21/10/2025
சிந்திக்க சில வரிகள்.
ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, அவர் உட்கார வேண்டிய நாற்காலி வகுப்பறை கூரையில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கரும்பலகையில் சென்று இப்படி எழுதினார்.
இன்றைய பரீட்சை - 15 நிமிடங்கள்நடைபெறும் அதற்காக 30 புள்ளிகள் வளங்கப்படும்.
வினா 1. நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் -1 புள்ளி √.
வினா 2. நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிட்டு, உங்கள் செயல்பாடுகளைக் காட்டுங்கள் -1 புள்ளி √.
வினா 3. நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும்,அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள்~28 புள்ளி √.😁