Sivapoomi News Paper

Sivapoomi News Paper சிவபூமியால் மாதாந்தம் வெளிவரும் சிவபூமி பத்திரிகையின் சில செய்திகளை முகநூல் ஊடாக பகிர்தல்

இணுவில் அறிவாலயத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில்.....
12/03/2026

இணுவில் அறிவாலயத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில்.....

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா - 2026எண்ணெய்க்காப்பு - 29.03.2026 முதல் 30.03.2026 வரை( காலை ...
12/03/2026

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா - 2026

எண்ணெய்க்காப்பு - 29.03.2026 முதல் 30.03.2026 வரை( காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை)

மஹா கும்பாபிஷேகம் - 01.04.2026 காலை 9.50 - 11.00 மணி வரையிலான சுப நேரத்தில் நடைபெறும்.

21/02/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியநிபுணர் சி.ர...
07/02/2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியநிபுணர் சி.ரகுராமன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவமானி மற்றும் சத்திரசிகிச்சை மானிப் பட்டத்தைப் பெற்று அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின மருத்துவப் பட்டப்பின் கற்கைகளுக்கான நிறுவனத்தில் மருத்துவக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர்.

இங்கிலாந்தில் வெளிநாட்டுப் பயிற்சியை நிறைவுசெய்ததன் மூலம் தகமைபெற்ற மகப்பேற்றியல் வைத்திய நிபுணராக அங்கீகரிக்கப்பட்ட இவர் கற்பித்தலில் நாட்டம் கொண்டு மருத்துவபீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

பேராசிரியர் ரகுராமன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சிலலிங்கராஜா மற்றும் ஆசிரியை சரஸ்வதி தம்பதிகளின் ஏக புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை இணைத்துள்ள இவர் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையில் கருவளச் சிகிச்சை மையம் ஒன்றை நிர்வகித்துவ வருவது அவரது சமூகப் பங்களிப்புக்கு காத்திரமான அடையாளம்.
வாழ்த்துக்கள்.

தகவல் இ. சர்வேஸ்வரா

கண்டி கலஹா சிவபூமி ஆச்சிரமம்3வது ஆண்டு  விழா24-1-2026லண்டன் அபயம் அறக்கட்டளையின் பேருதவியில் பின்வரும் பணிகள சிறப்பாக நட...
24/01/2026

கண்டி கலஹா சிவபூமி ஆச்சிரமம்
3வது ஆண்டு விழா24-1-2026
லண்டன் அபயம் அறக்கட்டளையின் பேருதவியில் பின்வரும் பணிகள சிறப்பாக நடைபெற்று வருகிறது.

1.சிவபூமி அறநெறிப்படசாலை
124 மாணவர்கள்
2.இலவச வகுப்புகள்.தரம்9,10,11
167மாணவர்கள்
3.அபயம் இலவச மருத்துவ நிலையம்
பலநூறு பேர் பயன் பெறுகிறார்கள்.

சிவபூமி மயிலிட்டி கந்தபுராண ஆச்சிரம கந்தவேல் பெருமான் உண்மையில் அழகு என்றால் முருகன்தானோ எம்பெருமானே உன்னை காண கண் கோடி ...
21/01/2026

சிவபூமி மயிலிட்டி கந்தபுராண ஆச்சிரம கந்தவேல் பெருமான்

உண்மையில் அழகு என்றால் முருகன்தானோ எம்பெருமானே உன்னை காண கண் கோடி வேண்டும்.

சிவபூமி மூலிகைத் தோட்டம்,நாவற்குழிநூறு நெல்லிமரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்.ஏற்கனவே சுமார் இருபது நெல்லிமரங்கள் ...
28/12/2025

சிவபூமி மூலிகைத் தோட்டம்,நாவற்குழி

நூறு நெல்லிமரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்.ஏற்கனவே சுமார் இருபது நெல்லிமரங்கள் பயன்தருகின்றன.

Address

Kondavil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Sivapoomi News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivapoomi News Paper:

Share

Category