
25/03/2025
ஒரு சீரியல் நடிகையோட ஆபாச படம் வந்துருக்குனு சோசியல் மீடியால குதூகலத்தோட கொண்டாடி தீக்குறானுக...
புள்ளி வைக்குறதுல சில பொண்ணுங்க கூட பாரபட்சம் பாக்குறதில்ல...அந்த மாதிரி பதிவுகள் ல்ல சிரிச்சு வச்சு நாங்களும் சோசலிசம் ன்னு காட்டிக்க அவ்ளோ தன்முனைப்பு எல்லாருக்கும்...
அவதான தப்பு பண்ணா, நாங்களா அப்யூஸ் பண்ணோம்? வீடியோ வந்தா ரிலீஸ் தான் பண்ணுவோம்னு ஒரு குரூப்பு வேற குறுக்க மறுக்க ஓடுது...
அவ வீடியோ எடுத்து உனக்கா அனுப்புனா? அவள அசிங்க படுத்த
ஒருத்தன் அத வெளியிட்ருக்கான்...அத அசிங்கம் ன்னு நினைச்சு கூட பாக்காம ஓராயிரம் பேர் ஷேர் பண்றான்...
புள்ளி வீடியோவ ஷேர் பண்றதால ஃபாலோயர்ஸ் ஏறும்னு நினைச்சு, புள்ளி வைங்க வீடியோ அனுப்புறேனு சொல்றதும் ஒருவகை ஆன்லைன் விபச்சாரம் தானே...
ஒன்னு புரியவே இல்ல...ஒரு வீடியோ பாத்துதான் மூட் வரணும்னா லட்சோப லட்சம் வீடியோஸ் கொட்டி கிடக்குதே .... அத பாத்தும் காமம் தணியலையா??செலிபிரட்டியோ, இல்ல சோசியல் மீடியால தெரிஞ்ச பொண்ணோட வீடியோவோ எவனோ ஒரு கேவலங்கெட்ட ஜென்மத்தால வெளியிடப்பட்டா அத்தனை காமக்கொடூரனுக்கும் திருவிழா எஃபெக்ட் வந்துருது...
பறக்க விடுறானுக...புள்ளி வை ன்றானுக... ஸ்டோரி போடுறானுக...வயசு வித்யாசம் இல்லாம அவன் பிள்ளை வயசு உள்ள பொண்ணோட வீடியோவையும் யாராவது அனுப்புங்களேன்னு பதிவே போடுறானுக...
12 வயசு பெண்குழந்தைய பாலியல் வன்கொடுமை பண்ணி வீடியோ எடுத்த குற்றவாளி கைது ன்னு சொன்னா அவன தூக்குல போடுங்கனு பதிவு செய்யுற அதே ஆள்தான், அந்த வீடியோ லிங்க் சுத்துதுன்னா அப்படி என்னதான் இருக்குனு பாக்க ஓடுறான்...
இவனுகளுக்கு பாரபட்சம் லாம் இல்ல... மூடாகணும்னு முடிவு பண்ணிட்டா மூளை சாணியா போயிருது இவனுகளுக்கு...
ஒரு செலிப்ரட்டியோட அந்தரங்கத்தை பாத்துட்டா அதிகபட்சமா என்னடா பண்ணிட முடியும்??
ரெண்டு டைம் சுய இன்பம் அடைவிங்களா?? அடுத்ததா என்ன பண்ணுவிங்க??
அத பாத்து உனக்கு தெரிஞ்ச இன்னும் பத்து பேர் சுயஇன்பம் அடையணும்னு அவனுகளுக்கு அனுப்புவிங்க...
50 ரூபாய் வாங்கிட்டு வாய் போடுற பஸ் ஸ்டாண்ட் பாலியல் தொழில் பண்றதுங்களுக்கும், ஃபாலோயர் அதிகமாகும்னு புள்ளி வச்சா வீடியோ வரும், நீங்க சுய இன்பம் அடையலாம்னு மத்தவன் பாலுறுப்பை தூண்டி ஆர்கஸம் அடையுறவனுக்கும் என்ன பெரிய வித்யாசம்???
அவ பாலியல் தொழில் பண்றவளா கூட இருக்கட்டும்டா...அவள அசிங்க படுத்த வீடியோ விட்டவன விட அத எந்த குற்ற உணர்வும் இல்லாம பதிவு போட்டு ஷேர் பண்றவன் கேடு கெட்டவன்...
மொபைல் ங்குற அதிநவீன அரக்கன் நீ பேசுற அத்தனையும் ஒட்டு கேட்டுட்டு தான் இருக்கு...
உனக்கான அந்தரங்கங்களும் கேமரா ஆன் பண்ணாமலே கூட ரெக்கார்ட் ஆகிட்டுதான் இருக்கும்...உன் வீட்ல உள்ளவங்களையும் நினைச்சு பாரு...
ஒழுக்கத்தின் உச்சகட்டத்தில் உள்ள யோக்கியன் லாம் அந்த பொண்ணு தப்பானவதானன்னு சர்டிபிகேட் கொடுக்க வர்றானுக...பிட்டு படம் பாத்து கையடிக்குற நா ய் க்கு பேச்ச பாத்தியான்னு கேக்க தோணுது...ஆனா நாகரீகமா இருக்காது ....
காலம் ஒருநாள் உங்களையும் கன்டென்ட் ஆக்கும்...
கர்மா is பூமராங்