறுகள் எப்போது வெளியாகும் ?கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெற...
17/10/2023

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை
பெறுபேறுகள் எப்போது வெளியாகும் ?

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை, பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கே சென்றது மனிதநேயம்...?சிலரின் குரோத எண்ணங்களுக்கு அப்பாவி மக்களின் உயிர்தான் பழியாகின்றது....💔
16/10/2023

எங்கே சென்றது மனிதநேயம்...?
சிலரின் குரோத எண்ணங்களுக்கு அப்பாவி மக்களின் உயிர்தான் பழியாகின்றது....💔

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானித்தான் அணி 69  ஓட்டங்களால் வெற்றி.உலகக் கிண்ண கிரிக்...
16/10/2023

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானித்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றி.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (15) இடம்பெற்றது.

அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ரஹமனுல்லா அதிகபட்சமாக 80 ஓட்டங்களை பெற்றதுடன் இக்ரம் அகிலி 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ரசிக் 3 விக்கெட்டுக்களையும் மார்க் வூட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி இங்கிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹாரி புரூக் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜுபர் ரகுமான் மற்றும் ரஷீத் கான் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் நபி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நானுஓயாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு.....நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் ...
16/10/2023

நானுஓயாவில் மண்சரிவு
போக்குவரத்து பாதிப்பு.....

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது . இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Address

55 Sivan Pannai Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Success Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share