Tamil4 News

Tamil4 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil4 News, Jaffna.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்... சபா குகதாஸ் தெரிவிப...
22/05/2025

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்... சபா குகதாஸ் தெரிவிப்பு.

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூற வருவது ஆச்சரியம் அளிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் யார் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது

நாளைய தினம் வெள்ளிக்கிழமை சீன நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வறுமை ஒழிப்பு பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை வழங்குவதற்காக யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

கொவிட் 19க்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுக்கு பின்னர் ஐந்து வருடங்கள் கடந்தும் இலங்கையின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

கொவிட் 19 நோய் இலங்கையை மட்டுமல்ல உலகில் பல நாடுகளை தாக்கிய போதும் அந்த நாட்டின் பொருளாதாரங்கள் திடீரென சரிவுகளை கண்டிருந்தாலும் அதை வேகத்தில் மீண்டெழுந்தது.

குறிப்பாக சுமார் 120 கோடி சனத்தொகையை கொண்ட இந்தியா கொவிட் 19 நோய் தாக்கம் ஏற்பட்ட போதும் பொருளாதார ரீதியாக சரிவுநிலைக்கு செல்லாத நிலையில் இன்று விவசாயத் தறையில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக திகழ்கிறது.

அதேபோன்று பங்களாதேஷ் கொவிட் தாக்கத்துக்கு அகப்பட்ட நாடாக இருந்தும் பொருளாதார சரிவுக்கு எட்டாது இலங்கைக்கு கடன் வழங்கிய பட்டியலில் பங்களாதேஷசும் உள்ளது.

இலங்கை பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடனில் சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன் 46 வீதமாக காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்து இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கி உள்ளது.

ஒரு நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும் என்றால் அந்த நாட்டுக்கு கடன் மேல் கடனை ஆள்ளி வழங்குவதை விட பொருளாதார ரீதியான தூரநோக்கு திட்டங்களை வளர்க்க வேண்டும்.

ஆனால் சீனா இலங்கையில் பொருளாதார ரீதியான திட்டங்களை வளர்க்காமல் தன்னை தங்கி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி வருகிறது.

இவ்வாறு கடன் மேல் கடனை அள்ளி வழங்கும் சீனா இலங்கையின் வறுமை நிலைக்கு பிரதான காரணமாக அமைவதோடு தொடர்ந்து இலங்கையை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கு அயல் நாடான இந்தியாவை குறி வைத்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு திட்டங்களை சீனா மறைமுகமாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் கருத்தரங்கு என்ற போர்வையில் உள்நுழைய ஆரம்பித்துள்ளது.

உண்மையில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் அதனை மத்திய அரசாங்கத்துடன் கருத்தரங்குகளை மேற்கொண்டு திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வறுமையை ஒழிப்பதற்காக சீனா முயல்வது இந்தியாவை சீண்டுவதாகவே பார்க்க முடியும்.

இறுதி யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் மக்களை அழித்ததில் சீனாவுக்கும் பங்குள்ளது.

யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடக்கின்ற நிலையில் சீனா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்கள் கரிசனை அற்ற நாடாகவே பார்க்கப்ப்டுகிறது

ஆகவே சீனா இலங்கையின் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் புதிய கடன்களை வழங்குவதை நிறுத்துங்கள் இலங்கை மறுமையில் இருந்து மீண்டு அபிவிருத்தியின் பாதையில் பயணிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்

மியன்மார் ரோஹிந்திய முஸ்லிம் விவகாரம் வடக்கு கிழக்கு இணைப்பாளரை விசாரணைக்கு அழைப்பு.வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு ...
13/01/2025

மியன்மார் ரோஹிந்திய முஸ்லிம் விவகாரம்
வடக்கு கிழக்கு இணைப்பாளரை விசாரணைக்கு அழைப்பு.

வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ வை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக் கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது அண்மையில் இலங்கை முல்லைத்தீவு கடலில் ரோஹிந்திய முஸ்லிம்களை ஏற்றிய படகு தமக்கு அடைக்கலம் தருமாறு வருகை தந்தது.

குறித்த படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகளிடம் பெற்றது.

