News Jaffna

News Jaffna World wide Quick News in Tamil & English

இலங்கைக்கு வருகை வந்த பிரபல இந்தியத் திரைப்படப் பாடகர்! பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் (Hariharan) ச...
19/08/2023

இலங்கைக்கு வருகை வந்த பிரபல இந்தியத் திரைப்படப் பாடகர்!

பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் (Hariharan) சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாயுள்ளது.

தமிழ் சினிமாக்கள் மட்டுமன்றி பிற மொழி பாடகராகவும் பாடகர் ஹரிஹரன் உள்ளார். இவரது பாடல்கள் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டவை. தமிழ் சினிமாவில் 90களில் வந்த எத்தனையோ பாடல்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்நிலையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் ஹரிஹரன், மற்றும் விஜய் டிவி பிரபலங்களான மா . கா. ப ஆன்ந்த் , சிவாங்கி ஆகியோரும் எடுத்துகொண்ட புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதேவேளை அண்மை காலங்களில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

19/08/2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!


2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Address

Kokuvil
Jaffna
4000”

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Jaffna:

Share