Tamizha Media

Tamizha Media உங்கள் நம்பகமான முதன்மை தமிழ் செய்தித்தளம்

*சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்*தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகால...
03/08/2025

*சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்*

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பது குறித்து சபாநாயகருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டலை அனுப்பியுள்ளது.

இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு முழுமையாக செயற்படத் தேவையான தலைவர் ஒருவரை பரிந்துரைக்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு பேரவையின்மீது, பொதுமக்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த விடயம் கையாளப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இவ்வருட ஆரம்பத்தில் பதவி விலகியதில் இருந்து இதுவரை அந்தப் பதவியை நிரப்ப எந்த நியமனமும் செய்யப்படவில்லை.

எனவே தலைவர் இல்லாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடினமாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?அம்பகமுவ பிர­தேச சபை மற்­றும் நாவ­லப்­பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்க...
03/08/2025

ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?

அம்பகமுவ பிர­தேச சபை மற்­றும் நாவ­லப்­பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்­புல்­பிட்டி , மெத­கா­வ­து­­ர பிரதேசத்துக்கு பெயிலி வீதி­­யூ­டாக செல்லும் மகா­வலி ஆற்றைக் கடக்கும் 150 மீற்றர் தூரம் கொண்­ட பாலம் இன்­னை­மையால் அப்­பி­ர­தே­சத்­திற்கு செல்லும் மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து மகா­வலி ஆற்றைக் கடந்து 5 நிமி­டத்தில் நாவ­லப்­பிட்டி பெயிலி வீதி ஊடாக பிர­தான நகரை வந்தடைய முடியும்.

மகா­வலி ஆற்றைக் கடக்க பல ஆண்­டு­க­ளுக்கு முன் நிர்­மா­ணிக்கப்­பட்ட பாலம் , வெள்ளம் கார­ண­மாக அடித்துச் செல்­லப்­பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில் , நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பையால் ‘ஆட்­டுப்­பாலம்’ நிர்­மா­ணிக்­­கப்­பட்­டது.
எனினும், வெள்ளம் கார­ண­மாக அதுவும் சேத­ம­டைந்தது.

எனவே தினமும் தொழில் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கா­கவும் பாட­சாலை மாண­வர்­களின் நன்மை கருதி தற்­கா­லி­க­மாக மூங்­கிலால் செய்­யப்­பட்ட படகு மூலமே தற்­போது அப்­பி­ர­தேச மக்கள் ஆற்றை பாரிய ஆபத்­திற்கு மத்­தியில் தினமும் கடந்து வரு­கின்­றனர்.

குறிப்­பிட்ட பிரசே வாசிகளால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இந்த மூக்­கிலால் செய்­யப்­பட்ட படகில் 150 மீற்றர் ஆற்றைக் கடந்து பய­ணிக்க 20 ரூபா வரை கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது.

வந்து செல்ல சாதா­ர­ண­மாக நாள் ஒன்­றுக்கு 40 ரூபா ஒரு­வ­ருக்கு தேவைப்­ப­டு­கின்­றது. மாத­மொன்­றுக்கு 1200 ரூபா நபர் ஒரு­வ­ருக்கு தேவைப்­ப­ட­கி­றது. ஒரு குடும்­பத்தில் சாதா­ர­ண­மாக 4 பேர் பய­ணிப்­ப­வர்கள் எனின் மாத­மொன்­றுக்கு 4800 ரூபா வரை ஆற்றைக் கடக்க செல­வ­ளிக்க வேண்­டி­­யுள்­ளது.

மேலும் மழை காலங்­களில் கடும் வெள்ளம் ஏற்­பட்டால் ஆற்றைக் கடப்­பது அபாய­க­ர­மாக பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

வி. தீபன்ராஜ்

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்" - பெண்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறையில்.!போதைப்பொருள் பயன்பாடு...
03/08/2025

இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்" - பெண்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு
சம்மாந்துறையில்.!