இன் நிலையில் அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

குறித்த போராட்டத்தில் பங்கு பற்றிய வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ மியான்மாரில் பாதுகாப்பு இல்லை தமக்குக்கு பாதுகாப்பு தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியான்மாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி இருந்தார்.

அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டிடம் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் அவர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

சிறப்பாக இடம்பெற்ற இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய  கலை விழா.இணுவில் பொது நூலகத்தின்  சிறுவர் திறன்விருத்தி ...
12/01/2025

சிறப்பாக இடம்பெற்ற இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய கலை விழா.

இணுவில் பொது நூலகத்தின் சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் த.முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக டிப்ளோமா கற்கைநெறிகள் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனனும், மென் பொறியாளர் இராகவனும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றருடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம்  மற்றும் கற்களை பிணைமுறியில்  விடுவித்த நீதிமன்றம்.சாவக்கச்சேரியில் ப...
07/01/2025

வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணை முயற்சியில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவ கச்சேரி பகுதியில் இரவு வேலை கனகர வாகனத்தில் சுன்னக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.

அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த் தர்க்கம் மேற்பட்ட நிலையில் பொலிசாரின் தலையீடு காரணமாக குறித்த வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

குறித்தபடி அந்த தொடர்பில் அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை தான் மறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இன் நிலையில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சகல அனுமதிக்காலம் புறப்பட்டு தாழ்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

என் நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாதகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்த செல்வதற்கு மன்று அனுமதி வழங்கி இருந்தது.

இன் நிலையில் நகத்தல் பத்திரம் மூலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாதகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமார வடிவேல் குருபரன் ஆஜராகி இருந்தார்.

சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றுக்கு பின்வரும் விடையங்களை சுட்டிக்காட்டினார்.

குறித்த வழக்கில் எனது கட்சிக்காரர் கல் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி போக்குவரத்து செய்கிறார்.

2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது.

அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடையங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம்.

அதனை விடுத்து இலங்கை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகங்களுக்கு தெரிவித்த பகுதியில் எனது கட்சிக்காரர் கற்களைப் பெறவில்லை பலாலி பகுதியில் உரிய அனுமதி பெற்றவரிடம் கற்களை கொள்வனவு செய்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம்.

பொலிசார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை மன்றிக்கு சுட்டிக்காட்டப்பட்டது..

சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான பிணை முயற்சியில் வாகனத்தையும் கல்லையும் விடுவித்ததுடன் வாகனம் உரிய பரிசோதனை அறிக்கை பெறுமாறும் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டது .

இளங்குமரன் எம்பி சிறுபிள்ளைத் தனமாக செயற்படுகிறார். சட்டத்தை கையில் எடுக்க முடியாது.. சட்டநீதியாகவே வியாபாரத்தில் ஈடுபடு...
04/01/2025

இளங்குமரன் எம்பி சிறுபிள்ளைத் தனமாக செயற்படுகிறார். சட்டத்தை கையில் எடுக்க முடியாது.. சட்டநீதியாகவே வியாபாரத்தில் ஈடுபடுகிறோம்.

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுன்னக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் ஒன்றை முறைப்பாடு பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகன ம் சுன்னக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரி போட சந்தேகத்துக்கு அருகாமையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்பி வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால் பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.

1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுன்னக் கற்களை எடுத்துச் சென்றது.

முதலாவது பிரிவு கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி
எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள், மத்திய சுற்றடல் அதிகார சபையின் அனுமதிபெற்றுள்ளார்கள் அதுமட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம் நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்ல.

முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை வாங்கி திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம் அதில் நாமும் சிறிய இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்து வருகிறோம்.

இலங்கைச் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் அன்றிலிருந்து இன்று வரை இடம்பெற்று வரும் நிலையில் இதை அறியாத சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அவகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்பி செயல்பட்டிருக்கிறார்.

பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை இதை அறியாத இளங்குமரன் எம்பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்ததன் மூலம் சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே வவுனியா பொலிசார் எமது வாகனத்தை மறித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கை இடம் பெறுவதாக எமது வாகனத்தை விடுவித்தது.

அது மட்டுமல்லாது கெப்பெற்றிக்கொல்லாவை நீதிமன்றமும் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தீர்ப்பு வழங்கியது .