போதைப்பொருள் பயன்பாடு சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பெண்களினூடாக மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்குடன், சம்மாந்துறை சமத்துவ மக்கள் அமைப்பு ஒரு சிறப்பு விழிப்புணர்வு மாநாட்டை ஏற்பாடு செய்தது.

"இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் அப்துல் ஹமீத் (ஷரயீ) அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாட்டில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், சம்மாந்துறை உதவி பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் சத்தார் மிர்ஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சமத்துவ மக்கள் அமைப்பு மற்றும் அழ்பர் ஜும்மாஹ் பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு சம்மாந்துறையில் நடைபெற்றது.

இப்படியான சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, நமது எதிர்கால சமூகத்தை பாதுகாக்கவும் உதவும்.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைதுஹட்டன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் மீது திரவப் பொ...
03/08/2025

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது

ஹட்டன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் மீது திரவப் பொருள் ஒன்றைத் தெளித்து மயக்கமடையச் செய்ய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) மாலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. நகைக்கடைக்கு வந்த குறித்த பெண், உரிமையாளரின் முகத்தில் ஒரு திரவத்தைத் தெளித்து அவரை மயக்கமடையச் செய்ய முயன்றுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட ஹட்டன் பொலிஸார், சந்தேகநபரை குறுகிய நேரத்தில் கைது செய்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்தப் பெண் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

மட்டக்களப்பு கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்புமட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் த...
03/08/2025

மட்டக்களப்பு கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு (ஆகஸ்ட் 1) மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி பிரியந்த பண்டார உறுதிப்படுத்தினார்.

லயன்ஸ் கிளப் வீதியில் புதிய வீடு கட்டப்பட்டு வந்த ஒரு காணியில் இரவு 10 மணியளவில் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. குளியலறை குழியை தோண்டும் போது, பணியாளர்கள் மண்ணுக்குள் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த ஒரு பொதியை கண்டெடுத்துள்ளனர். அதில் துப்பாக்கி இருப்பதை அவதானித்த அவர்கள் உடனடியாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், அங்கு புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி, 50 தோட்டாக்கள் மற்றும் இரண்டு சஞ்சிகைகளை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டு வருகிறது.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்புமுன்ன...
03/08/2025

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) அரசியல் குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுமந்திரன், தனது விருப்பத்தை கட்சிக்கு முறையாக தெரிவிப்பேன் என்றும், ஆனால் தனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் வலியுறுத்தினார்.

தன்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு தான் முழுமையாக கட்டுப்படுவேன் என்றும், அந்த நபருக்கு ஆதரவளிப்பேன் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த சுமந்திரன், பின்னர் 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 58,043 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எனினும், 2020 தேர்தலில் அவரது வாக்கு எண்ணிக்கை 27,834 ஆக குறைந்தபோதிலும், அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 2024 பொதுத் தேர்தலில் அவர் 15,039 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார், இது அவரது அரசியல் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாக கருதப்படுகிறது.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ப...
02/08/2025

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம்.

சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று (ஆக.2) மாலை சிகிச்சை பலனின்றி மருத்துமவனையில் காலமானார்.

மதன் பாபு என்ற பெயரை ‘வானமே எல்லை’ படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர்.

இவரது இயற்பெயர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி. முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார். தமிழில் 150-க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். இவரது வித்தியாசமான சிரிப்பு மிகவும் பிரபலம். சன் தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றிய ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதனைப் பின்பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ஃபிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதன் பாப் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நடிகர் மதன்பாப் (எ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்த் திரையுலகில் பட இசையமைப்பாளராக தொடங்கி பின்னர் இயக்குநர் இமயம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘வானமே எல்லை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகானவர்.

சிறந்த நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, வித்தியாசமான முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பன்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இவருடைய புதுமையான சிரிப்பு தமிழ்திரையுலகில் பேசுபொருளாகியது. திரையுலகமும், தொலைக்காட்சியும் இழந்த பன்முக திறமையாளர். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகுக்கும், சின்னத்திரையுலகத்துக்கும் பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

காசாவில் பட்டினியால் 17 வயது இளைஞன் உயிரிழப்பு: உடல் எடை 70 கிலோவிலிருந்து 25 கிலோவாக குறைந்ததுஇஸ்ரேலின் தொடர் முற்றுகைய...
02/08/2025

காசாவில் பட்டினியால் 17 வயது இளைஞன் உயிரிழப்பு: உடல் எடை 70 கிலோவிலிருந்து 25 கிலோவாக குறைந்தது

இஸ்ரேலின் தொடர் முற்றுகையால், காசாவில் மக்கள் உணவுக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 17 வயது இளைஞரான அத்தீப் அபு காத்திர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரங்கள் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலின்படி, அத்தீப் அபு காத்திர் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். இறக்கும் போது, அவரது எடை 70 கிலோவிலிருந்து வெறும் 25 கிலோவாக குறைந்துவிட்டது என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இது தோராயமாக ஒரு ஒன்பது வயது குழந்தையின் எடைக்கு சமம்.

“அவர் ஒரு காலத்தில் உள்ளூர் விளையாட்டு வீரராக இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்களும், அவரை அறிந்தவர்களும் கூறுகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை குறைந்து, இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்,” என்று அவரின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த 17 வயது இளைஞர் அத்தீப் அபு காத்தரின் மரணம், காசாவில் அதிகரித்து வரும் துயரத்தின் ஒரு பகுதியாகும். அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

காசா சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, அக்டோபர் 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 169 பாலஸ்தீனியர்கள், இதில் 93 குழந்தைகள் உட்பட, பட்டினியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் உயிரிழந்துள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள், முற்றுகையிடப்பட்ட பகுதியில் உருவாகி வரும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றன.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

பிரபல தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்! சூரியனின் அஞ்சலி.அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற ...
02/08/2025

பிரபல தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்!
சூரியனின் அஞ்சலி.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

காசாவுக்கு தினமும் 800 உணவு லொறிகள் தேவை. தற்போது அனுமதிக்கப்படுவதோ 70. இதிலும் சிலதை நாசகாரக் கூட்டங்கள் கொள்ளையிடுகின்...
02/08/2025

காசாவுக்கு தினமும் 800 உணவு லொறிகள் தேவை. தற்போது அனுமதிக்கப்படுவதோ 70. இதிலும் சிலதை நாசகாரக் கூட்டங்கள் கொள்ளையிடுகின்றன. மக்கள் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். பசியால் இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். இந்த படங்கள் காசாவின் பெண்கள், குழந்தைகள் உணவுக்காக இன்று (02) காத்திருக்கும் காட்சிகள்

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு “உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் ப...
02/08/2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு “உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் பங்கு” எனும் தலைப்பில் மட்டக்களப்பு சர்வோதய அபிவிருத்தி கல்வி மையத்தில் இன்று (2) ஆரம்பமானது.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக  மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா ...
02/08/2025

டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும்போது அவர்களை கண்காணிப்பது மிகவும் முக்கியம். டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் முறைப்பாடுகள் பெறப்பட்டது. சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாங்கள் காண்கிறோம். இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர்.

டிக் டாக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இந்த குழுக்கள் சில சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும்போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும். மேலும் சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். உங்கள் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வேலைவாய்ப்புத்தகவல்களையும் மற்றும் பிற சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

🪀 *News WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VaMpR5U1Hspu6AiQCF43

🪀 *Job & Edu WhatsApp Channel:* https://whatsapp.com/channel/0029VbAhJvZL7UVMhlSRIh0E

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Tamizha.lk
Tamizha Media

*உங்கள் விளம்பர தேவைகளுக்கு*
+94767778566

#தமிழா

Address

Neervely
Jaffna
40000

Telephone

+94764881117

Alerts

Be the first to know and let us send you an email when Tamizha Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share