வவுனியா நீதிமன்றம் மற்றும் கெப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு சுன்னக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக கௌரவ நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு கருங்கல்லு சல்லி மற்றும் தூள் எடுத்து வரப்படுகிறதோ அதே நடைமுறை சுன்னக் கல்லுக்கு இருக்கிறது.

தேசிய சதுரங்கப் போட்டியில் 200 ஆண்கள் மத்தியில் தனித்து சாதித்த 7 வயது யாழ் சிறுமி.கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங...
29/11/2024

தேசிய சதுரங்கப் போட்டியில் 200 ஆண்கள் மத்தியில் தனித்து சாதித்த 7 வயது யாழ் சிறுமி.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற ஏழு வயது சிறுமி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் 200 மாணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 7 வயது சிறுமியான கஜீனா தங்கப் பதக்கத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்றுள்ளார்.

அமைச்சின் செயலாளருக்கு திடீர் இடமாற்றம் ஜேவிபியின் முதல் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்தார் வடக்கு ஆளுநர் வேதநாயகன் தனது அர...
23/11/2024

அமைச்சின் செயலாளருக்கு திடீர் இடமாற்றம் ஜேவிபியின் முதல் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்தார் வடக்கு ஆளுநர் வேதநாயகன்

தனது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அடிபணியாத வடக்கு மாகாண அமைச்சு ஒன்றின் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநரால் பணியிடமாற்றம் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு ஆளுநர் கோரியிருந்த நிலையில் அதற்கு குறித்த அமைச்சின் செயலாளர் உடன்பட மறுத்ததன் காரணமாகவே அவரைப் பழிவாங்கும் நோக்கில் குறித்த செயலாளருக்கு அமைச்சிலிருந்து பிரதம செயலாளர் செயலக்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டு அவரை பணிகள் இன்றி இருத்திவைக்க ஆளுநரால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பழிவாங்கல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மன்னார் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றிவந்த தொழிலாளி ஒருவருக்கும் பொறியியலாளருக்குமிடையில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்திருந்த முரண்பதடு கைகலப்பில் முடிவடைந்து இருவரும் காயங்களுக்கு உள்ளாகியதாகக் குறப்படுகின்றது. இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குறித்த தொழிலாளி மற்றும் பொறியியலாளருக்கு திணைக்களமட்ட விசாரணை முடியும்வரை அமைச்சின் செயலாளரினால் தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த தொழிலாளி மன்னார் நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ததோடு வடக்கு மாகாண ஆளுநரிடத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தெழிலாளி வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏற்கனவே நெருக்கமானவராக அறியப்பட்டிருந்த நிலையில் குறித்த அமைச்சின் செயலாளரை அழைத்த ஆளுநர் தொழிலாளியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளார். நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதால் விசாரணை முடிவடையும் வரை இடமாற்றத்தை இரத்துச் செய்ய செயலாளர் மறுத்திருந்த நிலையில் “தொழிலாளியின் இடமாற்றத்தை நீர் இரத்துச் செய்யாவிடின் நான் உம்மை இடமாற்றம் செய்து காட்டுகிறேன்” என ஆளுநர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே இன்று குறித்த செயலாளருக்கு இடமாற்ற கடிதம் வடக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த ஆளுநரது நியமனம் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் வழங்கப்பட்டிருந்ததோடு தனது பதவியேற்பின்போது ஜேவிபி கேட்டதால்தான் ஆளுநராக வருவதற்கு ஒத்துக்கொண்டேன். வேறு யாரும் கேட்டிருந்தால் நான் ஆளுநராக வந்திருக்கமாட்டேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனது தனிப்பட்ட வாகனத்தை துடைக்குமாறு கட்டாயப்படுத்துகிறாரா? ஆளுநரின் செயலாளர் .வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலனின் த...
21/11/2024

தனது தனிப்பட்ட வாகனத்தை துடைக்குமாறு கட்டாயப்படுத்துகிறாரா? ஆளுநரின் செயலாளர் .

வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலனின் தனிப்பட்ட வாகனத்தை ஆளுநர் செயலக சாரதி ஒருவர் துப்புரவு செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

ஆளுநரின் செயலாளர் அலுவலக வாகனத்தை பயன்படுத்தாமல் தனது தனிப்பட்ட வாகனத்துக்கான எரிபொருளை செயலகத்திலிருந்து பெற்று வரும் நிலையில் துப்புரவு செய்வதற்காக வாகன சாரதி ஒருவரை கட்டாயத்தின் பெயரில் துப்பரப்பானில் ஈடுபடுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆளுநர் செயலகத்தில் பிறிதொரு வாகனத்தின் சாரதியாக கடமையில் ஈடுபாடு ஒருவரை தனது தனிப்பட்ட வாகனத்தை துப்புரவு செய்யுமாறு பணிப்பது எவ்விதத்தில் நியாயம் என ஆளுநர் செயலக சாரதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல.. புத்தர் செய்யாததை செய்யப் பாக்கிறார்.. மறவன்புலவு சச்சிதானந்தம்....
10/11/2024

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல.. புத்தர் செய்யாததை செய்யப் பாக்கிறார்.. மறவன்புலவு சச்சிதானந்தம்.

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுமந்திரன் மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமற்றவர் என நான் ஆறு வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் கட்சிக்கும் அதனை தெரிவித்திருக்கிறேன்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த புத்தர் கூட மத மாற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டது இல்லை சுமந்திரன் மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.

சாவித்திரி சுமந்திரன் சுமந்திரனுடைய மனைவியின் இங்கிலாந்தில் இருந்து மதமாற்ற செயற்பாடுகளுக்காக டொலரில் பணம் வழங்கப்படுகிறது அதை அவர் பாராளுமன்ற கணக்கரைக்கைக்கு வழங்கியுள்ளார்.

சாவித்திரி சுமந்திரன் ஒரு கருவி மட்டுமே சுமந்திரன் தான் மதமாற்ற செயற்பாடுகளை முன் ஒன்று செயல்படுத்துகிறார்.

நாங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல மத மாற்றி களுக்கு எதிரானவர்கள் என பல்வேறு ஊடக சந்திப்புகளில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

மதமாற்றி களுக்கு எதிராக சைவத்தை பாதுகாப்பதற்காக சுயேச்சை குழுவாக இலக்கம் 14 ஆமை சின்னத்தில் சிவ தொண்டர்கள் ஒன்பது பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

4 இலட்சம் சைவ வாக்காளர்கள் உள்ள நிலையில் எமது இனத்தையும் மதத்தையும் காப்பாற்றுவதற்காக ஆமை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்ற நபர் அல்ல அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழ் மக்கள் இனமாகவும் மதமாகவும் அழிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்கு விலை போகாத தலைவர்களே தமிழ் மக்களுக்கு தேவை.. வேட்பாளர் சுரேன் தெரிவிப்பு.தமிழ் தேசியத்தை வாயளவில் பேசிக்கொண்டு தம...
10/11/2024

தெற்கு விலை போகாத தலைவர்களே தமிழ் மக்களுக்கு தேவை.. வேட்பாளர் சுரேன் தெரிவிப்பு.

தமிழ் தேசியத்தை வாயளவில் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை அடமானம் வைத்து அமைச்சுப் பதவியை பெறுவதற்கு சிலர் முயற்சி செய்து வரும் நிலையில் அந்த கும்பலை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் யாழ் தேர்தல் போட்டியிடும் பல சுயேச்சை குழுக்கள் மற்றும் தனியாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தெற்கு கட்சிகளுடன் இணக்கத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடக்கின்றன.

இவர்களால் தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வினை முன்வைக்க முடியாததோடு தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொறுத்தவரையில் கூட்டணியாக தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்து ஒற்றுமையுடன் ஓர் அணியில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் .

நாம் தமிழ் மக்களுக்கான தேசிய இன பிரச்சனையில் ஆன்றலிலிருந்து இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் பயணித்து வரும் நிலையில் தெற்குக்கு விலை போக மாட்டோம்.

சில விசமிகள் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்டயை பொறுக்க முடியாத நிலையில் பல்வேறு கதைகளை கூறி வருகிறார்கள்.

இவ்வாறு சங்க சின்னத்தை பெற்றமை தவறு எனக் கூறுபவர்கள் தெற்கு அரசியலை ஆதரிப்பவர்களாகவும் அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

சங்குச் சின்னம் தமிழ் மக்களுக்கான சின்னம் அதனை பெறுவதற்கு தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கிய நிலையில் அதனை நாம் பெற்றோம்.

ஆகவே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு தெற்கிலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களுக்காக விலை போகாத தலைவர்களை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பன் பருத்தித்துறை முறைகேடு.. வடமராட்சி அரசியல்வாதிக்கும் தொடர்பு.. ஊடகப் பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு. நல்லாட்சி ...
10/11/2024

அம்பன் பருத்தித்துறை முறைகேடு.. வடமராட்சி அரசியல்வாதிக்கும் தொடர்பு.. ஊடகப் பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட அம்மன் பருத்தித் துறை வீதி புனரமைப்பில் பாரிய முறைகேடுகளுடன் வடமராட்சி அரசியல்வாதி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐய்யாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யாழ் ஊடகாமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் நிழல் பிரதமராக இருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் பாம்பன் பருத்தித் துறை வீதி காப்பட் வீதியாகப் புணரமைக்ப்பட்ட போதும் இன்று வரை மக்கள் அதை பயன்படுத்த முடியாது அவதிக்குள்ளாகிய நிலை காணப்படுகிறது.

குறித்த வீதியானது சரியான முறையில் செப்பனிடப்படாத நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகைகள் முரணான வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சொன்னால் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது திட்டத்திற்காக ஒதுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதி பிடி பணமாக கழிக்கப்பட்ட பின்னரே எஞ்சிய நிதி திட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் குறித்த திட்டத்தில் அரசியல்வாதி ஒருவர் தனக்கான தரகுப் பணத்தை பெறுவதற்காக முறையற்ற விதத்தில் நிதிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அரச நிறுவனம் ஒன்று தொடர்புபட்டுள்ள நிலையில் சட்ட நீதியான ஆவணங்களை பரிசீலனை செய்து குறித்த வீதி புணரமைப்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே ஊழல் முறைகேடுகளை வெளிக் கொண்டு வரப் போகிறோம் என கூறிய ஆட்சி அமைத்த அரசாங்கம் அம்மன் பருத்தித் துறை வீதியில் இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்து முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதி தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

மக்கள் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை  சுமந்திரனுக்கு தேவை.. மிதிலை தெரிவிப்பு. தமிழ் மக்கள்  தமக்கான  அரசியல் தீர்...
10/11/2024

மக்கள் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை சுமந்திரனுக்கு தேவை.. மிதிலை தெரிவிப்பு.

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கலே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் ஊடகாமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் சுமந்திரன் தமிழ் மக்கள் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்திருந்தமை தொடர்பில் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் அமைச்சுப் பதவிகளை பெறுமாறு கேட்டதாக நாங்கள் அறியவில்லை.

நாங்களும் பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சென்ற நிலையில் மக்கள் தமது அரசியல் தீர்வை பெறுவதற்கு தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற கருத்தையே அதிகம் முன் வைக்கிறார்கள்.

சுமந்திரனுக்கு தெற்கு கட்சிகளுடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெறுவதற்கு விருப்பமாக உள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு விருப்பம் எனக் கூறி மக்களின் தலையில் பாவத்தை போடப் பார்க்கிறார்.

சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் என்ன செய்தார் என்பது பலருக்கு தெரியும் தானே முடிவை எடுத்துவிட்டு கட்சியின் மத்திய குழு முடிவு என பலதை தெரிவித்து இருக்கிறார்.

நான் தற்போது மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் பெண் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் எமது கட்சி மட்டுமே மாற்றத்தை உருவாக்கக்கூடிய வேட்பாளர்களை கொண்டுள்ளது.

மக்கள் மத்தியில் புதியவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்ற நிலைப்பாடு அனேகமானவர்களிடம் காணப்படும் நிலையில் எமது கட்சி மட்டுமே புதியவர்களை கொண்ட கட்சியாக காணப்படுகிறது.

ஆகவே தமிழ் மக்கள் அமைச்சுப் பதவிகளுக்கு விலை போனவர்கள் அல்ல அமைச்சுப் பதவி சுமந்திரனுக்கு தேவையாக இருந்தால் மக்களை அடகு வைக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Address

Jaffna

Telephone

+94776160256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil4 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil4 News:

Share